Published:Updated:

டெஸ்ட் டிரைவ்: நிஸான் லீஃப்

டெஸ்ட் டிரைவ்: நிஸான் லீஃப்

பி.ஆரோக்கியவேல்  பொன்.காசிராஜன்

 ##~##

ரோப்பாவில் மட்டுமல்ல... 2011-ம் ஆண்டு உலகெங்கும் விற்பனைக்காக வெளிவந்த கார்களில் மிகச் சிறந்த காராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, விருதுகளை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கும் கார் நிஸான் லீஃப்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

டெல்லியை அடுத்திருக்கும் நொய்டாவில் உள்ள 'புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்’ அமைந்திருக்கும் பகுதியில், இந்த காரை ஓட்டிப் பார்க்கும் சந்தர்ப்பம், குளிருக்குக் கதகதப்பான ஒரு பகல் வேளையில் கிடைத்தது. பால் வெள்ளை நிறத்தில் ஒரு முயல் குட்டியை நினைவுப்படுத்தும் வடிவத்தில் க்யூட்டாக நின்றிருந்தது லீஃப்.

இதற்கு ஏன் உலகெங்கும் இத்தனை கிரேஸ்? இதற்கு முன்பும் எத்தனையோ எலக்ட்ரிக் கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவையெல்லாம் கான்செப்ட் ரீதியாகவும், பரீட்சார்த்த வகையிலும் அல்லது ஏற்கெனவே இருக்கும் பெட்ரோல் அல்லது டீசல் கார்களை எலெக்ட்ரிக் கார்களாக உருமாற்றித் தயாரிக்கப்பட்டவை. ஆனால், ஒரிஜினல் எலெக்ட்ரிக் காராக வடிவமைக்கப்பட்டது இந்த நிஸான் லீஃப்!

டெஸ்ட் டிரைவ்: நிஸான் லீஃப்

இதற்கு முன்பு வடிவமைக்கப்பட்ட எலெக்ட்ரிக் கார்களில் எல்லாம், பெரும்பாலும் டிக்கியில்தான் காரின் பேட்டரி வைக்கப்பட்டு இருக்கும். ஆனால் இதில், பயணிப்பவர்களுக்கு எந்த அசௌகரியத்தையும் கொடுக்காமல், காருக்கு அடியில் பொருத்தப் பட்டுள்ளது. பேட்டரியை 8 மணி நேரம் 'சார்ஜ்’ செய்தால், 175 கி.மீ தூரம் பயணிக்க முடியும். இதில் 'குவிக் சார்ஜ்’ என்று இன்னொரு ஆப்ஷனும் உண்டு. அதில், அரை மணி நேரம் சார்ஜ் செய்தால், 80 சதவிகிதம் சார்ஜ் ஆகி விடுகிறது.

டெஸ்ட் டிரைவ்: நிஸான் லீஃப்

எலெக்ட்ரிக் கார்கள் என்றால், புகை இல்லை; சத்தமில்லை என்பதுடன் சுற்றுச் சூழலுக்கு ஏற்ற கார் என்பதெல்லாம் தெரிந்த விஷயம். ஆனால், லீஃபை ஓட்டிப் பார்த்தபோது, 'எலெக்ட்ரிக் கார்கள் என்றால், வேகம் போகாது’ என்று நமக்கிருந்த ஒரு எண்ணத்தையும் சுக்கு நூறாக உடைத்தது! பெட்ரோலில் ஓடக்கூடிய சின்ன கார்களைப் போலவே சக்தியை வெளிப்படுத்தியதால், இதை ஓட்டுவதற்கு உற்சாகமாக இருந்தது. ஆம், இதன் பவர் 108 bhp. டார்க் 28.5 kgm. இந்த காரின் கியர் நாப், ஏதோ ஜாய் ஸ்டிக் மாதிரி புதுமையாக இருக்கிறது. இந்த கியர் நாப்பை D என்ற பட்டனில் வைத்துவிட்டு ஆக்ஸிலரேட்டரை மிதித்தால், ஆக்டிவா ஸ்கூட்டர் ஓட்டுவதைப் போல காரை மிகச் சுலபமாக ஓட்ட முடிகிறது. ஏ.ஸி ஆன் செய்யாமல்  அதிகமாக பிரேக்கை அழுத்தாமல், மிதமான வேகத்தில் ஓட்டினால், நிஸான் சொல்லுவது போல ஒரே சார்ஜில் 175 கி.மீ ஓட்ட முடியும். இருக்கின்ற சார்ஜுக்கு மேற்கொண்டு எத்தனை எவ்வளவு தூரம் போக முடியும் என்பதை டேஷ் போர்டில் இருக்கும் மானிட்டர் காட்டிவிடுகிறது.

எலெக்ட்ரிக் கார் என்றாலே, ஏதோ பாதுகாப்பு குறைந்த கார் என்ற பொதுப்படையான புரிதலையும் இந்த கார் உடைத்து எறிகிறது. ஐரோப்பியத் தரத்துக்கு 'கிராஷ் டெஸ்ட்’டில் பாஸ் செய்திருக்கும் இந்த லீஃபில் காற்றுப் பை, ஏபிஸ், ரியர் வியூ கேமரா ஆகிய பாதுகாப்பு சாதனங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.

சரி, இடவசதி? இதில் தாராளமாக ஐந்து பேர் உட்கார முடிகிறது. இது ஐரோப்பிய மற்றும் அமெரிக்கச் சாலைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட கார் என்பதால், கிரவுண்ட் கிளியரன்ஸ், சஸ்பென்ஷன் ஆகிய விஷயங்களில், நம்மூர் சாலைகளுக்கு எந்த வகையில் ஏற்றதாக இருக்கும் என்பதை, சென்னை சாலையில் ஓட்டிப் பார்த்தால்தான் தெரியும்.

நிஸானின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியிருக்கும் இந்த கார், சுற்றுச் சூழல் ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல, அமைதியான சாலையை விரும்புகிறவர்களுக்கும் ஏற்ற கார் என்பதில் சந்தேகமில்லை!