கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
மோட்டார் நியூஸ்

அப்-டு-டேட் செய்திகளுக்கு... motor.vikatan.com

மோட்டார் நியூஸ்

தண்ணீர் தங்காத டயர்!

குட்இயர் டயர் நிறுவனம் தற்போது இந்தியாவில் தனது இரண்டாம் தலைமுறை Assurance TripleMax 2 டயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 10 சைஸ்களில் (14,15,16 இன்ச்) - 4,000 முதல் 7,000 ரூபாய் வரை இந்த டயர்களின் விலைகள் உள்ளன. இந்த டயரில் குட்இயரின் பிரத்யேகமான HydroTred தொழில்நுட்பம் உள்ளது. டயரின் டிரெட் பேட்டர்ன் சீராக இல்லாததுபோல் வடிவமைத்திருக்கிறார்கள். இதனால் ஈரமான சாலையில் போகும்போது, தண்ணீர் டயரில் அதிக நேரம் தங்காது. இதனால் மழைக் காலங்களில் அதிக ரோடு கிரிப் கிடைக்கும் என்கிறது குட் இயர். இந்த Assurance TripleMax 2 டயர்கள், நவம்பர் மாதத்துக்குள்  கடைகளிலும் கிடைக்கும்.

மோட்டார் நியூஸ்

இத்தாலி டிசைனில் இந்திய லாரி!

மூன்று சக்கர ஆல்ஃபா ஆட்டோ முதல் 49 டன் பிளாஸோ டிரக் வரை கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையில் பரவலாக இருந்தாலும், மஹிந்திராவிடம் 6.5 டன் முதல் 16 டன்  கமர்ஷியல் வாகனம் இல்லை. இந்தக் குறையை தீர்க்கத்தான் தற்போது ப்யூரியோ எனும் புதிய டிரக்கை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதை மஹிந்திராவுக்குச் சொந்தமான இத்தாலியின் PininFarina நிறுவனம் வடிவமைத்திருக்கிறது.

Modular சேஸி, 5 விதமான இன்ஜின், ஃப்யூல் ஸ்மார்ட் டெக்னாலஜி, 21 மாடல்கள், Wind Tunnel டெஸ்ட் எனப் பெரிய ஹைப் கிளப்பினாலும், இந்த செக்மென்ட்டில் ப்யூரியோவின் என்ட்ரி ரொம்பவே லேட். இந்த பலவீனத்தைப் பலமாக்க PininFarina-வின் டிசைன் உதவுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.

மோட்டார் நியூஸ்

தமிழ்நாட்டின் பெரிய ஜாகுவார் ஷோரூம்!

ஜாகுவார் லேண்ட்ரோவர், சென்னை பூந்தமல்லியில் தனது இரண்
டாவது ஷோரூமைத் திறந்துள்ளது. சேல்ஸ், சர்வீஸ், ஸ்பேர் என எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்கும் ஜாகுவாரின் 3S ஷோரூம் இது. இனி ஸ்பேர்களை ஆர்டர் செய்து காத்திருக்க வேண்டிய அவசியமில்லையாம். புது ஷோரூமில் 17 சர்வீஸ்-பேக்கள் இருப்பதால், சர்வீஸ் நேரமும் குறையும் என்கிறார்கள். புதிதாகத் திறக்கப்பட்டுள்ள இந்த ஷோரூம்தான், தமிழ்நாட்டில் இருக்கும் ஜாகுவாரின் பெரிய ஷோரூம். இந்தியாவில் ஜாகுவாருக்கு 27 ஷோரூம்கள் இருக்கின்றன.

மோட்டார் நியூஸ்