டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

ஹாட்ரிக் அடிப்பாரா வெட்டல்?

ஹாட்ரிக் அடிப்பாரா வெட்டல்?

 ##~##

சீசனுக்குத் தயாராகிவிட்டது ஃபார்முலா-1 உலகம். மார்ச் 16-ம் தேதி இந்த ஆண்டுக்கான முதல் ரேஸ், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆல்பர்ட் பார்க் மைதானத்தில் துவங்குகிறது. ரேஸில் கலந்து கொள்ளும் 12 அணிகளுமே புது கார்களுடன் முதல் ரேஸுக்குத் தயாராகி விட்டன. 

ஹாட்ரிக் அடிப்பாரா வெட்டல்?

2012-ம் ஆண்டு ஃபார்முலா-1 அணிகளின் லிஸ்ட்டில் காட்டர்ஹாம், மருஸியா ஆகிய புதுப் பெயர்கள் இடம் பிடித்திருக்கின்றன. காட்டர்ஹாம் நிறுவனத்தை ஏர் ஆசியா நிறுவன அதிபர் டோனி ஃபெர்னாண்ட்ஸ் வாங்கிவிட்டதால், கடந்த ஆண்டு லோட்டஸ் அணியாக இருந்தது காட்டர்ஹாம் என பெயர் மாறியிருக்கிறது. அதேபோல், வெர்ஜீனியா அணியின் பெரும்பான்மை பங்குகளை ரஷ்ய நிறுவனமான மருஸியா நிறுவனம் வாங்கிவிட்டதால், அந்த அணியின் பெயரும் மாறியிருக்கிறது. சஹாரா ஃபோர்ஸ் இந்தியா அணியில் இந்த முறை ஆட்ரியன் சுட்டில் இல்லை. அவருக்குப் பதில் 2011-ம் ஆண்டு ஃபோர்ஸ் இந்தியா அணியின் டெஸ்ட் டிரைவராக இருந்த நிக்கோ ஹல்க்கன்பர்க் மெயின் வீரராக இடம் பிடித்திருக்கிறார். இவருடன் பால் டி ரெஸ்ட்டா களம் இறங்குகிறார். வழக்கம்போல ஃபோர்ஸ் இந்தியா அணியில் இந்திய வீரர்கள் யாரும் இல்லை என்பதோடு கரூண் சந்தோக், நரேன் கார்த்திகேயன் இருவருமே இந்த ஆண்டுக்கான ஃபார்முலா-1 ரேஸில் இல்லை.

ஹாட்ரிக் அடிப்பாரா வெட்டல்?

ஃபார்முலா-1 முன்னாள் சாம்பியன் கிமி ராய்க்கோனன், லோட்டஸ் ரெனோ அணியின் சார்பில் மீண்டும் ஃபார்முலா-1 ரேஸுக்கு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரெனோ நிறுவனம் இந்த ஆண்டு புதுமுக வீரரும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவருமான ரோமய்ன் கிராஸினுக்கு வாய்ப்பளித்திருக்கிறது.

ஹாட்ரிக் அடிப்பாரா வெட்டல்?

அணிகள் மாறினாலும், வீரர்கள் மாறினாலும் இந்த ஆண்டு மிகவும் பலம் வாய்ந்த அணியாக இருப்பது ரெட்புல் அணிதான். 3 ஆண்டுகளாக செபாஸ்ட்டியன் வெட்டல், மார்க் வெப்பர் என வீரர்கள் யாரும் மாறாமல் இருப்பது இந்த அணியின் மிகப் பெரிய பலம். அதேபோல், திறமையான டெக்னிக்கல் டீமைக் கொண்ட அணியாகவும் முதல் இடத்தில் இருக்கிறது ரெட்புல். 2012 சீசனுக்கான ரெட்புல் அணியின் ரேஸ் கார் பிப்ரவரி 7--ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த கார் எவ்வளவு வேகம்வரை பறக்கும் என்ற ரிஸல்ட்டைத் தெரிந்து கொள்ள அனைத்து ஃபார்முலா-1 அணிகளுமே காத்துக் கொண்டு இருக்கின்றன.

மெக்லாரன், ஃபெராரி, லோட்டஸ் ரெனோ என அனைத்து முன்னணி அணிகளுமே 'டார்க்கெட் ரெட்புல்’ என்று ரெட்புல் அணியைக் குறிவைத்தே களம் இறங்குகின்றன. லூயிஸ் ஹாமில்ட்டன், மார்க் வெப்பர், ஜென்சன் பட்டன், ஃபெர்னாண்டோ அலான்சோ என முன்னணி வீரர்கள் அனைவருமே செபாஸ்ட்டியன் வெட்டலை வீழ்த்தவே வியூகம் வகுக்கிறார்கள்.

ரெட்புல் அணி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் முதலிடத்தைப் பிடிக்குமா, செபாஸ்ட்டியன் வெட்டல் ஹாட்ரிக் சாம்பியன் பட்டத்தை வெல்வாரா என்கிற விறுவிறு ரேஸிங் சேஸிங்குக்குத் தயாராகிறது ஃபார்முலா-1 2012 சீசன்!