Published:Updated:

கலர்ஸ் சைக்காலஜி!

கலர்ஸ் சைக்காலஜி!
பிரீமியம் ஸ்டோரி
கலர்ஸ் சைக்காலஜி!

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 8க.சத்தியசீலன்

கலர்ஸ் சைக்காலஜி!

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 8க.சத்தியசீலன்

Published:Updated:
கலர்ஸ் சைக்காலஜி!
பிரீமியம் ஸ்டோரி
கலர்ஸ் சைக்காலஜி!

வாழ்வியலை வளமையாக்கும் வடிவமைப்பியலின் மூலமண்டபத்தின்  தூண்களில் ஒன்று, நிறம்!  

கலர் டிசைனர்கள் வடித்தெடுத்த ‘ஷேட்'களை, சிந்தாமல் சிதறாமல் பல பயன்களுக்கும் கொண்டுசேர்க்க ‘PANTONE SHADE' போன்ற நிறுவனங்கள், ஒவ்வோர் ஆண்டும் ‘Color Forecast' என்கிற வண்ண ‘வானிலை’ அறிக்கையைத் தயார் செய்து வெளியிடுகின்றன. உதாரணமாக, 2022-ன் கோடைக்காலத்தின் வண்ணங்கள் - அவற்றின் ‘color code'களை இப்போதே இணையத்தில் தேடி எடுக்க முடியும். கலர் பரிமாற்றம் ‘RGB' ‘CMYK' என்னும் இரண்டு ‘Format'களில் புரிந்து கொள்ளப்படுகிறது. ‘CMYK' Format எழுத்துலகில் பிரபலம்.

நாம்  நம் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும், பிறரிடமிருந்து புரிந்து கொள்ளவும்  நிறங்கள் மறைமுகமாக உதவி செய்கின்றன.

கலர்ஸ் சைக்காலஜி!

போக்குவரத்து சிக்னலில் சிவப்பு நிறம் ஒளிரும்போது நாம் வாகனத்தை நிறுத்தி விடுகிறோம். நீல நிறக் கோப்பையில் ஊற்றிக் குடிக்கும் தேநீர், ஆரஞ்சு நிறக் கோப்பையில் குடிப்பதைவிட சூடு குறைவாகவே உணரப்படுகிறது.

இளைஞர்களைக் குறிவைத்து புதிய புதிய ‘கலர் ஹேர் டை'கள் வந்துகொண்டே இருக்கின்றன. நமது வீட்டின் சுவருக்கான வண்ணங்களை நாமே கணினியின் உதவியுடன் தேர்ந்தெடுக்க பெயின்ட் நிறுவனங்கள் வழிசெய்துவிட்டன.

கலர்ஸ் சைக்காலஜி!


சில குறிப்பிட்ட வண்ணங்களுக்கு நோய் தீர்க்கும் ஆற்றல் உண்டு. உதாரணமாக,  நீல நிறம் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தைச் சரிசெய்யும்.  வயலெட் நிறமோ நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும். ஒற்றைத் தலைவலி வந்தால், சிவப்பு வண்ணத்தை  இரு கண்களாலும் தொடர்ந்து பாருங்கள் . அல்லது சிவப்பு நிற விளக்கொளியில் சிறிது நேரம் தூங்கலாம். மருந்து மாத்திரைகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இப்போது நிறங்களை நல்ல துணையாகக் கொள்கின்றன. தூக்க மாத்திரைகள் நீல நிறத்தில் வருவது சாலப்பொருத்தம்.

பல நிறுவனங்கள், தங்கள் பெயரிலேயே நிறங்களைக் கொண்டிருப்பதன் மூலம் தாங்கள் யார் என்பதையும், தங்கள் நோக்கம் என்ன என்பதையும் தெளிவாக எடுத்துச் சொல்லிவிடுகின்றன. ரத்தச் சேகரிப்பு மற்றும் போர் வீரர் மருத்துவ உதவிதான் தன் நோக்கம் என்பதை அதன் சிவந்த நிறமும் பெயரும் சொல்லிவிடுகிறது இல்லையா?!

‘Red bull' என்பது ஆற்றல்மிகு உற்சாக பானம். சிவப்பு நிறமும் பெயரும், சுரீர் என்று அது என்ன என்று சொல்லிவிடுகின்றன? .

பல நேரங்களில் சில பொருட்களைக் கடைகளிலிருந்து நாம் வாங்க முடிவெடுப்பதற்கு ஒரே காரணம்,  வண்ணங்களாகவே இருக்கின்றன. உதாரணம், டூத் பிரஷ். அதுவும்  நான்கைந்து பேர் வாழும் ஒரு வீட்டில்  வண்ணத் தெரிவு எவ்வளவு அவசியம் என்பதை நாம் எளிதில் உணர முடியும்.

கலர்ஸ் சைக்காலஜி!

Purchase Decision என்பது பெரும் ஆய்வுக்கான தளமாகும்.  உலகெங்கிலும் வாழும் பல்வேறுபட்ட சமூக, பொருளாதார, மத, மொழிச் சூழலில், ஒரு பொருளை (product) டிசைன் செய்யும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியக் காரணிகளில் ஒன்று COLOR RANGE. 

ஃபெராரியின் துடிப்பான ஃபெராரி ரெட், லம்போகினியின் வைப்ரன்ட் மஞ்சள் மற்றும் ரோல்ஸ்ராய்ஸின் லக்ஸூரி பிளாக் வரை  நிறங்கள் அந்தந்தப் பொருளின் வணிக மதிப்பீட்டுக்குத் துணை நிற்கின்றன. கலர் விஷயத்தைப் பொறுத்தவரை ஒரு  நல்ல பொருளுக்குத் தவறான நிறங்களைத் தேர்ந்தெடுத்துவிட்டால், அது எடுபடாது.

