டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

6 கோடி லிமோசின்

6 கோடி லிமோசின்

6 கோடி லிமோசின்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் தன்னந்தனியாகக் கடை விரித்திருந்தது மெர்சிடீஸ் பென்ஸ். மொத்தம் 18 கார்கள் பென்ஸ் அரங்கத்துக்குள் கம்பீரமாகக் காட்சியளித்தன. எஸ்எல்எஸ் ஏஎம்ஜி ரோட்ஸ்ட்டர் காரையும், புதிய 'எம் கிளாஸ்’ காரையும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஸ்பெஷலாக அறிமுகப்படுத்தியது. சின்ன காரான 'ஏ-கிளாஸ்’ கான்செப்ட் காரையும் காட்சிக்கு வைத்திருந்தது பென்ஸ்.

டெல்லியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஹேட்ச்பேக் காரான இந்த 'ஏ-கிளாஸ்’ கான்செப்ட் கார், இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது செடான் காராக இருக்கும் என்கிறது பென்ஸ். ஆனால், இது இந்தியாவில் விற்பனைக்கு வர குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது ஆகும். மேலும், இது இந்தியாவில் தயாரிக்கப்பட இருப்பதால், விலை 20 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

6 கோடி லிமோசின்

பென்ஸ் அரங்கத்துக்குள் வந்தவர்கள் அனைவரையும் படம் பிடிக்க வைத்த கார் என்றால், அது 'எஸ்எல்எஸ் ஏஎம்ஜி ரோட்ஸ்ட்டர்’ தான். இந்த காரில் இருப்பது 'கல் விங்’ டோர்ஸ் என்பதால் பறவை சிறகை விரிப்பதுபோல அதன் கதவுகள் திறப்பதைப் பார்ப்பதற்கே பெரும்கூட்டம் கூடியது. 6.2 லிட்டர் V8 இன்ஜின் கொண்ட இந்த கார், அதிகபட்சமாக 562 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. இது 0-100 கி.மீ வேகத்தை வெறும் 3.8 விநாடிகளில் கடந்துவிடுமாம்.

6 கோடி லிமோசின்

புதிய 'எம் கிளாஸ்’ என அறிமுகப்படுத்தப்பட்ட காரின் வெளிப்பக்கத்தில், க்ரோம் பூச்சைத் தவிர பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. 3 லிட்டர் V6 இன்ஜின் கொண்ட புதிய எம் கிளாஸ், பழைய காரைவிட 30 bhp சக்தி அதிகமாக 255 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது

நீளமான எஸ்-600 புல்மேன் லிமோசின் காரையும் காட்சிக்கு வைத்தது பென்ஸ். குண்டு துளைக்காத காரான இதன் நீளம் 6.3 மீட்டர். V12 இன்ஜின் கொண்ட இந்த காரின் அதிகபட்ச சக்தி 517 bhp. 6 கோடி ரூபாய்க்கு விவிஐபிக்களுக்கு மட்டுமே விற்கப்படும் இந்த காரைத்தான் இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பயன்படுத்துகிறார்!