Published:Updated:

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

Published:Updated:
மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

சங்கர்குமார், திருநெல்வேலி. 

புதிய பஜாஜ் பல்ஸர் பைக் விற்பனைக்கு வர இருப்பதாக facebook.com/motorvikatan   பக்கத்தில் படித்தேன். புதிய பல்ஸர் எப்போது விற்பனைக்கு வரும்?

 ##~##

கேடிஎம் 200 பைக்கைத் தொடர்ந்து பல்ஸர் 200 பைக்கை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது பஜாஜ். இந்த ஆண்டு துவக்கத்திலேயே விற்பனைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டு இருந்த பஜாஜ், கேடிம் பைக்கின் அறிமுகமே தள்ளிப் போய்விட்டதால், பல்ஸரின் அறிமுகம் குறித்து வாய் திறக்க மறுக்கிறது!

ஜெகதீசன், மதுரை. இன்ஷினீயரிங் படித்து வருகிறேன். யமஹா SZ-S, ஹோண்டா யூனிகார்ன் டேஸ்லர்  இந்த இரண்டு பைக்கில் எதை வாங்குவது என்று குழப்பமாக இருக்கிறது? மோட்டார் விகடனின் தீர்ப்பு என்ன?

ஹோண்டா யூனிகார்ன் டேஸ்லர், யமஹா SZ பைக்கைவிட கொஞ்சம் ஸ்டைலான, டிஜிட்டல் மீட்டர், பின் பக்க டிஸ்க் பிரேக் என சிறப்பம்சங்கள் அதிகம் கொண்ட பைக். ஏற்கெனவே பழைய யூனிகார்னில் இருக்கும் இன்ஜின்தான் என்பதால் நம்பிக்கையிலும், பர்ஃபாமென்ஸிலும் எந்தக் குறையும் இல்லை. FZ-16 பைக்கில் இருக்கும் அதே இன்ஜின்தான் SZ பைக்கில் இருக்கிறது. இதன் விலை குறைவு. அதனால், சிறப்பம்சங்களும் ஸ்டைலும் குறைவு. ஸ்டைலான, சிறப்பம்சங்கள் அதிகம் கொண்ட பைக் வேண்டும் என்றால், ஹோண்டா யூனிகார்ன் டேஸ்லர் வாங்கலாம். இரண்டில் பட்ஜெட் பைக்தான் வேண்டும் என்றால், யமஹா SZ பைக்கை வாங்கலாம்!

ஜெயக்குமார், காஞ்சிபுரம். நான் இப்போது ஹூண்டாய் ஐ10 கார் வைத்திருக்கிறேன். என்னுடைய பட்ஷெட் 5 முதல் 6 லட்சம். புதிதாக ஹேட்ச்பேக் கார் வாங்கலாமென இருக்கிறேன். நிஸான் மைக்ரா டீசல் பிடித்திருக்கிறது. இந்த காரை வாங்கலாமா?

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

மைக்ராவினுள் இருக்கும் 1.5 லிட்டர் K9K டீசல் இன்ஜின், சிறந்த இன்ஜின் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. நம்பகத்தன்மை வாய்ந்த நல்ல மைலேஜ் மற்றும் பர்ஃபாமென்ஸ் கொண்ட சிறந்த இன்ஜின் இது. மைக்ரா காரிலும் நிறைய சிறப்பம்சங்கள் இருப்பதோடு, இட வசதியும் அதிகம் என்பதால், உங்கள் சாய்ஸ் சரியாகவே இருக்கிறது.

இளங்கோ, புதுக்கோட்டை. 40 ஆயிரம் ரூபாயில் நல்ல பைக் வேண்டும். எந்த பைக் வாங்கலாம்?

40 ஆயிரம் ரூபாயில் இப்போது எந்த பைக்கையும் வாங்க முடியாது. உங்கள் பட்ஜெட்டை 5 ஆயிரம் ரூபாய் கூட்டினால், ஹீரோ சிடி டீலக்ஸ் அல்லது பஜாஜ் பிளாட்டினா 100 சிசி பைக் வாங்கலாம்!

