Published:Updated:

`இந்திய கார்கள் சர்வதேச தரத்தில் இல்லை’ - ஐ.ஐ.டி ஆய்வில் அதிர்ச்சி தகவல்

`இந்திய கார்கள் சர்வதேச தரத்தில் இல்லை’ - ஐ.ஐ.டி ஆய்வில் அதிர்ச்சி தகவல்

`இந்திய கார்கள் சர்வதேச தரத்தில் இல்லை’ - ஐ.ஐ.டி ஆய்வில் அதிர்ச்சி தகவல்

`இந்திய கார்கள் சர்வதேச தரத்தில் இல்லை’ - ஐ.ஐ.டி ஆய்வில் அதிர்ச்சி தகவல்

`இந்திய கார்கள் சர்வதேச தரத்தில் இல்லை’ - ஐ.ஐ.டி ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Published:Updated:
`இந்திய கார்கள் சர்வதேச தரத்தில் இல்லை’ - ஐ.ஐ.டி ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஐ.ஐ.டி பாம்பே சமீபத்தில் ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டது. அதில், ரூ.10 லட்சத்துக்குள் இந்தியாவில் விற்பனையாகும் கார்கள், குறைவான தரத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு காரின் ஆயுள் என்பது அதன் இன்ஜின் செயல்பாட்டைப் பொருத்து இல்லை. மாறாக, அதனுடைய ஷெல் மற்றும் பாகங்கள் எத்தனை நாள்கள் தாக்குப்பிடிக்கின்றனவோ அதைப் பொறுத்தே அமையும். கார் தயாரிப்பின்போது ஸ்டீலுக்கு பதிலாக கால்வனைஸ்டு ஸ்டீல் பயன்படுத்துவது காரின் ஆயுளை அதிகரிக்க உதவும். இது பல உலக நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் தயாரிப்புமுறை. இந்தியாவில் இதன் பயன்பாடு குறைவாக உள்ளது என்கிறது இந்த ஆய்வு.

கார்களில் பயன்படுத்துகிற சாதா ஸ்டீல் மீது ஜின்க் (Zinc) கோட்டிங் பூசப்பட்டால் அதுதான் கால்வெனைஸ்டு ஸ்டீல். சாதாரணமாக இரும்பின் மீது பெயின்ட் அடிக்கப்படுவதால் மட்டும் அரிப்பு, துரு மற்றும் துளை விழுவதைத் தடுக்க முடியாது. ஸ்டீல் மீது கால்வனைஸ்டு கோட்டிங் கொடுத்து அதன் மீதுபெயின்ட் அடித்தால், உலோகம் நீண்ட காலம் தாக்குப்பிடிக்கும். சராசரியாக ஒரு வாகனத்தில் குறைந்தபட்சம் 70% கால்வனைஸ்டு ஸ்டீல் இருக்க வேண்டும். 

இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிற வாகனங்களில் கால்வனைஸ்டு ஸ்டீலின் அளவு குறிப்பிட்டுள்ள 70 சதவிகிதம் உள்ளது. ஆனால், இந்தியாவில் விற்பனை செய்ய தயாரிக்கப்படும் வாகனங்களில் இதன் அளவு 3% மட்டுமே உள்ளது. இதனால், இந்திய வாடிக்கையாளர்களுக்குத் தரமான வாகனங்கள் கிடைப்பதில்லை. 

இந்த ஆய்வு 2011-ம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்டது. ``வெடிப்புகள், துருக்கள் மற்றும் துளைகள் போன்ற முக்கியமான விஷயங்களை ஆராய்ந்தோம். வெவ்வேறு பிராண்ட் கார்களை வைத்துப் பரிசோதித்தபோது, இதில் கால்வனைஸ்டு ஸ்டீல் பயன்படுத்தப்பட்ட வாகனங்களில் இந்தப் பாதிப்பு குறைவாக இருப்பது தெரிந்துள்ளது. பத்து லட்சத்துக்கும் குறைவாக உள்ள வாகனங்களில் கால்வனைஸ்டு ஸ்டீல் குறைவான அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால், காரின் ஆயுள் குறைவதோடு கார்களில் பாதுகாப்பும் குறைகிறது. அதேநேரத்தில், பத்து லட்சம் ரூபாய்க்கு அதிகமான வாகனங்களில் கால்வனைஸ்டு ஸ்டீல் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது" என, இந்த ஆய்வை மேற்கொண்ட ஐஐடி பாம்பே முன்னாள் பேராசிரியர் ஆனந்த கண்ணா தெரிவித்தார். 

தென் இந்தியாவில் கடற்கரை அருகில் உள்ள பகுதிகளில்தான் கார் பாகங்களில் அதிக அரிப்பு ஏற்படுகிறது என்றும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. 2020-ல் இந்தியா நான்காவது பெரிய ஆட்டோ மொபைல் சந்தையாக இருக்கும். ஒரு காரின் தயாரிப்பில் 70% ஸ்டீல் பயன்படுத்தப்படுகிறது. அதில் 70 சதவிகிதம் கால்வனஸ்டு ஸ்டீல் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்பது பல சர்வதேச நாடுகளில் சட்டமாக்கப்பட்டுள்ளது. மூன்று பக்கமும் கடல் இருக்கும் இந்தியாவில் இப்படிப்பட்ட சட்டம் எதுவும் இல்லை.

கால்வனைஸ்டு ஸ்டீல் பயன்படுத்துவதினால் காரின் விலை மிகப்பெரிய அளவில் அதிகரிக்காது. வாகனத்தின் ஒட்டுமொத்த விலையில் மிகச் சொற்பமான அளவுதான் செலவிட நேரிடும். ஆனால், இதன்மூலம் பெறுகிற பலன் அதிகம். இந்தியாவில் இயங்குகிற அனைத்து தயாரிப்பு நிறுவனங்களிடமும் கால்வனைஸ்டு ஸ்டீல் கொண்டு தயாரிப்பதற்கான அனைத்து வசதிகளும் இருக்கின்றன. ஒரே இடத்தில் தயாரிக்கப்படுகிற ஏற்றுமதி வாகனங்களுக்கு ஒரு விதமாகத் தயாரிக்க முடிகிறபோது உள்நாட்டு வாகனங்களுக்கு ஏன் தயாரிக்க முடியாமல் போகிறது?

இந்த ஸ்டீல் பயன்படுத்துவதால் வாகனத்தின் எடையும் கூடப்போவதில்லை. குறைவான செலவிலே வாகனத்தின் தரத்தையும் ஆயுளையும் அதிகரிக்க முடியும். வாடிக்கையாளர்களுக்கு இதைப்பற்றிய விழிப்புஉணர்வு ஏற்படுத்துவதோடு, அதற்கேற்ப சட்டங்களை இயற்ற வேண்டும்.

இன்டர்நேஷனல் ஜின்க் கார்ப்பரேஷன் ஆலோசகர் டக் ரூர்க், ஐ.ஐ.டி பாம்பே மெட்டலர்ஜி பிரிவின் முன்னாள் பேராசிரியர் ஆனந்த கன்னா மற்றும் இன்டர்நேஷனல் ஜின்க் கார்ப்பரேஷன் இந்தியப் பிரிவின் இயக்குநர் ராகுல் சர்மா ஆகியோர் சமீபத்தில் இந்த ஆய்வை சென்னையில் வெளியிட்டனர்.