Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:
மோட்டார் நியூஸ்

டீசல் கார்களின் விலை உயருமா?

மோட்டார் நியூஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வரும் பட்ஜெட்டில் டீசல் கார்களுக்கான கலால் வரியை அதிகரிக்க திட்டமிட்டு இருக்கிறது மத்திய அரசு.  வரி அதிகரித்தால், கிட்டத்தட்ட 80 ஆயிரம் ரூபாய் வரை டீசல் கார்களின் விலை உயரும் என்ற செய்தி, இந்திய ஆட்டோமொபைல் உலகை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. லாரி உள்ளிட்ட கமர்ஷியல் வாகனங்களை விட்டுவிட்டு, சொந்த உபயோகத்துக்கு டீசல் கார்களைப் பயன்படுத்துவர்களுக்கு மட்டுமே இந்த கூடுதல் வரி விதிப்பு என தகவல்கள் பரவுகிறது. ''டீசல் கார்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டால், டீசல் கார் மார்க்கெட் அப்படியே விழுந்துவிடும். இது டீசல் கார் மார்க்கெட்டை அடியோடு நசுக்கும் முயற்சியாக அமைந்துவிடும்'' என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் இந்திய ஆட்டோமொபைல் சங்கத்தின் மூத்த இயக்குனர் (SIAM) சுகாட்டோ சென். டீசல் கார் வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள், பட்ஜெட்டுக்கு முன்னால் கார் வாங்கினால் சில பல ஆயிரங்களை மிச்சப்படுத்தலாம்!

மீண்டும் முதலிடத்தைப் பிடித்த ஜெனரல் மோட்டார்ஸ்!

மோட்டார் நியூஸ்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கம்பெனியே திவால் என நோட்டீஸ் விட்ட ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ஃபீனிக்ஸ் பறவை போல உயிர்த்தெழுந்திருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் 90 லட்சத்துக்கும் மேலான கார்களை விற்பனை செய்து உலகின் நம்பர் ஒன் கார் தயாரிப்பு நிறுவனமாக முதலிடம் பிடித்திருக்கிறது ஜெனரல் மோட்டார்ஸ். இதில், 40.75 லட்சம் செவர்லே பிராண்டு கார்கள் மட்டும் விற்பனையாகி இருக்கின்றன. ஜெனரல் மோட்டார்ஸை பின்னால் தள்ளிவிட்டு 2008 முதல் முதலிடத்தில் இருந்து வந்த டொயோட்டா நிறுவனம், ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் விற்பனையில் பின்தங்கிவிட்டது. இரண்டாம் இடத்தை ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் பிடித்திருக்கிறது. 2011-ம் ஆண்டு மட்டும் 81 லட்சம் கார்களை விற்பனை செய்திருக்கிறது ஃபோக்ஸ்வாகன். ''ஆனால் உண்மையிலேயே நாங்கள்தான் முதலிடம் பிடித்திருக்கிறோம். ஜெனரல் மோட்டார்ஸ் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் சீன கார்களை எல்லாம் சேர்த்துக்கொண்டு விற்பனையை உயர்த்திக் காட்டியிருக்கிறது'' என்கிறது ஃபோக்ஸ்வாகன். 70.9 லட்சம் கார்களை விற்பனை செய்து, மூன்றாம் இடத்துக்குப் பின்தங்கியிருக்கிறது டொயோட்டா!

உற்சாக விழா!

மோட்டார் நியூஸ்

ஜனவரி மாதம் இந்தியாவெங்கும் கொண்டாடப்பட்ட சாலை பாதுகாப்பு வாரத்தை, கொஞ்சம் வித்தியாசமாகக் கொண்டடியது திருவள்ளூர் மாவட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம். மாவட்டம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வகையில், ஒரு பேருந்தில் இருக்கைகளை எல்லாம் அகற்றிவிட்டு, உள்ளே ஒரு மினி கண்காட்சிக் கூடத்தையே உருவாக்கி இருந்தார்கள். அதில், சாலை விபத்துகள் எதனால் ஏற்படுகின்றன; பாதசாரிகள், பைக், காரோட்டிகள் கடைப் பிடிக்க வேண்டிய விதிமுறைகள்; விபத்தை எப்படி தடுக்கலாம் என்பது போன்ற விஷயங்களை புகைப்படங்களாக்கி, அதை அழகாக அந்தப் பேருந்துனுள் காட்சிப்படுத்தி இருந்தனர். தினசரி மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியாகப் பயணித்த பேருந்தைக் காண பொதுமக்கள் உற்சாகமாகத் திரண்டு வந்ததுதான் ஆச்சரியம்!

-வே.கிருஷ்ணவேணி, படம்: வீ.நாகமணி

மோட்டார் நியூஸ்

விலைகள் ஏற்றம்!

மோட்டார் நியூஸ்

விற்பனை குறைந்து வருவதால், லாபத்தை அதிகரிக்க காரின் விலைகளை ஏற்றியிருக்கிறது மாருதி. அதிகபட்சமாக ஸ்விஃப்ட் டீசலின் விலை 17,000 ரூபாய் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதேபோல், நிஸான் நிறுவனமும் மைக்ரா, சன்னி கார்களின் விலையை உயர்த்தியிருக்கிறது. மைக்ரா பெட்ரோலின் விலை 3,000 ரூபாயும், டீசல் மாடலின் விலை 12,000 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. சன்னி பெட்ரோல் காரின் விலை 5,000 ரூபாய் உயர்ந்திருக்கிறது. ஜெனரல் மோட்டார்ஸும் கார்களின் விலைகளை ஏற்றிஇருக்கும் நிலையில், ஏகத்துக்கும் ஹிட் அடித்திருக்கும் XUV 500 காரின் விலையில் ஒரேயடியாக 36,000 ரூபாய் உயர்த்திருக்கிறது மஹிந்திரா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism