டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

வணக்கம்

வணக்கம்

வணக்கம்

இந்திய ஆட்டோமொபைல் உலகின் உச்சபட்ச திருவிழாவான ஆட்டோ எக்ஸ்போ, டெல்லி பிரகதி மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்று, உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. புதுப் புது கார்கள், பைக்குகள், கமர்ஷியல் வாகனங்கள், ஆட்டோமொபைல் ஆக்சஸரீஸ் என திரும்பிய பக்கம் எல்லாம் அறிமுக வைபவங்கள் அதகளப்பட்டன.

மொத்தம் 58 புதிய வாகனங்கள், 9 கான்செப்ட் கார்கள், 12 எலெக்ட்ரிக் ஹை-பிரிட் வாகனங்கள் இந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 24 நாடுகளில் இருந்து 1500 நிறுவனங்கள் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்றன.

கடந்த எக்ஸ்போக்களில் டாடா நானோ, ஹோண்டா பிரியோ, டொயோட்டா எட்டியோஸ் என சின்ன கார்களின் அறிமுகம்தான் கவனத்தை ஈர்த்தது. ஆனால், இந்தமுறை ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்ஸ், மாருதி எர்டிகா, நிஸான் எவாலியா, அசோக் லேலாண்ட் ஸ்டைல், செவர்லே என்ஜாய் என மல்ட்டி பர்ப்பஸ் வாகனங்கள் அதிக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஃபெராரி, லம்போகினி, ஜாகுவார், லேண்ட் ரோவர், பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி, வால்வோ என சொகுசு கார் தயாரிப்பாளர்களும் குவிந்திருந்தனர்.

மொத்தம் ஏழு நாட்கள் நடைபெற்ற இந்த ஆட்டோ எக்ஸ்போவில் மொத்தம் ஏழு லட்சம் பேர் பார்வையிட்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காகவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் பேருக்கு மேல் டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை. அந்த அளவுக்கு ஆரம்பநாள் துவங்கி கடைசி நாள்வரை கூட்டம் அலைமோதியது. நம் நாட்டில் கார்களுக்கும், பைக்குகளுக்கும் இருக்கும் ஈர்ப்பைப் பார்த்து, வெளிநாட்டில் இருந்து வந்திருந்த ஆட்டோமொபைல் நிறுவனத்தினர் ஆச்சரியத்தில் மலைத்துப் போனார்கள்.

இந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான கார் மற்றும் பைக்குகளின் ஸ்பெஷல் செய்திகளையும், புகைப்படங்களையும் இந்த இதழ் முழுதும் கொடுத்திருக்கிறோம். பாருங்கள்... படியுங்கள்... உங்கள் கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்!

வணக்கம்