நஜுமுதீன், திண்டுக்கல். நான் ஹூண்டாய் வெர்னா டீசல் காரை இரண்டு ஆண்டுகளாகப் பயன் படுத்தி வருகிறேன். இந்த கார் வாங்கும்போது, சர்வீஸ் மேலாளரின் அறிவுரைப்படி தொடர்ந்து பிரீமியம் டீசலை மட்டுமே நிரப்பிவருகிறேன். ஆனால், நான் இப்போது வசிக்கும் ஏரியாவில் பிரீமியம் டீசலைத் தேடி அலைய வேண்டியிருக்கிறது. இப்போது சாதாரண டீசலைப் பயன்படுத்தினால், இன்ஷினில் ஏதாவது பிரச்னை வருமா?

கலப்படம் இல்லாத நல்ல டீசலாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் சாதாரண டீசல், பிரீமியம் டீசல் என எந்த டீசல் வேண்டுமானலும் நிரப்பலாம். பென்ஸ், பிஎம்டபிள்யூ உள்பட இந்தியாவில் விற்பனையாகும் அத்தனை டீசல் இன்ஜின்களுமே எல்லாவகையான டீசலுக்கும் ஏற்றபடியே தயாரிக்கப்பட்டு இருக்கின்றன.

கோகுல், ஈரோடு. ரேஸ் வீரனாக விரும்புகிறேன். ரேஸில் கலந்து கொள்ள யாரை அணுக வேண்டும்? மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட் கிளப்பைத் தொடர்பு கொள்ளுங்கள். ரேஸ் உள்பட ரேஸ் தொடர்பான அத்தனை விஷயங்களுக்கும் அவர்கள் உதவுவார்கள்.

மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்,

123/1, டி.டி.கே சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை-18

போன்: 044 - 24990998

மொபைல்: 98401 09487

ராஜசேகர், தஞ்சாவூர். நான் முதன் முதலாக வாங்கிய கார் ஃபோர்டு ஐகான். அதன் பிறகு ஃபோர்டு ஃபியஸ்டா டீசல் கார் வாங்கி 4 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறேன். இப்போது புதிதாக கார் வாங்க வேண்டும். மீண்டும் ஃபோர்டு ஃபியஸ்டா நியூ மாடலையே வாங்கலாமா? ஃபோர்டு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அல்லது ஹூண்டாய் வெர்னா வாங்கலாமா?

உங்களுக்கு ஃபோர்டு மிகவும் பிடித்த பிராண்ட் என்பதோடு, ஃபியஸ்டாவும் நல்ல கார் என்பதால், நீங்கள் மீண்டும் ஃபியஸ்டாவையே வாங்குவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், வெர்னா டீசல் அளவுக்கு ஃபியஸ்டா சிறந்த கார் இல்லை. ஓட்டுதல் தரம், சொகுசு, பர்ஃபாமென்ஸ் என அனைத்திலும்

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

வெர்னா சிறந்த காராக இருக்கிறது. இந்த செக்மென்ட்டில் இப்போது இன்னொரு ஆப்ஷனும் இருக்கிறது. ஸ்கோடா ரேபிட் கார் நல்ல சாய்ஸ். ஓட்டுதல் தரத்திலும், பர்ஃபாமென்ஸிலும் சிறந்த காராக இருக்கும் ரேபிட், 1.6 லிட்டர் டீசல் இன்ஜினைக் கொண்டது!

சந்திரகுமார்கோவை. என்னு டைய மகள் கல்லூரிக்குச் சென்று வர ஸ்கூட்டர் வாங்க வேண்டும். கல்லூரி, வீட்டில் இருந்து 13 கி.மீ தொலைவில் இருக்கிறது. அதனால், மைலேஜ் அதிகம் தரக்கூடிய ஸ்கூட்டராக இருந்தால் நல்லது. விலையும் 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். எடை அதிகமான ஸ்கூட்டர் வேண்டாம்.

டிவிஎஸ் ஸ்கூட்டி ஸ்ட்ரீக், உங்கள் மகளுக்கு நல்ல சாய்ஸ் ஆக இருக்கும். இதன் விலை 47 ஆயிரம் ரூபாய்தான் என்பதோடு, பர்ஃபாமென்ஸில் எந்தக் குறையும் இல்லை. லிட்டருக்கு 51 கி.மீ மைலேஜ் தரும். ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களைப் பொறுத்தவரை இது நல்ல மைலேஜ்!