டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

இனோவாவைத் துரத்தும் எவாலியா!

இனோவாவைத் துரத்தும் எவாலியா!

இனோவாவைத் துரத்தும் எவாலியா!

டிராவல்ஸ் மார்க்கெட்டிலும் நம்பர் ஓன் காராக இருக்கும் இனோவாவுடன் போட்டிப் போட கமர்ஷியல் மார்க்கெட்டிலும் களம் இறங்குகிறது நிஸான். கமர்ஷியல் வாகன மார்க்கெட்டில் தன்னுடைய கூட்டாளியான அசோக் லேலாண்ட் நிறுவன பிராண்டில், இதே எவாலியா கார் 'ஸ்டைல்’ என்ற பெயரில் விற்பனைக்கு வருகிறது (STILE -இத்தாலிய மொழியில் ஸ்டைலை இப்படித்தான் எழுத வேண்டுமாம்). ஏர்போர்ட், பிபிஓ, ஹோட்டல் பிக்-அப் டிராப் போன்ற பயன்பாட்டுக்கு இது மிகச் சரியான வாகனமாக இருக்கும் என்கிறது அசோக் லேலாண்ட். நிஸான் எவாலியா விற்பனைக்கு வந்து ஆறு மாதங்கள் கழித்துதான் இந்த கார் விற்பனைக்கு வரும். அதாவது, அடுத்த ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதவாக்கில்தான் விற்பனைக்கு வரும். நிஸான் சன்னி காரின் இன்ஜினுக்குப் பதிலாக, பழைய லோகனில் இருந்த(தற்போது மஹிந்திரா வெரிட்டோ) 1.5 லிட்டர் டீசல் இன்ஜினைப் பொருத்த இருக்கிறது அசோக் லேலாண்ட். விலை 7-8 லட்ச ரூபாய்க்குள் இருக்கும்!

இனோவாவைத் துரத்தும் எவாலியா!

நிஸான் நிறுவனம், செப்டம்பர் மாதவாக்கில் விற்பனைக்கு வர இருக்கும் தனது 'எவாலியா’ எனும் எம்பிவி காரை, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியது. ஏற்கெனவே வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் 'NV200’ எனும் காரை இன்னும் அழகாக்கி, எவாலியா என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. நிஸானின் சென்னை ஒரகடம் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட இருக்கும் இந்த கார், டொயோட்டா இனோவாவுடன் போட்டிப் போட இருக்கிறது.

இனோவாவைத் துரத்தும் எவாலியா!

டொயோட்டா இனோவாவைப் போல் இல்லாமல் கொஞ்சம் வேன் போன்ற தோற்றத்துடன் இருந்தாலும், டிசைனில் சின்னச் சின்ன விஷயங்களை இதில் சேர்த்திருக்கிறது நிஸான். உயரமாக வைக்கப்பட்டு இருக்கும் ஹெட் லைட், பம்பரை நெருங்கும் கிரில், பெரிய முன் பக்க கண்ணாடி எனக் கவர்ந்திழுக்கும் அம்சங்களும் உண்டு. ஆனால், மாருதி ஆம்னியைப் போல இதன் பின் பக்கத்தில் 'ஸ்லைடிங்’ கதவுகள்தான். ஏழு பேர் இதில் வசதியாக உட்கார்ந்து பயணிக்க முடியும் என்பதோடு, காரின் அடித்தள உயரம் குறைவாக இருப்பதால், காருக்கு உள்ளே போவதும் வெளியே வருவதும் சுலபமாக இருக்கிறது. மூன்றாவது வரிசை இருக்கைகளில், இரண்டு பேர் வசதியாக உட்கார்ந்து பயணிக்கும் அளவுக்கு இடவசதி உண்டு.

இனோவாவைத் துரத்தும் எவாலியா!

இரட்டை வண்ண டேஷ் போர்டு கவர்ச்சியாக இருக்கிறது. ஹூண்டாய் ஐ10 காரில் இருப்பதுபோல, டேஷ் போர்டிலேயே கியர் லீவர் வைக்கப்பட்டுள்ளது. நிஸான் சன்னியில் இருக்கும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்தான் எவாலியா காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், ஏழு பேர் மற்றும் அதிக பொருட்களை வைத்துக்கொண்டு பயணிக்கக்கூடிய இந்த காருக்கு 1.5 லிட்டர் இன்ஜின் போதுமானதாக இருக்குமா என்பது, டெஸ்ட் டிரைவின் போதுதான் தெரியும்!