முன்னொரு காலத்தில் அமெரிக்காவில்  ரொட்டியை விதவிதமான நிறங்களில் தயாரித்து விற்பனைக்கு வைத்தார்கள்; யாரும் வாங்கவில்லை.

எந்த இரு மனிதரும் ஒரே நேரத்தில் ஒரு நிறத்தை ஒரே விதமாகப் பார்ப்பதில்லை.  காரணம், கண்கள் என்பவை ஒளி அலைகளை உள்வாங்கும்  தனித்தன்மையான ரசாயனம். நிறத் தெரிவு என்பது லைட், டார்க் என்பதையும் தாண்டி ஒரு உணர்வுப் பகிர்வு; உணர்வுப் புரிதல்.  வண்ணங்களை  எப்போதும் தொகுப்புகளாகவே நாம் பயன்படுத்துகிறோம். ஆனால், அவற்றில் color Harmony என்கிற ஒத்தமைதி இருத்தல் அவசியம்.

கலர் காம்பினேஷனை மூன்றுவிதமாக அணுகலாம். Monochromatic என்பது ஒரே நிறத்தில் பல ஷேட் களைப் பயன்படுத்துவது. சில  பெண்கள் புடவைக்கு மேட்ச்சிங்காக அதே கலரில்  பிளவுஸ், கம்மல்... ஏன் பொட்டுகூட ஒரே கலரில் தேர்ந்தெடுக்கக் காரணம் - இந்த மோனோக்ரோமிக் ரசனை. Monochromatic என்பது அமைதி, சாந்தம், எளிமை, இசைவு எனப் புரிந்துகொள்ளலாம்.

 அடுத்து Contrasting combination. இது நீரும் நெருப்பும்போல. இரு எதிரெதிரான நிறங்களைத் தொகுப்பது. கறுப்பு கோட்டும் வெள்ளைச் சட்டையும் இந்த ரகம்தான். நாம் ஏன் நம்மையறியாமல் மற்றவரின் கண்களைப் பார்த்துப் பேசுகிறோம்? வெள்ளை -  கறுப்பு என உச்சபட்ச கான்ட்ராஸ்ட் கொண்டவை அவை என்பதால்தான். Complementing color combination என்பது வேறுபட்ட சில பல நிறங்களை அவற்றின்   காம்ப்ளிமென்டரி கலர்களோடு கோர்த்துத் தொகுப்பது. Complementing colors என்பதை எப்படி அறிவது? வண்ணச் சக்கரத்தில் ஒரு நிறத்துக்கு நேர்-எதிர் நிலையில் இருக்கும் நிறமே அதன் காம்ளிமென்டரி கலர். சிகப்புக்குப் பச்சை தோள் கொடுக்கும். பசுமையான செடியில் பூக்கும் சிவப்பு மலர் அழகுதான்.

கலர்ஸ் சைக்காலஜி!

கலர் சமாச்சாரங்களைச் சிக்கலாக்குவதும் எளிதாக்குவதும் நம் கையில்தான் இருக்கிறது. நமக்கு என்ன பொருந்தும், என்ன தேவை, எதற்காகத் தேவைப்படுகிறது  என்ற தெளிவு இருந்தால், நிறத் தெரிவு சுலபம். அச்சிடல் மற்றும் எழுத்துரு ஊடகங்களில் மேற்கண்ட மூன்றோடு கூடுதலாக மேலும்  7 கலர் ஸ்கீம்களைப் பார்க்கலாம். ஆக மொத்தம் 10  ஸ்கீம்கள்.

முறையே Achromatic, Analogous, Clash, Complenent, Monochromatic, Neutral, Split complement, Primary, Secondary, Tertiary.

அக்ரோமேட்டிக் என்பது வண்ணங்களற்ற கோர்வை. கறுப்பும் வெள்ளையும் திரிந்து வருவது கிரே. பழைய கறுப்பு வெள்ளைப் படங்களில் இதுபோன்ற கிரே வண்ணத்தில் காட்சிகளைப் பார்க்கலாம். கலர் வீலில் எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கி கண்ணை மூடிக் (திறந்து) கொண்டு, அடுத்தடுத்த 3 நிறங்களை எடுத்துக்கொண்டு  அவற்றின் டின்ட் மற்றும் ஷேட்களோடு விளையாடுவதே அனலாகியஸ்.

இந்தியா  ஒரு  வண்ண மயமான நாடு. இங்கு  பாறைகள், கற்கள், இலைகள், பூக்கள், கிழங்குகள், மரப்பட்டைகள்,  பசைகள் ஆகியவற்றைக் கொண்டு வெகுகாலத்துக்கு முன்பே வண்ணச்சாயங்களைப் பயன்படுத்தி வந்திருக்கிறோம். நவீன  பெயின்ட்களைவிட பன்மடங்கு அதிக காலம் நீடித்திருக்கும்  வண்ணச்சாயங்கள் நம் தைல வண்ணங்களே என்பதை அஜந்தா, எல்லோரா ஓவியங்களை நேரில் பார்த்த எவரும் ஒப்புக்கொள்வர்.

இயற்கையின் அருகில் கிடைக்கும் பொருள்களை வைத்து உருவாக்கப்படும் கலர்கள், ECO DESIGNERS மத்தியில்  நல்ல  வரவேற்பைப் பெறுகின்றன. நிறங்களைப் பற்றிய அறிவோடு, அவற்றை நகலெடுக்கும் அறிவியலாக,  இயற்கையை மாசுபடுத்தாமல் உருவாக்கும் முறைகளையும் பள்ளிப் பாடங்களாக்குவது, இனி வரும் காலங்களில் அவசியமானதாகும்.

- வடிவமைப்போம்