Published:Updated:

ரசிகன்!

ரசிகன்!

சார்லஸ்

ரசிகன்!

'ஒன்றுமே இல்லாமல், வெற்றுத் தாளில் இருந்துதான் எல்லா கலைஞர்களும் வேலையை ஆரம்பிப்பார்கள். ஆனால், புகைப்படக் கலைஞன் மட்டுமே முழுமையான படைப்பில் இருந்து தனது வேலையை ஆரம்பிக்கிறான்’ - புகைப்படக் கலையை விளக்கும் அற்புதமான வரிகள் இவை. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கையில் கேமரா இருக்கும் எல்லோருமே புகைப்படக்காரர்கள்தான். ஆனால் அழகான, அசத்தலான படங்கள் எடுப்பது என்பது எல்லோருக்குமே அமைந்துவிடாது. புகைப்படக் கலையில் 'ஆட்டோமொபைல் போட்டோகிராபி’ என்பது தனிக் கலை. கார், பைக் போன்ற வாகனங்களை அழகாகப் படமெடுக்க, இந்தியாவில் சில குறிப்பிட்ட புகைப்படக் கலைஞர்களே உள்ளனர். அதில் முக்கியமானவர் சென்னையைச் சேர்ந்த சத்யஜித். யமஹா, ஹோண்டா, ஹூண்டாய், டொயோட்டா, மிட்சுபிஷி, ராயல் என்ஃபீல்டு, டிவிஎஸ், ஜெனரல் மோட்டார்ஸ் என கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்கும் அத்தனை ஆட்டோமொபைல் நிறுவனங்களின் ஆஸ்தான போட்டோகிராபர் இவர்தான்.

''ஆட்டோமொபைல் பற்றித் தெரியாமல், ஆட்டோமொபைல் போட்டோகிராபியில் ஜொலிக்க முடியாது. ஒரு காரை எந்த ஆங்கிளில் இருந்து படம் எடுத்தால், இதன் சிறப்புகள் தெரியும்; இந்த காரின் பலம் இட வசதியா, ஸ்டைலா, இல்லை கிரவுண்ட் கிளியரன்ஸா? என்பது தெரிந்து, அந்த வாகனத்தை ஓட்டிப் பார்த்தால்தான், அதை அழகாகப் படம் பிடிக்க முடியும்'' என்கிறார் சத்யஜித்! அவருடைய ஆல்பத்தில் இருந்து சில... 

ரசிகன்!

கோலார் தங்க வயலில் எடுக்கப்பட்ட படம் இது. பஜேரோ ஒரு ஆஃப் ரோடு கார். காடு, மலை, கடற்கரை என எல்லா மாதிரியான சாலைகளிலும் இந்த காரை ஓட்டலாம் என்பதை, ஒரே படம் மூலம் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த லொக்கேஷனைத் தேர்ந்தெடுத்தேன். லாரிகளில் தண்ணீரைக் கொண்டு வந்து செயற்கையான சேற்றுப் பள்ளத்தை உருவாக்கி இதை ஷூட் செய்தோம். இந்த விஷ§வலுக்கு செம பாராட்டு மழை!

ரசிகன்!
ரசிகன்!

சென்னை, எண்ணூர் அருகே பாழடைந்த கட்டடத்தில் எடுக்கப்பட்ட படம் இது (பல்ஸர் ஸ்டன்ட் மேனியா போட்டோ ஷூட்). ஸ்டன்ட் செய்யும் இடம் 'ரஃப் லுக்’ கொண்ட இடமாக இருந்தால் சரியாக இருக்கும் என்பது என் எண்ணம். எதிர்பார்த்தது போலவே, இந்த இடத்தில் படம் எடுத்தது ஸ்டன்ட்டை இன்னும் ஒரு படி மேலே உயர்த்திக் காண்பித்தது!

ரசிகன்!
ரசிகன்!

டாஃபே டிராக்டருக்காக எடுக்கப்பட்ட விளம்பரம். தேனியில் இந்தப் படத்தை எடுத்தேன். கிராமங்களில் வாகனங்களுக்கு கலர் கலர் விளக்குகள் மாட்டி அலங்கரிப்பார்கள். அதனால்தான், நானும் ஒரு 'ஃபெஸ்டிவல் மூட்’ வர வேண்டும் என்பதற்காக, டிராக்டருக்கு விளக்குகள் மாட்டி அழகு பார்த்தேன்!

ரசிகன்!
ரசிகன்!

'மோஷன் ஷாட்’ எடுப்பது மிகவும் கடினம். இதற்கு 'ரிக்’ தேவை. பொதுவாக, வெளிநாடுகளில் இருந்து ரிக்-ஐ வாடகைக்கு வாங்கி, இங்கே எடுப்பார்கள். ஆனால், இந்த ரிக்-ஐ நானே தயாரித்துப் படம் பிடித்தேன். இந்தியாவிலேயே சொந்தமாக ரிக் வைத்திருப்பது என்னுடைய நிறுவனம்தான் என்பதில் எனக்குச் சின்னப் பெருமை!

ரசிகன்!
ரசிகன்!

தற்செயலாக, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த இரும்பு ட்ரம்மில் எடுக்கப்பட்ட படம் இது. இந்த டிரம் முழுக்க முழுக்க துருப் பிடித்திருந்தது. ஸ்டன்ட் செய்பவரும் சரி, படம் எடுக்கும் நானும் சரி, கொஞ்சம் சாய்ந்தால்கூட 'ஃபுல் டஸ்ட்’-ம் ஒட்டிக் கொள்ளும்!

ரசிகன்!
ரசிகன்!

ஐதராபாத்தில், நிர்மல் டவுன் எனும் இடத்தில் உள்ள கல் குவாரியில் இதைப் படம் எடுத்தேன். படம் பிடிப்பதற்கு முந்தைய நாளே லாரியைக் கொண்டு வந்து நிறுத்தி, பாறைகளை ஷ§ட்டிங்கிற்கு ஏற்றவாறு செட் செய்தோம். புகை மூட்டத்துக்காக, மூன்று லாரிகளை அருகே ஓட விட்டு புழுதியைக் கிளப்பினோம். இதனால், ஒவ்வொரு போட்டோ இடைவெளிக்கு இடையேயும் வாகனத்தை 'பளிச்’ எனக் காட்ட சுத்தம் செய்வதே பெரிய வேலையாக இருந்தது!

ரசிகன்!
ரசிகன்!

ராயல் என்ஃபீல்டு க்ரோம் புல்லட். க்ரோம் என்பதைப் புகைப்படத்தில் காட்டுவது பெரிய சவால். ரிஃப்ளெக்ஷன் விழும். அதனால், பைக்கைச் சுற்றிலும் விளக்குகளை வைத்து, டாப் ஆங்கிளில் ஷூட் செய்தேன்!

ரசிகன்!