டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

ராலி கார்!

ராலி கார்!

ராலி கார்!

ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் அங்கமும், செக் குடியரசைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா, 'ஃபேபியா ஸ்கவுட்’ எனும் எம்பிவி காரைக் காட்சிக்கு வைத்திருந்தது. விரைவில் இந்த காரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் ஸ்கோடா நிறுவனம், இதில் ரேபிட் காரில் இருக்கும் 1.6 லிட்டர் டீசல் இன்ஜினைப் பொருத்த இருக்கிறது. கிளைமேட் கன்ட்ரோல் ஏ.ஸி, 8-ஸ்பீக்கர் ஆடியோ, 16 அலாய் வீல் மற்றும் ஹலோஜன் ஹெட் லைட்ஸ் என ஏராளமான ஹை-டெக் சிறபம்சங்களை இதில் அறிமுகப்படுத்துகிறது ஸ்கோடா.

ஸ்கவுட் காரைத் தவிர, 'RS2000’ எனும் கான்செப்ட் காரையும் காட்சிக்கு வைத்திருந்தது. ஸ்கோடா, 'எஸ்2000’ ராலி போட்டியில் வெற்றி பெற்றதன் நினைவாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் கார்தான் ஸிஷி2000.

ராலி கார்!

மான்டி கார்லோ ராலி மற்றும் ரேஸ் போட்டிகளில் ஸ்கோடா பங்கேற்று 110 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, ஃபேபியா உள்ளிட்ட ஏராளமான ரேஸ்/ராலி கான்செப்ட் கார்களைக் காட்சிக்கு வைத்திருந்தது ஸ்கோடா!