டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

அந்தரத்தில் பறந்த பீட்!

அந்தரத்தில் பறந்த பீட்!

 ##~##
அந்தரத்தில் பறந்த பீட்!

ந்தரத்தில் பறக்கும் பிளாஸ்டிக் செவர்லே பீட், இத்தாலிய நடன அழகிகள், அமெரிக்க இசைக் குழு என ஆட்டோ எக்ஸ்போவையே அதகளப்படுத்தியது ஜெனரல் மோட்டார்ஸ். மொத்தம் 15 கார்கள் ஜெனரல் மோட்டார்ஸ் அரங்கத்துக்குள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. இதில், விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் எம்பிவி காரும் அடக்கம். இது, சீனாவின் 'உள்ளிங் மோட்டார்ஸ்’ நிறுவனத்தின் சி-100 கார்தான். உள்ளிங் நிறுவனத்தை வாங்கி விட்ட ஜெனரல் மோட்டார்ஸ், செயில் காரையும் இந்த எம்பிவி காரையும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது. 

செவர்லே கார்களுக்கே உரித்தான டிசைன் இல்லை என்றாலும், எம்பிவி கார்களுக்கே உரிய எளிமையான டிசைனுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது இந்த செவர்லே எம்பிவி. ஏழு பேர் உட்காரக்கூடிய இந்த காரில், பின் இருக்கைகளில் ஆட்கள் இல்லை என்றால், அனைத்தையும் வெளியே எடுத்துவிட்டு, பொருட்களை வைத்துக்கொள்ள முடியும். 94.6 bhp சக்தி கொண்ட 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 1.3 லிட்டர் மல்ட்டிஜெட் டீசல் இன்ஜினையும் இதில் அறிமுகப்படுத்த இருக்கிறது செவர்லே. டொயோட்டா இனோவா மற்றும் மஹிந்திரா ஸைலோ கார்களுடன் போட்டிப் போட இருக்கும் இந்த கார், 6 லட்ச ரூபாய் விலைக்கு விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. செவர்லேவின் திட்டப்படி 6 லட்ச ரூபாய் விலைக்கு விற்பனைக்கு வந்தால், இது எம்பிவி மார்க்கெட்டில் நம்பர் ஒன் இடத்தை எளிதில் பிடித்துவிடும்.

அந்தரத்தில் பறந்த பீட்!

செவர்லே நியோ-3 டவேரா

சென்னை உள்ளிட்ட இந்தியாவின் எட்டு நகரங்களில் BSP-IV எமிஷன் அளவுகோல் வந்துவிட்டதால், இந்த நகரங்களில் டவேரா காரின் விற்பனையை நிறுத்தி வைத்திருந்தது செவர்லே. விற்பனையை மீண்டும் துவக்க, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் BS-IV டவேரா மாடலை அறிமுகம் செய்தது. டவேரா நியோ-3 எனப் பெயரிடப்பட்டு இருக்கும் இந்த காரில், நம்நாட்டு நிறுவனமான சோனாலிக்காவின் 2 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. புதிய டவேராவில் புதிய டிசைன் ஹெட் லைட், ஸ்பிளிட் கிரில், புதிய பம்பர் என காரின் வெளித்தோற்றத்தில் சின்னச் சின்ன மாற்றங்களும் இடம் பிடித்திருக்கிறது.

அந்தரத்தில் பறந்த பீட்!

புதிய கேப்டிவா

புதிய கேப்டிவாவையும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்தது செவர்லே. ஆடி கார்களில் இருப்பது போல, கேப்டிவாவின் முன்பக்க கிரில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஹெட் லைட்டும் நீளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் மோட்டார்ஸ் அரங்கத்துக்குள் பார்வையாளர்களை அதிகம் ஈர்த்தது 'ஸ்டிங்ரே’ எனும் கான்செப்ட் கார்தான். சிஸர் ஸ்டைல் கதவுகள், ரியர் வியூ கண்ணாடிகளுக்குப் பதில் கேமரா, நைட் விஷன் தொழில்நுட்பம், எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பெட்ரோல் இன்ஜின் என ஸ்டிங்ரே காரின் சிறப்பம்சங்கள் அசத்துகிறது. இது தவிர, சிங்கிள் சீட்டர் எலெக்ட்ரிக் EN-V கான்செப்ட் வாகனத்தையும் காட்சிக்கு வைத்து, கூட்டம் சேர்த்தது ஜெனரல் மோட்டார்ஸ். செக்வே நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த கான்செப்ட் வாகனத்தில் இருப்பது எலெக்ட்ரிக் மோட்டார். இதில், ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர் பாக்ஸ் வசதி உண்டு. ''2030-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் 60 சதவிகிதம் பேர் நகரத்தில் வசிப்பார்கள். அப்போது போக்குவரத்து நெருக்கடிகளில் சிக்காமல் பயணிக்க, இது போன்ற வாகனங்கள்தான் ஒரே தீர்வாக இருக்கும்'' என்று இந்த வாகனத்தின் புகழைப் பாடியது ஜெனரல் மோட்டார்ஸ்!