டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

பரவும் ஃப்ளூயிடிக்!

பரவும் ஃப்ளூயிடிக்!

பரவும் ஃப்ளூயிடிக்!

ப்ளூயிடிக் டிசைனை சொனாட்டாவுக்கும், எலான்ட்ராவுக்கும் பரவ விட்டிருக்கிறது ஹூண்டாய். இதுவரை இயான், ஐ10, ஐ20, வெர்னா என சின்ன கார்களில் அதிகக் கவனம் செலுத்திய ஹூண்டாய், சொகுசு கார் மார்க்கெட்டில் பட்டும் படாமல் இருந்து வந்தது. விற்பனையில் இருந்த எலான்ட்ரா காரையும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டது ஹூண்டாய். மீண்டும் இப்போது, சொகுசு கார் மார்க்கெட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கும் ஹூண்டாய், ஃப்ளுயிடிக் எலான்ட்ராவையும், சொனாட்டாவையும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியது.

டிசைன் புதுமையைத் தவிர, காரின் உள்ளே ஏராளமான சிறப்பம்சங்களையும் சேர்த்திருக்கிறது ஹூண்டாய். சீட்டுகளை ஆட்டோமேட்டிக்காக அட்ஜஸ்ட் செய்யும் வசதி, புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆறு காற்றுப் பைகள், பார்க்கிங் சென்ஸார், ரிவர்ஸ் கேமரா என வசதிகள் புதிதாக இடம் பிடித்திருக்கின்றன. 2.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 198 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. சொனாட்டாவில் டீசல் இன்ஜின் இப்போதைக்கு இல்லை.

பரவும் ஃப்ளூயிடிக்!

புதிய எலான்ட்ராவை இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது ஹூண்டாய். 140 bhp சக்தியை வெளிப்படுத்தும் பெட்ரோல், டீசல் இரண்டு இன்ஜின் கொண்ட மாடல்களுமே விற்பனைக்கு வருகின்றன. இதில் வெர்னா, சொனாட்டாவில் உள்ள பல்வேறு வசதிகளை இணைத்துக் கொடுக்க இருக்கிறது ஹூண்டாய்.

பரவும் ஃப்ளூயிடிக்!

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் உலகிலேயே முதன்முறையாக கான்செப்ட் எம்பிவி காரை அறிமுகம் செய்தது ஹூண்டாய். 'ஹெக்ஸா ஸ்பேஸ்’ என அழைக்கப்படும் இதை வழக்கமான எம்பிவி கார்களைப் போல் டிசைன் செய்யாமல், மிகவும் ஸ்டைலாக டிசைன் செய்திருக்கிறது. இருக்கைகளை அறுகோண வடிவில் வடிவமைத்திருக்கிறது ஹூண்டாய். ஒரே வரிசையாக இல்லாமல், முன்னுக்குப் பின்னாக ஏழு இருக்கைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதனால், காரில் இருப்பவர்கள் வசதியாக உட்கார்ந்து பயணிக்க முடியும் என்கிறது ஹூண்டாய். இந்த கார் எப்போது விற்பனைக்கு வரும் என்பதை அறிவிக்கவில்லை. ஆனால், 7-11 லட்ச ரூபாய்க்குள் இந்த காரை விற்பனை செய்யத் திட்டமிட்டு வருகிறது ஹூண்டாய்!