Published:Updated:

வருகிறார்கள் மோட்டோ ஜீபி வீரர்கள்!

வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ்

சார்லஸ்

வருகிறார்கள் மோட்டோ ஜீபி வீரர்கள்!

2012-ம் ஆண்டு, வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸுக்கு வெள்ளி விழா ஆண்டு! இதன் முதல் கொண்டாட்டமாக பிப்ரவரி 26-ம் தேதி ஆஸ்திரேலியாவில் முதல் ரேஸ் துவங்குகிறது. இதற்கிடையே அணி தாவும் வீரர்களால் அல்லோகலப்படுகிறது வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் அணிகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த ஆண்டு புத்தம் புது அணியாக வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸில் இடம் பிடித்திருக்கும் கிரஸண்ட் சுஸ¨கி அணியில், கடந்த ஆண்டு ஏப்ரில்லா அணியில் இருந்த லியான் கேமியர் இடம் பிடித்திருக்கிறார். அதேபோல், மோட்டோ ஜீபியில் இருந்து சுஸ¨கி விலகி இருக்கும் நிலையில், அதன் மோட்டோ ஜீபி ரேஸ் வீரர் ஜான் ஹாப்கின்ஸ் சூப்பர் பைக் ரேஸுக்குத் தாவியிருக்கிறார்.

வருகிறார்கள் மோட்டோ ஜீபி வீரர்கள்!

மற்றொரு மோட்டோ ஜீபி ரேஸ் வீரரான ஹிரோஷி அயோமா, ஹோண்டா அணியில் இடம் பிடித்திருக்கிறார். கடந்த ஆண்டு யமஹா அணியில் இருந்த யூஜின் லாவெர்ட்டி, ஏப்ரில்லா அணியில் மேக்ஸ் பியாஜியுடன் இணைந்திருக்கிறார்.

நடப்பு சாம்பியன் கார்லோஸ் செக்காவின் அல்தியா ரேஸிங் அணியில், சூப்பர் ஸ்டாக் ரேஸ் பிரிவின் நடப்பு சாம்பியன் டேவின் கிக்லியோனோ இடம் பிடித்திருக்கிறார்.

2012-ம் ஆண்டுக்கான வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸில் மொத்தம் 22 ரேஸ் வீரர்கள் சாம்பியன் பட்டத்துக்கு மோதுகிறார்கள். வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸின் முன்னணி வீரர்களோடு சேர்ந்து, இந்த ஆண்டு ஹிரோஷி அயோமா, ஜான் ஹாப்கின்ஸ் ஆகிய முன்னாள் மோட்டோ ஜீபி வீரர்களும் சேர்ந்திருப்பது ரேஸை விறுவிறுப்பாக்கி இருக்கிறது.

ரசிகர்களுக்கு விர்ர்ர்ரூம் விருந்து காத்திருக்கிறது!