Published:Updated:

ஈரோட்டில் அமெரிக்கன் ஜீப்!

ஈரோட்டில் அமெரிக்கன் ஜீப்!

ச.ஆ.பாரதி  க.தனசேகரன்

 ##~##

ரோடு நகரில் உலவும் அந்த வாகனத்தைப் பார்ப்பவர்கள், 'அட...பெட்ரோல் பங்க் முருகேசன் ஜீப்’ என்று எளிதாக அடையாளம் கண்டு கொள்கிறார்கள். ஒரு வாகனம், தனி ஒரு மனிதனின் அடையாளமாக மாறுவது அபூர்வமாகத்தான் நிகழும். அப்படிப்பட்ட வாகனம் இந்த 'லோ பானெட்’ ஜீப்! இரண்டாம் உலகப் போரில் பங்கு கொண்ட இந்த அமெரிக்க ஜீப்புகளுக்கு, உலகெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஃபோர்டு மற்றும் வில்லீஸ் ஆகிய நிறுவனங்கள்தான் இந்த வகை ஜீப்புகளை அப்போது அமெரிக்க ராணுவத்துக்குத் தயாரித்து அளித்தன. இன்றைக்கு இந்த ஜீப்புகள் உலக நாடுகளில் எல்லா இடங்களுக்கும் சென்றுவிட்டன. தோற்றத்தில் மட்டுமல்லாமல், உழைப்பிலும்  தனக்கென ஓர் தனி இடத்தைப் பிடித்தது இந்த வகை ஜீப். அப்படிப்பட்ட இந்த ஜீப்பை, கடந்த 18 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறார் ஈரோட்டைச் சேர்ந்த முருகேசன். பெட்ரோல் பங்க், விவசாயம் என பல தொழில்கள் இருந்தாலும், அவருடைய அடையாளமே இந்த ஜீப்தான் என்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஈரோட்டில் அமெரிக்கன் ஜீப்!

 அமெரிக்க ஜீப், ஈரோட்டில் உலவும் கதையை முருகேசனிடம் கேட்டோம். ''அட்வென்சர் டிரிப்ல

ஈரோட்டில் அமெரிக்கன் ஜீப்!

எனக்கு அதிகமான ஆர்வம் உண்டு. அதுக்குத் தகுந்த மாதிரி  இருக்கணும்னு தேடிப் பிடிச்சு பொள்ளாச்சியில ஒருத்தர்கிட்ட இந்த ஜீப்பை 15 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினேன். நான் வாங்கிய சமயம் ஜீப் பராமரிப்பு இல்லாம, துருப்பிடிச்சு இருந்தது. வொர்க் ஷாப்ல வெச்சு முழுசா தயார் பண்ணினேன். 1942-ம் வருடத் தயாரிப்பான இந்த ஜீப்பை, இன்னைக்கு வரைக்கும் ஒரிஜினாலிட்டி மாறாம மெயின்டெய்ன் பண்றேன்.

எங்கிட்ட மிட்சுபிஷி லான்ஸர் இருந்தாலும், அதிகமா பயன்படுத்துறது இந்த ஜீப்பைத்தான். இங்க சுத்துப்பட்டுல இருக்கிற எல்லா மலையிலும் இந்த ஜீப் ஏறி இறங்கிடுச்சு. ஒரு தடவை அட்வென்சர் ட்ரிப்புக்காக கொடைக்கானலுக்கு நண்பர்களோட போயிருந்தோம். நல்ல மழை. மலைப் பாதையில ஏறிக்கிட்டு இருக்கும் போது, திடீர்னு நிலச் சரிவு ஏற்பட்டுச்சு! கூட வந்தவங்க, 'வேண்டாம், திரும்பிப் போயிடலாம்’னு சொன்னாங்க. இருந்தாலும் இந்த ஜீப் மேல நம்பிக்கை வெச்சு, சரிஞ்ச மண் மேல ஏறிப் போனேன். எந்தச் சிரமமும் இல்லாம மண் சரிவுல இருந்து வெளியே வந்துடுச்சு! அன்றைய தேதியிலிருந்து என் ஜீப் மேல எனக்குத் தனி மரியாதையே வந்துடுச்சு!

ஈரோட்டில் அமெரிக்கன் ஜீப்!

ஜீப்புல இருக்கிற ஒவ்வொரு பாகத்தையும் பொக்கிஷமா பாதுகாக்கிறேன். துப்பாக்கி மாட்டுறதுக்கு ரைஃபிள் கேப், டெம்பரேச்சர் மீட்டர்... இப்படி பல வசதிகள் இருந்தாலும், இந்த ஜீப்ல 360 டிகிரியில சுழலக் கூடிய விளக்கு இருக்கு. இதில் ஏற்கெனவே இருந்த பெட்ரோல் இன்ஜினை மட்டும் எடுத்துட்டு, மிsuக்ஷ்u டீசல் இன்ஜின் மாட்டி இருக்கேன். இது வரைக்கும் பல லட்சங்கள் செலவானாலும், ஒரிஜினாலிட்டி மாறக் கூடாதுங்கிறதால வேற எந்த விஷயத்திலும் நான் கை வைக்கல!  லிட்டருக்கு 14 கி.மீ தருது. சினிமா படப்பிடிப்புக்கெல்லாம்கூட இந்த ஜீப் போய் வந்திருக்குது!'' என்று தன் ஜீப் பற்றிப் பெருமிதமாகச் சொல்கிறார் முருகேசன்!