Published:Updated:

இந்தியாவுக்கு இடம் இல்லை!

இந்தியாவுக்கு இடம் இல்லை!

>>சார்லஸ்

இந்தியாவுக்கு இடம் இல்லை!

கார் ரேஸர்களுக்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நடக்க, பைக் ரேஸர்களுக்கான விருது வழங்கும் விழா போர்ச்சுகல் நாட்டில் நடந்தது. ரேஸ் உலகைச் சேர்ந்த சுமார் 500 பேர் கலந்து கொண்ட இந்த விழா, 'எஸ்டோரில்’ எனும் கடற்கரை ரிசார்ட்டில் நடந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மோட்டோ ஜீபி ரேஸ் சாம்பியன் பட்டம் வென்ற கேஸி ஸ்டோனர், சூப்பர் பைக் ரேஸ் பட்டம் வென்ற கார்லோஸ் செக்கா உள்ளிட்ட பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்ட இந்த விழாவில், ஒரு பெண்ணுக்கும் விருது வழங்கப்பட்டது!

பெண்களுக்கான டிரையல் பைக் ரேஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயினைச் சேர்ந்த லைலா சான்ஸ் என்பவர்தான் விருது மேடையில் இடம் பிடித்த ஒரே பெண்!

இந்தியாவுக்கு இடம் இல்லை!
இந்தியாவுக்கு இடம் இல்லை!
இந்தியாவுக்கு இடம் இல்லை!

மோட்டோ ஜீபி அணி வீரர்களில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. ஆனால், அணிகளில் பெரிய மாற்றமாக சுஸ¨கி அணி மோட்டோ ஜீபியில் இருந்து விலகி இருக்கிறது. இது தற்காலிக விலகல்தான் என்றும், 2014-ம் ஆண்டில் இருந்து மீண்டும் சுஸ¨கி அணி மோட்டோ ஜீபியில் கலந்து கொள்ளும் என்றும் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவுக்கு இடம் இல்லை!

எந்த டெஸ்ட் டிரைவர் வேண்டுமானாலும் மோட்டோ ஜீபி பைக்குகளை டெஸ்ட் செய்யலாம் என விதிமுறைகள் தளர்த்தப்பட்டு இருக்கிறது. அதேபோல், 1000 சிசி பைக்குகளில் 320 மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தபட வேண்டும் என்றும் விதிமுறை மாறியுள்ளது! இதற்கிடையே, 2012 மோட்டோ ஜீபி ரேஸுக்கான கால அட்டவணையில், சில மாற்றங்கள் செய்திருக்கிறது மோட்டோ ஜீபி ரேஸ்களை நடத்தும் டோர்னா ஸ்போர்ட்ஸ் நிர்வாகம். மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் பட்டியலிலும் இந்தியாவுக்கு இடம் இல்லை. மோட்டோ ஜீபி ரேஸைக் காண இந்திய ரசிகர்கள் 2013 வரை காத்திருக்கத்தான் வேண்டும்!

இந்தியாவுக்கு இடம் இல்லை!