டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

காரா? ஆட்டோவா? BAJAJ RE60

காரா? ஆட்டோவா? BAJAJ RE60

 ##~##
காரா? ஆட்டோவா? BAJAJ RE60

டாடா நானோ அறிமுகப்படுத்தப்பட்ட 2008 ஆட்டோ எக்ஸ்போவில், ரெனோவுடன் சேர்ந்து சின்ன காரைத் தயாரிக்கப் போவதாகச் சொன்ன பஜாஜ், அதன் கான்செப்ட் காரையும் காட்சிக்கு வைத்தது. யார் கண் பட்டதோ தெரியவில்லை, கடந்த நான்கு ஆண்டுகளாக ரெனோ - பஜாஜின் இந்த கான்செப்ட் கார், கான்செப்ட் நிலையைவிட்டு நகரவே இல்லை! இந்த கார் குறித்து எந்தச் செய்திகளையும் வெளியே விடாமல் இருந்தது பஜாஜ். இதற்கிடையே 2012 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ துவங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, 'RE60’ என்ற குறியீட்டு எண் கொண்ட தனது புதிய காரை அறிமுகம் செய்தது பஜாஜ். 

பஜாஜின் பெயரைச் சொல்ல ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த ஒரே வாகனம், இந்த RE60 மட்டும்தான். பார்ப்பதற்கு நான்கு வீல் ஆட்டோ ரிக்ஷா மாதிரி இருக்கிறது என்பதால், கார் என்று சொல்லாமல், '4 வீலர்’ என்று மட்டுமே இதை அழைக்கிறது பஜாஜ்!

காரா? ஆட்டோவா? BAJAJ RE60

பஜாஜின் இந்த 4 சக்கர வாகனத்தின் எடை வெறும் 400 கிலோ மட்டுமே. காரின் பின் பக்கத்தில் 200 சிசி திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. பல்ஸரின் சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு, ப்யூல் இன்ஜெக்ஷன், டிடீஎஸ்-ஐ இன்ஜினைக் கொஞ்சம் மாற்றி இதில் பொருத்தியிருக்கிறார்கள். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்ட இந்த காரின் அதிகபட்ச சக்தி 16-20 bhp -க்குள் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கி.மீ. 2.7 மீட்டர் நீளம், 1.3 மீட்டர் அகலம் என ஆட்டோ ரிக்ஷாவின் சைஸை விட சற்றே அதிகமாக இருக்கிறது RE60. 4 பேர்

காரா? ஆட்டோவா? BAJAJ RE60

உட்கார்ந்து பயணிக்கும் அளவுக்கு காரில் இடம் உண்டு. ஆனால், வசதிகளைப் பொறுத்தவரை ஆட்டோதான். 200 சிசி இன்ஜின் தாங்காது என்பதால், ஏ.ஸி வசதி இல்லை. அதேபோல், பவர் விண்டோஸ் வசதியும் இல்லை. ஆனால், இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கும் கண்ணாடிகளை மேல் நோக்கியும், கீழ் நோக்கியும் நகர்த்த முடியும். அதேபோல், தலை சாய்த்து உட்கார ஹெட் ரெஸ்ட் வசதியும் இல்லை. டேஷ் போர்டில் இடம் பிடித்திருந்த டயல்களும் ஆட்டோவுக்குள் இருப்பது போன்றே இருக்கிறது. இது லிட்டருக்கு 35 கி.மீ வரை மைலேஜ் தரும் என்கிறது பஜாஜ். பெட்ரோல் இன்ஜின் தவிர எல்பிஜி / சிஎன்ஜி மாடல்களையும் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருக்கிறது.

அவுரங்கபாத்தில் உள்ள பஜாஜின் ஆட்டோ தயாரிப்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட இருக்கும் இந்த 4 சக்கர வாகனத்தை, எப்போது விற்பனைக்குக் கொண்டு வருவது என்ற குழப்பம் பஜாஜ் நிறுவனத்துக்கே இருக்கிறது! இதற்கிடையே ரெனோ- நிஸான் நிறுவனம், இந்த வாகனத்தை தங்கள் பிராண்டிலேயே விற்பனை செய்து கொள்ளலாம் என தாராள மனம் காட்டியிருக்கிறது பஜாஜ். ஆனால், பஜாஜின் அழைப்பை இந்த நிறுவனங்கள் காதில் வாங்குமா என்பது சந்தேகமே!