Published:Updated:

i Series 1

i Series 1

>>சார்லஸ்

i Series 1

பிஎல் கிரிக்கெட்டுக்குப் போட்டியாக, ஜனவரி 7-ம் தேதி முதல் ஆரம்பமாக இருக்கிறது இந்தியன் ரேஸிங் லீக். 'ஐ ஒன் சூப்பர் சீரிஸ்’ எனப் பெயரிடப்பட்டு இருக்கும் இந்த ரேஸ் போட்டிக்கு, ஐபிஎல் போலவே கிளாமர் குவிகிறது. மும்பை அணியை நடிகர் ஷாரூக்கானும், ஜுஹி சாவ்லாவும் வாங்கி இருக்கிறார்கள். அதேபோல், ஐதராபாத் அணியை நடிகர் நாகார்ஜுனா வாங்கியிருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மொத்தம் ஒன்பது அணிகள், ஒரு அணிக்கு இரண்டு ரேஸ் வீரர்கள் என மொத்தம் 18 ரேஸ் வீரர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். முதல் ரேஸ் அபுதாபியிலும், அதனைத் தொடர்ந்து மலேசியா, பஹ்ரைன், கத்தார், டெல்லி என அடுத்தடுத்த ரேஸ் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. மொத்தம் 14 ரேஸ்களாக நடைபெற இருக்கும் இந்தப் போட்டியில், வெற்றி பெறும் வீரருக்கு 10 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட இருக்கிறது!

சச்சின் டெண்டுல்கரை பிராண்ட் அம்பாசடராகக் கொண்டு ஆரம்பமாக இருக்கும் 'ஐ ஒன் சூப்பர் சீரிஸ்’ கார் ரேஸ் போட்டிக்கான சென்னை அணியின் பெயர், 'சென்னை சூப்பர் சானிக்ஸ்!’ இண்ட் பாரத் பவர் இன்ஃப்ரா எனும் நிறுவனத்தின் தலைவரான ரகு ராமகிருஷ்ண ராஜூதான் சென்னை அணியின் ஓனர். ஒரு அணிக்கு ஒரு உள்நாட்டு வீரர், ஒரு வெளிநாட்டு வீரர் இடம் பெறுவார்கள். தமிழகத்தைச் சேர்ந்த ஃபார்முலா-1 ரேஸ் வீரர்கள் நரேன் கார்த்திகேயனும், கரூண் சந்தோக்கும் இந்த ரேஸ் போட்டியில் வெளிநாட்டு வீரர்களாகக் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

எல்லா ரேஸ் வீரர்களும் 1500 சிசி திறன், 260 bhp சக்தி கொண்ட காரில்தான் மோத இருக்கிறார்கள். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ், 570 கிலோ எடை கொண்ட இந்த சிங்கிள் சீட்டர் ரேஸ் கார், அதிகபட்சமாக மணிக்கு 250 கி.மீ வேகத்தைத் தாண்டும் என்கிறது 'ஐ ஒன் சூப்பர் சீரிஸ் ரேஸ்’ போட்டியை நடத்தும் 'மச்தார் மோட்டார் ஸ்போர்ட்ஸ்’ நிறுவனம்.

இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும் முன், எல்லா அணிகளுக்கும் ரேஸ் வீரர்கள் உறுதி செய்யப்பட்டு இருப்பார்கள்.

'ஐ ஒன் சூப்பர் சீரிஸ்’ போட்டியைத் தொடர்ந்து 'ஐ ஒன் சூப்பர் பைக் சீரிஸ்’, 'ஐ ஒன் சூப்பர் ஹேட்ச் சீரிஸ்’ ரேஸ் போட்டிகளையும் நடத்தத் திட்டமிட்டு இருக்கிறது மச்தார் மோட்டார் ஸ்போர்ட்ஸ்!