Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:
மோட்டார் நியூஸ்

பாப்புலர் மாருதியின் ஜாலி டே!

மோட்டார் நியூஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாருதி கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்ததில் இருந்து, அதாவது 30 ஆண்டுகளாக மாருதியின் டீலராக இருக்கும் நிறுவனம் பாப்புலர் மாருதி. சென்னையில் அண்ணாநகர் மற்றும் வேளச்சேரி ஆகிய பகுதியில் கார் ஷோ ரூம்களை நடத்திவரும் பாப்புலர் மாருதி, தங்கள் நிறுவனத்தில் கார் வாங்குபவர்களுக்கு, அந்தந்த மாதம் வாடிக்கையாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்தி வருகிறது. டிசம்பர் மாதத்துக்கான வாடிக்கையாளர் கூட்டம், டிசம்பர் 17-ம் தேதி சனிக்கிழமை பாப்புலர் மாருதியின் வேளச்சேரி ஷோ ரூமில் நடைபெற்றது. சுமார் 300 பேருக்கும் மேலானோர் பங்கு பெற்ற இந்த நிகழ்ச்சியில், சர்வீஸில் பிரச்னை என்றால் யாரை அணுக வேண்டும்; நடுவழியில் கார் நின்று விட்டால் எந்த எண்ணுக்குத் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது போன்ற பயனுள்ள தகவல்கள் பரிமாறப்பட்டன. இது தவிர, காரில் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்னைகளைச் சரி செய்வது எப்படி என்று விளக்கக் குறிப்புகளோடு விளக்கினார் பாப்புலர் மாருதியின் சர்வீஸ் பிரிவு மேலாளர். கார் விஷயங்கள் முடிந்ததும் ஜாலி கச்சேரி அரங்கேறியது. ஆட்டம், பாட்டம், சின்னச் சின்ன விளையாட்டுகள் எனக் களை கட்டியது. பாப்புலர் மாருதியின் சர்வீஸ் பிரிவு மேலாளர்களான ஆல்ட்ரின் டேவிட்டும், ஸ்ரீஹரியும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டு தெரிவித்தனர்!

படம்: வீ.நாகமணி

மீண்டும் துவங்கியது மஹிந்திரா XUV புக்கிங்!

மோட்டார் நியூஸ்

விற்பனைக்குக் கொண்டு வந்த 10 நாட்களில் 8,000 கார்கள் புக்கிங்குகள் குவிய... டெலிவரி செய்ய முடியாமல் திணறி விட்டது மஹிந்திரா. சக்கான் தொழிற்சாலையில் மாதம் 2,000 கார்களே தயாரிக்க முடியும் என்பதால், 4 மாதங்களுக்கு XUV 500 காரின் புக்கிங்கை நிறுத்திவைத்தது. இப்போது மாதம் 3,000 கார்களைத் தயாரிக்கும் அளவுக்கு தொழிற்சாலையை விரிவுபடுத்தியிருப்பதால், மீண்டும் புக்கிங்கை துவக்கி இருக்கிறது. அடுத்த ஜூன் மாதத்துக்குள் மாதந்தோறும் 4,500 கார்களைத் தயாரிக்கும் அளவுக்கு தொழிற்சாலையை விரிவுபடுத்தத் திட்டமிட்டு இருக்கிறது மஹிந்திரா!

ஹோண்டா சிட்டியில் என்னென்ன மாற்றம்?

மோட்டார் நியூஸ்

சிட்டியில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து வெளியிட்டு இருக்கிறது ஹோண்டா. சன் ரூஃப், க்ரோம் கிரில், 10 ஸ்போக் அலாய் வீல், ரியர் வியூ கண்ணாடிகளிலேயே இண்டிகேட்டர் என சில புதிய வசதிகள் இடம் பிடித்திருக்கின்றன. பாதுகாப்புக்காக இரண்டு காற்றுப் பைகள், ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிப்யூஷன், பிரேக் அசிஸ்ட் ஆகிய வசதிகளும் உண்டு. மிட் சைஸ் கார் மார்க்கெட்டில் போட்டி பலமாக இருப்பதால், புதிய சிட்டியின் ஆரம்ப மாடல் விலையை 50 ஆயிரம் ரூபாய் குறைத்து வெளியிட்டிருக்கிறது ஹோண்டா!

1 கோடி டிடீஎஸ்-ஐ!

மோட்டார் நியூஸ்

1 கோடி டிடீஎஸ்-ஐ இன்ஜின்களைத் தயாரித்து சாதனை படைத்திருக்கிறது பஜாஜ். 2003 முதல் பல்ஸர் துவங்கி, டிஸ்கவர், அவென்ஜர் என கிட்டத்தட்ட தனது எல்லா பைக்குகளிலும் இரட்டை ஸ்பார்க் பிளக் கொண்ட டிடீஎஸ்-ஐ இன்ஜின்களைப் பொருத்தி வெளியிட்டு வருகிறது பஜாஜ். 1 கோடி டிடீஎஸ்-ஐ இன்ஜின் மட்டும் அல்ல... பல்ஸர் பைக் அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதையும் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறது பஜாஜ்!

