Published:Updated:

''80 வயசு வரைக்கும் பைக் ஓட்டணும்!''

சேலம் சூப்பர் மேன்!

டி.எல்.சஞ்சீவிகுமார்  >>எம்.விஜயகுமார்

 ##~##

சேலத்தைச் சேர்ந்த இவர் மாதத்தில் பாதி நாட்கள் இந்தியாவின் ஏதோ ஓரு மூலையில் பைக்கில் 'விஸுக்’கென்று பறந்து கொண்டிருப்பார். உலகில் லேட்டஸ்ட் பைக் எங்கு அறிமுகப்படுத்தினாலும், உடனடியாக இவரிடம் இருந்து மெயிலில் பறக்கிறது ஆர்டர். இதுவரை இவர் மாற்றிய பிஎம்டபிள்யூ பைக்குள் மட்டுமே ஆறு! கைவசம் இருப்பது ஆசைக்கு மூன்று பி.எம்டபிள்யூ, ஆஸ்திக்கு ஒரு சுஸுகி பேண்டிட். இப்போது ஹார்லி டேவிட்சன் ஆர்டர் செய்திருக்கிறார்! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''எல்லாத்துக்கும் காரணம் என் அம்மாதான். ஒன்பதாவது படிக்கிறப்ப வீட்டுக்குத் தெரியாமல் ஃப்ரெண்ட்ஸோட பைக்கை ஓட்டப் பழகிட்டேன். பத்தாவது படிக்கிறப்ப ஒரு புல்லட் பைக் வேணும்னு அம்மாகிட்ட கேட்டேன். ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டது மாதிரி அம்மா அதிர்ச்சியாகி, சைக்கிள்கூட சான்ஸே இல்லைன்னுட்டாங்க.

''80 வயசு வரைக்கும் பைக் ஓட்டணும்!''

அழுது, புரண்டு, உண்ணாவிரதம் எல்லாம் இருந்தும் வேலைக்கு ஆகலை! கடைசியில புல்லட்டுல இருந்து டிவிஎஸ்-50 மொபெட் வரைக்கும் இறங்கி வந்தேன். அப்புறம் தாத்தா, பாட்டி, சொந்தக்காரங்க எல்லாம் ரெக்கமெண்டேஷன் செஞ்சதுல இரக்கப்பட்ட அம்மா, எனக்கு முதன்முதல்ல வாங்கித் தந்த வாகனம் லூனா! அதுவும் எப்படி? டெலிவரி எடுக்கிறப்பயே கம்பெனி சர்வீஸ் சென்டர்லயே கொடுத்து என்னதான் முறுக்கினாலும் 20 கிலோ மீட்டர் வேகத்தைத் தாண்டாத மாதிரி செஞ்சு என் கையில கொடுத்தாங்க. அப்ப எடுத்த சபதம் இது - இனிமே பைக்குன்னு வாங்கினா அது ஃபாரீன் பைக்காத்தான் இருக்கணும்னு முடிவு பண்ணேன்!

''80 வயசு வரைக்கும் பைக் ஓட்டணும்!''

அப்புறம் அமெரிக்காவுல மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடிச்சிட்டு, சொந்த ஊருக்கு வந்து பிசினஸ்ல இறங்கினேன். மொபைல் போன் டீலர் ஷிப் எடுத்துச் சம்பாதிச்சு சேர்த்து வெச்ச காசுல முதல் முதலா 95-ம் வருஷம் ஆறு லட்சம் ரூபாய் விலையில பிஎம்டபிள்யூ 'ஃபன்ட்யூரோ (Funduro) எஃப் 650’ சிசி பைக் வாங்கினேன். சேலத்துல பிஎம்டபிள்யூ வாங்கிய முதல் ஆள் நான்தான். அதுல முதல் சவாரி அம்மாவை உட்கார வெச்சிக்கிட்டுப் போனேன். என்னோட சொந்த உழைப்புல வாங்கின அந்த பைக்கை, முதன் முதலா ஓட்டுனப்ப கிடைச்ச சந்தோஷம் வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதுக்கு அப்புறம் 900 சிசி, 1200 சிசி பைக்குன்னு ஆறு பிஎம்டபிள்யூ வாங்கி வித்துட்டேன். ஆனா, முதல்ல வாங்கின பைக் அப்படியே இருக்கு!

''80 வயசு வரைக்கும் பைக் ஓட்டணும்!''

அடுத்து, 2000-ம் வருஷத்துல இங்கிலாந்தில் இருந்து சுஸுகி பேண்டிட் வாங்கினேன். 4 சிலிண்டர், 1200 சிசி பைக் இது. 11 லட்ச ரூபாய் ஆச்சு. 'டுமாரோ நெவர் டைஸ்’னு ஒரு ஹாலிவுட் படம். அதுல, ஜேம்ஸ் பாண்ட் பிஎம்டபிள்யூ 1200 சிசி பைக்கில் முன்னாடி ஒரு பொண்ணு, பின்னாடி ஒரு பொண்ணை உட்கார வெச்சிக்கிட்டு ஸ்டைலா வருவார். படம் பார்த்த அன்னைக்கே ஆர்டர் பண்ணி ஒரு வாரத்துல தாய்லாந்தில் இருந்து அந்த பைக்கை வாங்கிட்டேன். ஆனா, பின்னாடி என் மனைவியை மட்டும்தான் உட்கார வெச்சிக்கிட்டு அதுல போக முடிஞ்சது...'' என்று குறும்புடன் உச்சு கொட்டியபடி தொடர்ந்தார் விஸு காளியப்பா.

''அதுக்கு அப்புறம் பாங்காக்கில் பிஎம்டபிள்யூ டூரிங் பைக் 1200 ஜிஎஸ் ஒண்ணு வாங்கினேன். அது இப்பவும் பாங்காக்கில் இருக்கிற என்னோட ஆபீஸில இருக்குது. அங்கே போகும்போது அதுலதான் சவாரி! ரொம்ப தூரம் பயணம் செய்யுறதுக்கு அந்த பைக்கை அடிச்சுக்க எதுவுமே கிடையாது! இப்ப ஹார்லி டேவிட்சன் ஆர்டர் பண்ணி இருக்கேன். 15 லட்சம் ரூபாய் ஆகும்னு நினைக்கிறேன்.

நிறைய பேர் நம் நாட்டு ரோட்டுல இந்த மாதிரி பைக்கை எல்லாம் ஓட்ட முடியுதா?ன்னு கேட்கிறாங்க. முன்ன மாதிரி இல்ல நம்ம ரோடுகள். ஆஸ்திரேலியா, ஜெர்மனுக்கு இணையான தரத்துல இப்போ நம்ம ரோடுகள் இருக்குது. நம்ம ரோட்டைப் பத்தி மட்டமா பேசுறவங்க, ஒருதடவை சேலம் டு பெங்களூரு ஃபோர் டிராக்குல பைக்க ஓட்டிப் பாருங்க. ஜெர்மன்ல 'ஆட்டோபான்’ அப்படிங்கிற ஒரு ரோடு இருக்கு. அதுக்கு இணையான ரோடு இது!

ஆனா, ஒண்ணு... எவ்வளவு காசு போட்டு எத்தனை பைக் வாங்கினாலும், ஓவர் ஸ்பீடுல போக மாட்டேன். சாதாரணமா 100 கி.மீ வேகத்தைத் தாண்ட மாட்டேன்.  ஏன்னா, நான் 80 வயசு வரைக்கும் பைக் ஓட்ட ஆசைப்படுறேன்!''

''80 வயசு வரைக்கும் பைக் ஓட்டணும்!''