டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

ஒப்புக்கு செய்யப்பட்ட ஒப்பனை மாற்றங்கள்!

ஒப்புக்கு செய்யப்பட்ட ஒப்பனை மாற்றங்கள்!

சரோஜ்கண்பத்  >>கே.கார்த்திகேயன் 

 உலகெங்கும் ஃபியட் கார்கள் தனித் தடம் பதித்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால், நம் நாட்டில் அதற்குக் கிடைக்க வேண்டிய இடம் இன்னமும் கிடைக்கவில்லை. இதன் 1.3 மல்டிஜெட் டீசல் இன்ஜின் புகழை, ஜப்பானியர்களே தலை சாய்த்து ஏற்றுக்கொண்டார்கள். தொழில்நுட்பத்தால் அடைய முடியாத வெற்றியை, சந்தைப்படுத்தும் யுக்திகளைக் கொண்டு ஃபியட் அடைய முயற்சித்திருக்கிறது.

ஒப்புக்கு செய்யப்பட்ட ஒப்பனை மாற்றங்கள்!

ஹோண்டா துவங்கி ஃபோக்ஸ்வாகன் வரை, விற்பனையை உயர்த்த விலைக் குறைப்பு வித்தையைச் செய்யும் அளவுக்கு இறங்கி வந்துவிட்டன. மற்ற கார் நிறுவனங்களோ, கூடுதல் அம்சங்களோடு புதிய வேரியன்ட்டை அறிமுகப்படுத்துவதுடன், விலையையும் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டு விட்டன. அந்த வரிசையில் ஃபியட் முழுமையாகச் சேரவில்லை என்றாலும், ஓரளவு சேர்ந்திருக்கிறது. ஆம், விலையை சற்றே அதிகரித்து விட்டு ஃபியட், புதிய புன்ட்டோவையும், புதிய லீனியாவையும் களம் இறக்கியிருக்கிறது. 

ஒப்புக்கு செய்யப்பட்ட ஒப்பனை மாற்றங்கள்!

புன்ட்டோ மற்றும் லீனியாவில் நடந்திருக்கும் மாற்றங்கள், பார்த்த உடனே தெரியாது... பார்க்கப் பார்க்கத்தான் தெரியும்! முதலில் லீனியாவைப் பார்த்துவிடலாம். லீனியாவின் வெளித் தோற்றதில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் எதுவும் இல்லை. ஆனால், கார் கதவைத் திறந்தால், இரட்டை வண்ணத்தில் ஒளிரும் உள்ளலங்காரம் காரைப் பிரகாசமாகவும் புதிதாகவும் காட்டுகிறது. ஆனால், உண்மையில் அங்கேயும் பெரிய மாற்றங்கள் இல்லை.

'டி.ஜெட்’ மாடலில் இருந்த 16 இன்ச் அலாய் வீல், லீனியா எமோஷனுக்கு இடம் மாறியிருக்கிறது. ஆட்டோமேட்டிக் ஹெட் லைட்ஸ் (காரை ஓட்டிக்கொண்டு இருக்கும்போது வெளிச்சம் குறைந்து விட்டால், ஹெட் லைட்ஸ் தானாகவே ஒளிரத் துவங்கிவிடும்). ஆட்டோமேட்டிக் வைப்பர்ஸ் (மழை பெய்தால், தானாகவே வேலை செய்யும்) ஆகியற்றை லீனியாவுக்குப் பொருத்தி, ஃபியட் அதன் கவர்ச்சியைக் கூட்டியிருக்கிறது. ஏ.ஸி யூனிட்டிலும் மாறுதல்கள் செய்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, இதன் கிரவுண்ட் கிளியரன்ஸும் கூடியிருக்கிறது. அதாவது, இப்போது 185 மிமீ ஆக உயர்ந்திருக்கிறது. 1.3 மல்டிஜெட் டீசல் இன்ஜின் மற்றும் 1.4 மல்டிஜெட் டீசல் இன்ஜின் என்று இரண்டு விதமான இன்ஜின்களையும் ஃபியட் இப்போது வேறுவிதமாக ட்யூன் செய்திருப்பதால், சற்றே கூடுதலான மைலேஜ் கிடைக்கும். காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் உயர்ந்திருப்பதால், கார் அலைபாயும் என்று எதிர்பார்த்தால்... அது தவறு! பியட் இதை அற்புதமாகச் சமாளித்திருக்கிறது!

ஒப்புக்கு செய்யப்பட்ட ஒப்பனை மாற்றங்கள்!

லீனியாவைப் போலவே புன்ட்டோவின் கிரவுண்ட் கிளியரன்ஸும் அதிகமாகியிருக்கிறது. ஏ.ஸி மேம்பட்டு இருக்கிறது. இரட்டை வண்ண உள்ளலங்காரம் கவர்ச்சியைக் கூட்டுகிறது. விலை குறைவான ஆரம்ப வேரியன்ட்டிலேயே இப்போது மியூசிக் சிஸ்டம் மற்றும் 'சென்டர் லாக்’ சேர்க்கப்பட்டு உள்ளன. வழக்கம் போல புன்ட்டோவின் ஓட்டுதல் சுகம், அப்படியே புதிய புன்ட்டோவிலும் தொடர்கிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைவிட இதன் மல்டிஜெட் டீசல் இன்ஜின் சிறப்பாகச் செயல்படுகிறது!

ஒப்புக்கு செய்யப்பட்ட ஒப்பனை மாற்றங்கள்!