பைக் விற்பனை!

இந்திய மோட்டார் சைக்கிள் விற்பனையில், தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது ஹீரோ மோட்டோ கார்ப். கடந்த நவம்பர் மாதம் மட்டும் 5,36,772 ஹீரோ மோட்டார் சைக்கிள்கள் விற்பனையாகி இருக்கின்றன. இரண்டாவது இடத்தில் பஜாஜ் 2,02,711 பைக்குகளை விற்பனை செய்திருக்கிறது. மூன்றாவது இடத்தில் இருந்த டிவிஎஸ் நிறுவனத்தை முந்திவிட்ட ஹோண்டா நிறுவனம், 1,98,782 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து, பஜாஜ் நிறுவனத்துக்கு கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. நான்காவது இடம் பிடித்த டிவிஎஸ் நிறுவனம் 1,50,406 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்ய, யமஹா 39,162 பைக்குகளை விற்பனை செய்து ஐந்தாவது இடத்தில் இருக்கிறது!

சாதனை ஸ்விஃப்ட்!

மோட்டார் நியூஸ்

மீண்டும் விற்பனையில் வேகம் எடுக்க ஆரம்பித்துவிட்டது மாருதி. கடந்த நவம்பர் மாதம் மட்டும் 24,422 ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. ஹூண்டாய் ஐ10, சான்ட்ரோ கார்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது மாருதி ஸ்விஃப்ட். நவம்பர் மாதம் மொத்தம் 17,273 கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. மூன்றாவது இடத்திலும் மாருதிதான்! 12,069 வேகன்-ஆர் கார்கள் விற்பனையாகி மூன்றாவது இடம் பிடித்திருக்கிறது. ஹூண்டாய் இயான் 7,418 கார்கள் விற்பனையாக, 6,401 கார்கள் விற்பனையாகி டாப் டென்னில் கடைசி இடம் பிடித்திருக்கிறது டாடா நானோ. தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளத்தால், கடுமையான பின்னடைவைச் சந்தித்திருக்கும் ஹோண்டா நிறுவனம், விற்பனையில் கடும் சரிவைச் சந்தித்திருக்கிறது. கார் தயாரிப்புக்குத் தேவையான முக்கிய உதிரி பாகங்கள் வராததால், ஹோண்டா சிட்டியின் விற்பனை 652 கார்களாக குறைந்தன. இதே செக்மென்ட்டில் ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ 3,055 கார்கள் விற்பனையாக, ஹூண்டாய் வெர்னா 4,331 கார்கள் விற்பனையாகி இருக்கின்றன!

வருகிறது எம்வி அகுஸ்ட்டா!

மோட்டார் நியூஸ்

இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் டீலர் ஷிப்பைத் துவக்கி, பைக்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டு இருக்கிறது, இத்தாலிய சூப்பர் பைக் தயாரிப்பு நிறுவனம் எம்வி அகுஸ்ட்டா. புருட்டேல் 920, புருட்டேல் ஆர் 1090, 675 ஆகிய பைக்குகளை முதல் கட்டமாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது எம்வி அகுஸ்ட்டா!

கோவையில் ஆட்டோ எக்ஸ்போ!

மோட்டார் நியூஸ்

சென்னைக்கு அடுத்து ஆட்டோமொபைல் துறையில் அதிக கவனம் ஈர்ப்பது கோவைதான். அதை நிரூபிக்கும் வண்ணம் அமைந்தது, கடந்த டிசம்பர் 10, 11, 12 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் கோவை கொடிசியா அரங்கில் நடந்த ஆட்டோ எக்ஸ்போ. இந்த ஆட்டோ எக்ஸ்போவை நடத்திய கோவை மோட்டார் பார்ட்ஸ் டீலர் அசோஸியேஷன் ஒருங்கிணைப்பாளர் சிவகுமார், ''இந்த முறை வெறும் உதிரி பாகங்கள் மட்டும் இல்லாமல், மார்க்கெட்டில் புதிதாக வந்துள்ள ஆக்சஸரீஸ் ஸ்டால்களும் இடம் பிடித்திருக்கின்றன. மொத்தம் 222 ஸ்டால்கள் என கொடீசியா அரங்கமே நிரம்பியிருக்கிறது'' என்றார். பார்வையாளர்களை கவரும் விதமாக பைக் ஸ்டன்ட் ஷோ, வின்டேஜ் கார் மற்றும் பைக் கண்காட்சி என கோவை ஆட்டோ எக்ஸ்போ களை கட்டியது!

- த.சித்தார்த், படங்கள்: செ.பாலநாக அபிஷேக்,

கே.ஆர்.வெங்கடேஸ்வரன்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism