டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

புதிய யுவா!

புதிய யுவா!

புதிய யுவா!

ஸ்பார்க், பீட், யுவா ஆகிய கார்களைத் தொடர்ந்து, செவர்லே அறிமுகப்படுத்த இருக்கும் புதிய ஹேட்ச்பேக் கார் 'செயில்,’ ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மே மாதம் முதல் விற்பனைக்கு வர இருக்கிறது இந்த செயில். சீனாவின் உள்ளிங் மோட்டார்ஸின் கார் இது. ஆகையால் இது பீட், க்ரூஸ் போன்று செவர்லேவின் புதிய டிசைன் கான்செப்ட்டில் வடிவமைக்கப்படவில்லை. இருப்பினும், நீளமான இருக்கைகளும், இரட்டை கிரில்லும் செயிலைப் புதிதாக டிசைன் செய்யப்பட்ட கார் போன்றே காட்டுகிறது.

புதிய யுவா!

வீல் பேஸ் 2465 மிமீ என்பதால், காருக்குள் ஐந்து பேர் வசதியாக உட்கார்ந்து பயணிக்கக்கூடிய அளவுக்கு தாராளமாக இருக்கிறது. விலையைக் குறைப்பதற்காக, இந்த காரில் எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங்குக்குப் பதில் ஹைட்ராலிக் பவர் ஸ்டீயரிங் பொருத்தப்பட்டுள்ளது. 'செயில் யுவா’ என்ற பெயரில் இந்தியாவில் இந்த கார் விற்பனை செய்யப்பட இருக்கிறது. முதலில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட மாடலும், இந்த ஆண்டு இறுதியில் ஃபியட்டின் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

செயில் காரின் பேஸிக் மாடலை, 4 லட்ச ரூபாய்க்குள் கொண்டு வந்து விற்பனையைக் கூட்ட திட்டமிட்டிருக்கிறது செவர்லே!