டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

விஷன் டிரைவ்

விஷன் டிரைவ்

விஷன் டிரைவ்
விஷன் டிரைவ்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், தனது மினி பிராண்டை முன் நிறுத்தியதால், ஒரு படி பின்னால் நின்று அடக்கியே வாசித்தது பிஎம்டபிள்யூ! அதனால், பெரிய அறிமுகங்கள் எதுவும் இல்லை. M5 காரையும், விஷன் டிரைவ் சிஸ்டத்தையும் அறிமுகம் செய்ததது பிஎம்டபிள்யூ. ட்வின் டர்போ V8 இன்ஜின் கொண்ட பிஎம்டபிள்யூ M5, 552bhp சக்தி கொண்ட பவர்ஃபுல் கார். இது 0-100 கி.மீ வேகத்தை வெறும் 4.42 விநாடிகளில் கடக்கும். ஆனால், இந்த கார் சென்னைத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட போவதில்லை. ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு நேரடியாக விற்பனை செய்யப்பட இருப்பதால், இதன் விலை 1 கோடி ரூபாயைத் தாண்டும்.

பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்த 'விஷன் டிரைவ் சிஸ்டம்’ கான்செப்ட் காரில் ஏறிவிட்டால் மொபைல் போன், மியூசிக் சிஸ்டம், பாதுகாப்பு சாதனங்கள், மல்ட்டி டச் டிஸ்ப்ளே ஸ்கிரீன் என அனைத்தும் சாஃப்ட்வேர் மூலம் ஒரே நெட்வொர்க்கின் கீழே வந்துவிடும். காருக்குள் இருக்கும்போது உங்கள் மொபைல் போனுக்கு அழைப்பு வந்தால், அது காரில் உள்ள டிஸ்ப்ளே ஸ்கீரினில் ஃப்ளாஷ் ஆகும். ப்ளூ-டூத் மூலம் பேசலாம்.

இது தவிர, பியானோ தயாரிப்பு நிறுவனமான 'ஸ்டெயின்வே சன்ஸ்’ டிசைன் செய்த 7 சீரிஸ் காரையும் அறிமுகம் செய்தது பிஎம்டபிள்யூ. ஸ்டெயின்வே டிசைன் செய்திருக்கும் இந்த லிமிடெட் எடிஷன் கார், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து விற்கப்படும் என அறிவித்திருக்கிறது பிஎம்டபிள்யூ!