டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

கிளம்பிற்று காண 'தானே' படை!

கிளம்பிற்று காண 'தானே' படை!

>>அருண் ரூப பிரசாந்த்  >>சொ.பாலசுப்ரமணியம் 

 ##~##

ண்டுகளுக்கு முன் சென்னை 'ஆட்டோ ரிக்ஷா சேலஞ்ச்’ ஆரம்பிக்கபட்டபோது, யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள், அது சென்னையின் முக்கிய அடையாளமாக மாறும் என்று!

கைடின் கையைப் பிடித்துக்கொண்டு, 'போவோமா ஊர்கோலம்...’ என பாடித் திரிவதற்குப் பதிலாக, நல்லதோ கெட்டதோ சவால்களைத் துணிந்து எதிர்கொள்ள வெளிநாட்டினருக்கு அவ்வளவு விருப்பம்!

சென்னையில் ஆரம்பித்து புதுச்சேரி, தஞ்சை, மதுரை, குற்றாலம் வழியாக கேரளா மாநிலத்தில் உள்ள பூவாரை என்ற இடத்துக்கு ஏழு நாட்களில் சென்றடைவதாக அவர்கள் ஒரு திட்டம் போட, நடுவில் வந்த 'தானே’ புயல் தன் கோரத் தாண்டவத்தை அன்றுதான் துவங்கியது. சென்னை ரெஸிடென்சி டவர்ஸ் ஓட்டலில், அந்த புயல் பயம் எதுவும் இல்லாமல் பரபரப்பாக பக்காவாக கிளம்பிக் கொண்டு இருந்தனர் வெளிநாட்டினர்.

கிளம்பிற்று காண 'தானே' படை!

அடாது மழையிலும் விடாது ஆட்டோ ஓட்ட ரெடியாகவே இருந்தது அந்தப் படை. டக் அண்டு ரோல் டீமில் மொத்தம் நாலு பேர். அதில் இருவர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள். சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஜெர்சி அணிந்து, 'மஞ்சதான் எனக்குப் பிடிச்ச கலரு’ என பீலிங்ஸ் காட்டியது ஒட்டுமொத்த டீமும். 'நீங்க ஏன் பாஸ் சிஎஸ்கே ஜெர்சி போட்டு இருக்கீங்க?' எனக் கேட்டதும், அவர்கள் சொன்ன பதில், 'கிரிக்கெட் வேர்ல்டு கப் பைனலில் டோனி அடித்த அந்த சிக்ஸர்... ஓ மை காட்!'

அமெரிக்கா, இத்தாலி, ஆஸ்திரேலியா, சீனா என இனம், மொழி, நாடு கடந்து தமிழ் கூறும் நல்லுலகை ஆட்டோவில் சுற்றிப் பார்ப்பதுதான் அவர்களின் மாஸ்டர் ப்ளான்! ஆனால், வெளியில் சொல்லாத சீக்ரட் பிளான் ஒன்றும் எல்லாருக்கும் இருக்கிறது. அது நம்ம ஊர் சாப்பாட்டை ஒரு கை பார்ப்பது. மசாலா தோசை என்ற பெயரைச் சொன்னாலே மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பாக நாவில் எச்சில் ஊற நிற்கிறது மொத்த கூட்டமும்!

கிரீன் மான்ஸ்டர், ஷிவ சிஸ்டர்ஸ், ரிடெம்ப்ஷன் ரிக்ஷா, இன்டாக்ஸிகேடட், லேட்டின் வைகிங்க்ஸ் என தினுசு தினுசான பெயரோடு எக்கச்சக்க டீம் வந்திருந்தாலும், அங்கே ஸ்டார் அட்ராக்ஷன் டபுள் சின்னைஸ்தான். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அறுபது வயது அழகுப் பாட்டிகள் அவர்கள்! 'பெர்த் நகரில் உள்ள ஒரு புக் கிளப்பில்தான் நாங்கள் சந்தித்தோம். சொல்லி வைத்தது போல எங்கள் எல்லோருக்கும் ரெட்டை நாடி. அதனால்தான் எங்கள் டீமுக்கு  இந்தப் பெயர்!''

'இந்த வயசில ஆட்டோ ஓட்ட முடியுமா?' - கேள்வி நாம் கேட்டு முடிப்பதற்குள் கனலாக வந்து விழுந்தது பதில். ''வயசாயிட்டா இந்த உலகம் ஓடுவதை ஈசி சேரில் உட்கார்ந்து வேடிக்கை பாக்கணும்னு அவசியம் இல்லை. எப்பவும் யாரையும் நம்பாமல் சுதந்திரமாக இருப்போம்!'

அந்த மூன்று சக்கர வண்டியில் கிளம்பியது மூதாட்டிகள் அல்ல... 'தானே’ புயலின் பெண் வடிவங்கள்!