ஒரு வாகனம் 15 ஆண்டுகள் ஆகியிருந்தால், அதற்கு FC எனும் (Fitness Certificate) வாங்கி, அது சாலையில் ஓடுவதற்குத் தகுதியானதுதான் என்பதை உறுதி செய்யவேண்டும். ஆன்லைன், டிரைவிங் ஸ்கூல் அல்லது நேரடியாக ஆர்டிஓ அலுவலகத்துக்கே போய்… என்று பல வழிகளில் FC புதுப்பித்துக் கொள்ளலாம்.
நமது வாசகர் ஒருவர், இந்த மாதம் ஏப்ரல் 1–ம் தேதி, தான் வாங்கிய ஹூண்டாய் காருக்கு FC எனும் (Fitness Certificate) வாங்கி, அதை மீண்டும் புதுப்பிப்பதற்காக Vahan வலைதளத்துக்குச் சென்றிருக்கிறார். அதற்கு இரண்டு நாள்கள் முன்புதான் தனது இன்னொரு நண்பர் ஒருவர், 15 ஆண்டுக்கும் மேலான டாடா காருக்கு FC செய்திருந்தார். அவர் வெறும் 600 ரூபாய் மட்டும்தான் கட்டியிருந்தார். ஆனால், அந்த ஹூண்டாய் காருக்கு 5,000 ரூபாய் கட்டினால்தான் FC செய்யப்படும் என்று வலைதளம் காண்பிக்க… திகைத்துப் போனார் அந்த உரிமையாளர். காரணம், அந்த காருக்கு தேர்டு பார்ட்டியோடு இன்ஷூரன்ஸ் தொகையே 4,000 ரூபாயைத் தாண்டாது. 'வலைதளத்தில் ஏதும் எரராக இருக்குமோ… அல்லது ஏப்ரல் ஃபூல் பண்ணுகிறார்களோ’ என்று அந்த ஹூண்டாய் உரிமையாளர் ஆர்டிஓ அலுவலகத்துக்கே நேரடியாகப் போனால்… அது உண்மைதான். அப்போதுதான் அவருக்கு விஷயமே தெரிந்திருக்கிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆம்! ‘வாகனங்களுக்கு FC புதுப்பித்தல் கட்டணம், 2022 ஏப்ரல் 1–ல் இருந்து அமுலுக்கு வரும்’ என்று போன அக்டோபர் மாதமே ஒரு சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்துவிட்டது மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சகம். அதாவது, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கான FC (Fitness Certificate)–யைப் புதுப்பிப்பதற்கான கட்டணம் இந்த மாதம் ஏப்ரல் 1–ல் இருந்து தொடங்கும் என்று அறிவித்திருந்தது மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சகம்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS15 ஆண்டுக்கு மேற்பட்ட, எந்தெந்த வகையான வாகனங்களுக்கு எவ்வளவு பதிவுக் கட்டணம் ஏறியிருக்குனு பார்க்கலாம்!
ஓன் போர்டு கார்கள்:
இதற்கு முன்பு வரை 600 ரூபாய் கட்டினால் FC கிடைத்துவிடும். இனிமேல் இதற்கு ஜஸ்ட் 5,000 கட்டினால்தான் FC கிடைக்கும்.
டூ–வீலர்கள்:
இதற்கு முன்பு 300 ரூபாயாக இருந்த கட்டணம், இப்போது 1,000 ரூபாய்க்கு உயர்ந்திருக்கிறது.
ஆட்டோக்கள் மற்றும் 3–வீலர்கள்:
3 சக்கர வாகனங்களுக்கு இனிமேல் நான்கு இலக்கங்களில் 3,500 ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும். இதற்கு முன்பு 750 ரூபாயாக இருந்தது.

இறக்குமதி செய்யப்பட்ட கார்கள்:
இதற்கு முன்பு 10,000 ரூபாயாக இருந்த கட்டணம், இப்போது 40,000 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
T போர்டு டிராவல் கார்கள்:
1,000 ரூபாயாக இருந்த பதிவுக் கட்டணம் இப்போது 7,000 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டிருக்கிறது.
பஸ்கள், லாரிகள் மற்றும் ட்ரக்குகள்:
ஹெவி ரக கமர்ஷியல் வாகனங்கள்… அதாவது லாரி, ட்ரக்குகள் போன்றவற்றுக்கு, FC கட்டணம் 12,500 ரூபாய். இதற்கு முன்பு 1,500 ரூபாய். இதுவே நடுத்தர சரக்கு மற்றும் பயணிகள் பேருந்துகளுக்கு 10,000 ரூபாய் கட்டணம். (ஒவ்வொரு கமர்ஷியல் வாகனங்களுக்கும் 8 ஆண்டுகளுக்கு ஒரு முறை FC எடுக்க வேண்டும் என்பது சட்டம்.)
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
FC எடுக்கும் தேதி எக்ஸ்பையர் ஆனாலும், அதற்கும் அபராதம் உண்டு. அதாவது, வாகனம் ரீ–ரிஜிஸ்ட்ரேஷன் செய்யாத ஒவ்வொரு நாளுக்கும் 50 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். இதுவே மாதக்கணக்கில் ஆகும்பட்சத்தில், ஒவ்வொரு மாதத்துக்கும் தனியார் வாகனங்களுக்கு 300 ரூபாயும், கமர்ஷியல் வாகனங்களுக்கு 500 ரூபாயும் பெனால்ட்டி. இதுபோக, வாகனம் பதிவு செய்யும்போது, ஸ்மார்ட் கார்டு வடிவ பதிவுச் சான்றிதழ் வேண்டுமென்றால், எக்ஸ்ட்ரா 200 ரூபாய் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்தக் கடுமையான விலையேற்றம் எதற்காக? ‘Old Car Scrappage Policy’ எனும் திட்டத்தின் கீழ், உங்கள் பழைய வாகனங்களைக் குப்பையில் போட வேண்டும் என்பதற்காகவே இந்த விலையேற்றம்! மாசுக் குறைபாடு மற்றும் BS-6 வாகனங்களுக்கு அனைவரும் மாற வேண்டும் என்பதற்காகவும் மத்திய அரசு இந்த வரியை விதித்திருக்கிறது.

‘எக்ஸ்ட்ரா வரி கட்டிட்டா மாசு எப்படிக் குறையும்’ என்பவர்களுக்கு மத்திய அரசு இப்படிப் பதில் சொல்கிறது. ‘‘இதன் மூலம் வரும் வரிப்பணம், மாசுக் கட்டுப்பாட்டுச் செலவுக்காக மட்டுமே செலவு செய்யப்படும்!’’
அடுத்த ஏப்ரல் 1, 2023–ல் இன்னொன்றும் காத்திருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட உங்கள் வாகனங்களுக்கு, அரசுக்குச் சொந்தமான ‘Automated Fitness Centre’ -ல் `Mandatory Fitness’ எனும் பரீட்சையும் நடக்கக் காத்திருக்கிறது. ‘அபியும் நானும்’ பிரகாஷ்ராஜ் மாதிரி பரீட்சைக்குத் தயாராகிக் கொள்ளுங்கள்!