டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

மினி மேஜிக்!

மினி மேஜிக்!

மினி மேஜிக்!

றுதியாக, மினி பிராண்டை இந்தியாவுக்குள் கொண்டு வந்துவிட்டது பிஎம்டபிள்யூ நிறுவனம். எந்த நடிகையும் வரவில்லை; எந்த கிரிக்கெட் வீரரும் பிராண்ட் அம்பாஸடராக இல்லை. ஆனால், மினி காரைக் காண படையெடுத்தக் கூட்டத்தைப் பார்த்து, பிஎம்டபிள்யூ நிறுவனமே கொஞ்சம் ஷாக் ஆனது. ஏதோ மேஜிக் ஷோவைப் பார்ப்பது போல, மினி காரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள் ரசிகர்கள். 'மினி கார் விற்பனை செய்யப்படும் நூறாவது நாடு இந்தியா’ என பெருமை பொங்க அறிவித்தது பிஎம்டபிள்யூ.

மினியில் கூப்பர், கூப்பர் எஸ், கூப்பர் கன்வெர்ட்டிபிள், கன்ட்ரிமேன் என மொத்தம் நான்கு மாடல்களை முதல்கட்டமாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது மினி. இந்த நான்குமே பெட்ரோல் இன்ஜின், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார்கள்தான். மேனுவல் கியர் பாக்ஸ், டீசல் இன்ஜின் மாடல்கள் இல்லை. நான்கு கார்களில் பவர்ஃபுல் கார், மினி கூப்பர் எஸ். இதன் 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 184 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது.

மினி மேஜிக்!

விலை குறைவான கூப்பர் ஹேட்ச்பேக் மாடலில், இரண்டு கதவுகள் மட்டுமே. இதனால், காருக்குள் நான்கு பேர் உட்கார இடம் இருந்தாலும் இரண்டு கதவுகள் மட்டுமே இருப்பதால், இருவர் வசதியாகப் பயணிக்கவே கூப்பர் சரியாக இருக்கும். தோற்றத்தில் சிறிதாக இருக்கும் மினி கார்களின் விலை 24 லட்ச ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது. இந்த நான்கு கார்களுமே வெளிநாட்டில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்பட இருக்கின்றன. சென்னை தொழிற்சாலைக்கும் இந்த கார்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதனால்தான் அதிக விலை என்கிறது மினி. ஜூன் மாதம் முதல் மினி கார்களுக்கான புக்கிங் துவங்குகிறது. புக்கிங் தொகை மட்டும் ரூபாய் 10 லட்சம்!

மினி கார்களுக்கென தனி ஷோரூம்கள் திறக்கப்பட இருக்கின்றன. முதல்கட்டமாக டெல்லியில் இரண்டு ஷோ ரூம்களும், மும்பையில் ஒரு ஷோ ரூமும் திறக்கப்பட்டு இருக்கிறது. சென்னையில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஷோ ரூம் திறக்கப்படும்!