டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

ஓட ஓட ஓட... காரு குறையல..!

ஓட ஓட ஓட... காரு குறையல..!

ஓட ஓட ஓட... காரு குறையல..!

னவரி மாதம் டெல்லியில் இருந்து அப்படியே டெட்ராய்ட்டுக்கு ஷிஃப்ட் ஆனது ஆட்டோமொபைல் உலகம். ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு, கிரைஸ்லர் என உலக ஆட்டோமொபைல் வல்லரசுகளின் பிறப்பிடமான டெட்ராய்ட் ஆட்டோ ஷோவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பார்வையாளர்கள் குவிந்திருந்தனர். 'ஓட ஓட காரு குறையல...’ என்று பாடாத குறையாக, இந்த ஆட்டோ எக்ஸ்போவில் 40 புதிய கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஏராளமான கான்செப்ட் கார்களும், ஹைபிரிட் கார்களும், பைக்குகளும் டெட்ராய்ட்டை அலங்கரித்தன. இந்த ஆட்டோமொபைல் கண்காட்சியில் கண்ணைக் கவர்ந்த கார்களின் அணிவகுப்பு இதோ....

செவர்லே ட்ரூ 140S கான்செப்ட்

ஓட ஓட ஓட... காரு குறையல..!

இளைய தலைமுறையை ஈர்க்க, கவர்ச்சியாக கார்களை டிசைன் செய்யும் ஜெனரல் மோட்டார்ஸ், டெட்ராய்ட்டில் தனது 'செவர்லே ட்ரூ 140எஸ் கான்செப்ட்’ கார் மூலம் கவனம் ஈர்த்தது. க்ரூஸ் மற்றும் வோல்ட் கார்கள் தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில்தான் இந்த கான்செப்ட் காரும் தயாரிக்கப்பட இருக்கிறது. ''நான்கு பேர் பயணிக்கக் கூடிய இந்த கார் விற்பனைக்கு வர, குறைந்தது 3 அல்லது 4 ஆண்டுகள் ஆகும்!'' என்கிறது ஜெனரல் மோட்டார்ஸ்.

டாடா இமோ

ஓட ஓட ஓட... காரு குறையல..!

டெல்லியில் தனது பழைய கான்செப்ட் காரான பிக்ஸல் காரைக் காட்சிக்கு வைத்த டாடா, டெட்ராய்ட்டில் புத்தம் புது இமோ (eMO) கான்செப்ட் காரை காட்சிக்கு வைத்திருந்தது. 'எலெக்ட்ரிக் மொபிலிட்டி’ என்பதன் சுருக்கமே இமோ! ஆனால் இந்த கான்செப்ட் காரை அப்படியே தயாரிக்கும் எண்ணம் டாடாவுக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே! 'டாடாவின் தரத்தை உலகத்துக்குக் காட்டவே இந்த கான்செப்ட் கார்’ என்கிற டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் கெவின் ஃபிஷர் ஸ்டேட்மென்டே சந்தேகத்துக்குக் காரணம். எலெக்ட்ரிக் காரான இதில் நான்கு பேர் உட்காரக் கூடிய அளவுக்கு இடம் உண்டு.

டாட்ஜ் டார்ட்

ஓட ஓட ஓட... காரு குறையல..!

கிரைஸ்லர் நிறுவனத்தின் அங்கம்தான் டாட்ஜ். 37 ஆண்டுகளுக்கு முன்பு டார்ட் கார்களின் தயாரிப்பை நிறுத்திய டாட்ஜ், இப்போது மீண்டும் டார்ட்டுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. புதிய டாட்ஜ், ஸ்டைலில் அசத்துகிறது. ஆல்ஃபா ரோமியோவின் 1.4 லிட்டர் அல்லது கிரைஸ்லரின் 2.4 லிட்டர் இன்ஜினுடன் விற்பனைக்கு வர இருக்கிறது டாட்ஜ். ஆனால், அமெரிக்கா தவிர மற்ற நாடுகளில் 'டார்ட்’ என்கிற பெயரில் இந்த கார் விற்பனைக்கு வர முடியாது. 'டார்ட்’ என்கிற பெயருக்குக் காப்புரிமை செய்து வைத்திருக்கிறது ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனம்!

செவர்லே மிரே

ஓட ஓட ஓட... காரு குறையல..!

செவர்லேவின் மற்றுமொரு கான்செப்ட் ஹைபிரிட் காரான மிரே, டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. கொரியாவில் செவர்லே பிராண்ட் அறிமுகப்படுத்தப்பட்டதன் நினைவாகத் தயாரிக்கப்பட்ட கார் என்பதால், இதன் டிசைனில் கொரிய வாசம் அதிகம்! 1.4 லிட்டர் டர்போ சார்ஜ்டு இன்ஜின், மற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரையும் கொண்டிருக்கிறது செவர்லே மிரே!

ஓட ஓட ஓட... காரு குறையல..!
ஓட ஓட ஓட... காரு குறையல..!