Published:Updated:

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

Published:Updated:
மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

முகமது யூசுப், திருநெல்வேலி.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்டைலான பைக் வாங்கவேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு! என்னுடைய பட்ஜெட் 1 லட்ச ரூபாய். யமஹா ஆர்-15, யமஹா FZ 16 அல்லது பஜாஜ் அவென்ஜர் - மூன்றில் எந்த பைக்கை வாங்கலாம்?

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

விலையில் 1 லட்ச ரூபாயைத் தாண்டும் ஸ்போர்ட்ஸ் பைக் யமஹா ஆர்-15; பஜாஜ் அவென்ஜர் க்ரூஸர் பைக்; யமஹா FZ16  நேக்கட் பைக்! மூன்றுமே வெவ்வேறு வகை ஸ்டைல் பைக்குகள் என்பதால், மூன்றில் உங்களுக்கு எந்த பைக்கின் ஸ்டைல் பிடித்திருக்கிறது என்று நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும். ஸ்டைல், பர்ஃபாமென்ஸ், விலை, மைலேஜ் என ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது மூன்றில் சிறந்த பைக், யமஹா FZ 16 பைக்தான்!

யுவ்ராஜ், சேலம்.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

தினமும் கல்லூரிக்குச் சென்று வர டாடா நானோ வாங்கலாமெனத் திட்டமிட்டிருக்கிறேன். நானோவில் எப்போது BS4 மாடல் வருகிறது. இந்த காரில் வெறும் டிரம் பிரேக்குகள் மட்டுமே இருக்கின்றன. இது போதுமா? இல்லை, டிஸ்க் பிரேக் பொருத்தலாமா?

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

டாடா நானோ அறிமுகப்படுத்தப் பட்டதில் இருந்தே BS4 மாடலுடன்தான் வெளிவருகிறது. பிரேக்குகளைப் பொருத்தவரை எடை குறைவான சிறிய கார்தான் என்பதால், இந்த காருக்கு டிரம் பிரேக்கே போதுமானதாக இருக்கிறது. டிஸ்க் பிரேக் பொருத்த வேண்டிய அவசியம் டாடா நானோவுக்கு இல்லை.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

கவாஸாகி நின்ஜா பைக்தான் என்னுடைய கனவு பைக். ஆனால் இந்தியாவில் நின்ஜா 250ஆர், நின்ஜா 650ஆர் இரண்டு பைக்குகளுமே விற்பனைக்கு இருப்பதால், எந்த பைக்கை வாங்குவது என்று தெரியவில்லை. மோட்டார் விகடனின் தீர்ப்பு என்ன?

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

கவாஸாகி நின்ஜா 250ஆர் - ஸ்போர்ட்ஸ் பைக். நின்ஜா 650ஆர் - ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்! அடிக்கடி பைக்கில் நீண்டதூரம் பயணம் செய்வீர்கள் என்றால் நின்ஜா 650 வாங்குங்கள். நகருக்குள் ஸ்டைலாக பைக் ஓட்ட ஆசைப்படுகிறீர்கள் என்றால், நின்ஜா 250 பைக்கே போதுமானது!

டார்வின்குமார், நாகர்கோவில்.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

சின்ன கார் வாங்க வேண்டும். ஹூண்டாய் ஐ10, ஃபோர்டு ஃபிகோ, டாடா இண்டிகா விஸ்டா, செவர்லே பீட் - நான்கில் எந்த காரை வாங்கலாம்? எது சர்வீஸ் செலவுகள் அதிகம் வைக்காத கார்? பெட்ரோல் கார்தான் வேண்டும்!

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

ஃபிகோவின் பெட்ரோல் இன்ஜின் டீசல் அளவுக்குச் சிறப்பான இன்ஜின் இல்லை. அதனால் ஃபிகோவை உங்கள் லிஸ்ட்டில் இருந்து எடுத்துவிடுங்கள். இண்டிகா விஸ்டாவில் இருப்பது ஃபியட்டின் பெட்ரோல் இன்ஜின்தான் என்றாலும், ட்யூனிங் சிறப்பாக இல்லை. செவர்லே பீட், ஹூண்டாய் ஐ10 இரண்டு கார்களும் உங்களுக்கு நல்ல சாய்ஸாக இருக்கும். பீட் வாங்கினால் மூன்று வருட வாரன்ட்டி மற்றும் சர்வீஸ் சலுகைகள் உண்டு. ஹூண்டாய் ஐ10 இடவசதி, மைலேஜ், பில்டு குவாலிட்டி என மூன்று முக்கிய விஷயங்களிலும் சிறந்த காராக இருக்கிறது. சர்வீஸ் செலவுகளும் குறைவுதான்!

