Published:Updated:

மைலேஜ் மன்னன்!

மைலேஜ் மன்னன்!

  த.சித்தார்த்  தி.விஜய்

 ##~##

'மைலேஜ்’ - இது, நாளுக்கு நாள் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிக் கொண்டே இருக்கும் பெட்ரோலின் விலையால், எல்லா தரப்பினரையும் தாரக மந்திரம் போல உச்சரிக்க வைத்திருக்கும் வார்த்தை. 'என்னோட பைக் வெறும் முப்பது கிலோ மீட்டர்தான் மைலேஜ் கிடைக்குது... 40 கிலோ மீட்டரைத் தாண்ட மாட்டேங்குது’ என்று புலம்புபவர்களுக்கு மத்தியில், 'என்னோட பைக் 70 கிலோ மீட்டர் கொடுக்கும்... 85-க்கு மேல போவும்’ என்று நெஞ்சை நிமிர்த்தும் மைலேஜ் மன்னர்களைப் பற்றி இனி மாதந்தோறும் பார்க்கலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காரோ அல்லது பைக்கோ - சொந்த காசில் வாங்கிய வாகனத்தை, தன் உயிரைப் போல நேசிப்பவர்கள் ஏராளம். தான் குளிக்கவில்லை என்றால்கூட தன் வாகனத்தை அடிக்கடி சுத்தம் செய்து வைத்துக்கொண்டே இருப்பார்கள். தங்கள் வாகனத்தில் சின்னச் சத்தம் எழுந்தால்கூட பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அது எதனால் வந்தது... எப்படி நேர்ந்தது என்று மெக்கானிக்கை கேள்விகளால் துளைத்து விடுவார்கள். அப்படிப்பட்ட ஒருவரைத்தான் கோவையில் சந்தித்தோம்.

மைலேஜ் மன்னன்!

இடிகரை என்ற பகுதியில் வசிக்கும் தங்கவேல், மில் தொழிலாளி. இப்போது விருப்ப ஓய்வு பெற்றுவிட்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் 1986-ல் வாங்கிய ஹீரோ ஹோண்டா சிடி-100 பைக்கை 25 ஆண்டுகளுக்குப் பிறகும் தினசரி பயன்படுத்தி வருகிறார் என்பது தான் செய்தி. அதுவும் மைலேஜில் இவருடைய பைக்கை அடித்துக்கொள்ள எதுவும் கிடையாது என்கிறார்கள்.

அவரிடம் பேசினோம்: ''எனக்கு காலேஜ் போற வயசுல ஒரு பையன் இருக்கான். ஆனா, இந்த பைக்

மைலேஜ் மன்னன்!

எனக்கு மூத்த குழந்தை மாதிரி. வாழ்க்கையில முதன்முதலா 13,000 ரூபாய்க்கு பைக் வாங்குன அந்த நேரத்தை என்னால மறக்க முடியாது. இப்பெல்லாம் தெருவுக்கு முன்னூறு பைக் இருக்கு. அப்ப எல்லாம் பைக்குல போறதே ஆச்சரியம்தான். என் பைக்கோட இன்ஜின் ஜப்பான்ல தயாரிச்சது. இதோட இன்ஜின் சத்தமே வேற மாதிரி இருக்கும். தினமும் காலையில முழிக்கிறதே என் பைக்கைப் பார்த்துதான். நானே கழுவி சுத்தமா வெச்சுக்குவேன். வேற யாருக்கும் பைக்கைக் கொடுக்கவே மாட்டேன். அதிகபட்சமா ஐம்பது கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல இந்த பைக்குல போனதில்லை. ஆரம்பத்துல லிட்டருக்கு 93 கிலோ மீட்டர் வரைக்கும் மைலேஜ் கிடைச்சது. இப்ப கொஞ்சம் கொறைஞ்சிருக்கு. இந்த இருபத்தஞ்சு வருஷத்துல ரெண்டு லட்சம் கிலோ மீட்டர் தூரம் ஓட்டி இருக்கேன். ஒரே ஒரு தடவை இன்ஜினைப் பிரிச்சு, பேரிங் மட்டும் மாத்தினேன். அதுக்கு மட்டும் நாலாயிரம் செலவாச்சு. அதுக்குப் பிறகு இன்ஜினைத் தொடவே இல்லை!'' என்று உருகியவரிடம், பைக்கின் மைலேஜை சோதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதும், தன் பைக்கின் ஆஸ்தான மெக்கானிக்கான கணபதி பகுதியில் இருக்கும் சரவணனிடம் அழைத்துச் சென்றார்.    

பைக்கின் கார்புரேட்டரில் இருந்த பெட்ரோலை 'ட்ரை’ செய்து விட்டு, 100 மில்லி அளவுக்கு 'மைலேஜ் டெஸ்ட் கேன்’-ல் பெட்ரோல் நிரப்பி சோதனை செய்தோம். சோதனையின் முடிவு நமக்கு ஆச்சரியம் அளிப்பதாகவே அமைந்தது. காரணம், தங்கவேலின் பைக் ஒரு லிட்டருக்கு 85 கி.மீ வரை மைலேஜ் அளித்ததுதான்!

தொடர்ந்து பேசிய தங்கவேல், ''எது எப்படி இருந்தாலும் ரெண்டாயிரம் கிலோ மீட்டருக்கு ஒரு தடவை இன்ஜின் ஆயில் மாத்திடுவேன். எப்ப சர்வீஸ் பண்ணுனேன்; என்ன மாத்துனோம்; அடுத்து என்ன மாத்தணும் அப்படிங்கிறதை எல்லாம் எழுதி வெச்சுடுவேன். இதுவரைக்கும் என்னோட பைக் மூணு தடவை 'எஃப்.சி’ (ஃபிட்னஸ் சர்டிஃபிகேட்) போயி எந்தப் பிரச்னையும் இல்லாம பாஸ் ஆகி வந்திருக்கு!'' என்று சிரிக்கிறார்.

''சரி, எப்படி பைக்கை மெயின்டெயின் பண்றீங்க?'' என்றதும், ''நான் எப்பவுமே ஒரே மெக்கானிக் கிட்டதான் சர்வீஸுக்கு விடுவேன். வெயில்ல, பனியில பைக்க நிறுத்தமாட்டேன். அதிகமா மழை விழுந்தா பைக்கை வெளிய எடுக்க மாட்டேன். நம்ம உடம்புக்கு ஏதாவது பிரச்னைன்னா எப்படி டாக்டரைப் பார்க்க ஓடுறோமோ, அதே மாதிரி பைக்குல ஒரு சின்னப் பிரச்னைனாலும் மெக்கானிக்கிட்ட போயிடுவேன். அது அஞ்சு ரூபாய் செலவாகத்தான் இருக்கும். அதை அப்படியே விட்டா ஐநூறு ரூபாய் செலவு வெச்சுடும்! அதனால, சர்வீஸ் விஷயத்துல பக்காவா இருப்பேன்.

இந்த இருபத்தஞ்சு வருஷத்துல ஒரு ஆக்ஸிடென்ட் கூட ஆனதில்லை. எப்பவும் பைக்கோட பராமரிப்பு ஒருத்தருக்குக் கீழதான் இருக்கணும். அப்பதான் அந்த மெக்கானிக்குக்கு நம்ம பைக்கோட எல்லா விஷயங்களும் அத்துப்படியாக இருக்கும்!'' என்று முடிக்கிறார் இந்த மைலேஜ் மன்னன் தங்கவேல்!