சோமுராஜ், விருதுநகர்.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

நான் கல்லூரியில் படித்து வருகிறேன். நான் சராசரியைவிட சற்றே உயரம் குறைவானவன். என் உயரத்துக்கு ஏற்ற நல்ல பர்ஃபாமென்ஸ் கொண்ட 150 சிசி பைக் வேண்டும். எந்த பைக் எனக்குச் சரியாக இருக்கும்?

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

யமஹா FZ16 அல்லது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 இரண்டும் உயரம் குறைவானவர்களுக்குச் சரியாக இருக்கும். பர்ஃபாமென்ஸைப் பொருத்தவரை இரண்டில் டிவிஎஸ் அப்பாச்சிதான் சிறந்த பைக். ஸ்டைல், நகருக்குள் சுற்றிவர போதுமான பர்ஃபாமென்ஸ், மைலேஜ் - மூன்றும் வேண்டும் என்றால் யமஹா FZ16 பைக் வாங்கலாம்!

மல்லிகா அருண், கோவை.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

12-15 லட்ச ரூபாயில் புது கார் வாங்கத் திட்டமிட்டிருக்கிறேன். எனக்கு ஹோண்டா சிவிக் மிகவும் பிடித்திருக்கிறது. இப்போது இந்த காரை வாங்கலாமா? அல்லது புது சிவிக் எதுவும் விற்பனைக்கு வர இருக்கிறதா?

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

பல்வேறு மாற்றங்களுடன் புதிய ஹோண்டா சிவிக் அடுத்த ஆண்டு மே - ஜூன் மாதவாக்கில் விற்பனைக்கு வர இருக்கிறது. வெளித் தோற்றத்தில் மட்டும் அல்லாமல், காருக்கு உள்ளேயும் பல மாற்றங்கள் நிகழ இருக்கின்றன. இன்னும் ஆறு மாதம் நீங்கள் காத்திருக்க முடியும் என்றால், புதிய ஹோண்டா சிவிக்கை வாங்கலாம்!

பிரசாந்த், மும்பை.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

நான் கடந்த ஆறு வருடங்களாக டொயோட்டா இனோவா கார் பயன்படுத்தி வருகிறேன். புதிதாக இதே செக்மென்ட்டில் கார் வாங்க வேண்டும். மீண்டும் டொயோட்டா இனோவாவே வாங்கலாமா அல்லது மஹிந்திரா ஸைலோ அல்லது டாடா ஆரியா வாங்கலாமா?

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

எம்யூவி செக்மென்ட்டில் பெஸ்ட் கார் டொயோட்டா இனோவாதான்! மஹிந்திரா ஸைலோ மற்றும் டாடா ஆரியாவில் சிறப்பம்சங்கள் மற்றும் இடவசதி தாராளமாக இருந்தாலும், தரத்தில் சிறந்த கார் இனோவாதான். பில்டு குவாலிட்டி, நம்பகத்தன்மை வாய்ந்த இன்ஜின், மைலேஜ் என மக்களின் மனம் கவர்ந்த காராக தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது டொயோட்டா இனோவா!

ஜான் மனோகர், புதுக்கோட்டை.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

6 லட்ச ரூபாயில் புது கார் வாங்கலாமெனத் திட்டமிட்டிருக்கிறேன். மாருதி ஸ்விஃப்ட் டிசையர் டீசல், ஹூண்டாய் ஐ20 டீசல் கார்களை இறுதி செய்து வைத்திருக்கிறேன். இரண்டில் எந்த கார் வாங்குவது பெஸ்ட்?

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

நீங்கள் செடான் காரையும், ஹேட்ச்பேக் காரையும் ஒப்பிடுகிறீர்கள். மாருதி ஸ்விஃப்ட் டிசையருடன் ஒப்பிடும்போது, ஹூண்டாய் ஐ20-ல் இல்லாத வசதி டிக்கி மட்டுமே! மற்றபடி ஸ்டைல், இடவசதி, சிறப்பம்சங்கள், பில்டு குவாலிட்டி, மைலேஜ் என அனைத்திலும் சிறந்த கார் ஹூண்டாய் ஐ20 தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism