டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

ரீடர்ஸ் டெஸ்ட் - ஹூண்டாய் இயான்

ரீடர்ஸ் டெஸ்ட் - ஹூண்டாய் இயான்

எஸ்.ஷக்தி  >>தி.விஜய்

கார் மார்க்கெட்டில் சன்னமான அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது ஹூண்டாயின் செல்லக் குழந்தையான இயான். இதற்குப் போட்டியாக நிற்கும் மாருதி ஆல்ட்டோ மற்றும் செவர்லே ஸ்பார்க்கை, பீட் அடிக்க இயான் றெக்கை விரித்துப் படபடக்கிறது. இது எந்த அளவுக்குக் கவர்ச்சியாக இருக்கிறது; பாதுகாப்பாக இருக்கிறது; செயல்திறன் மிக்கதாக இருக்கிறது என்று பல்வேறு அளவுகோல்களுடன் கோவை வாசகர்கள் இயானை ஓட்டிப் பார்த்துக் கொடுத்திருக்கும் விமர்சனங்கள் இங்கே...

அபிஷேக்

காரோட முகப்பாக இருக்கும் 2 டோன் க்ரோம் ரேடியேட்டர் க்ரில் பிடிச்சுருக்கு. ஹெட் லேம்ப், மைக்ரோ ரூஃப் ஆன்டெனா போன்ற விஷயங்கள் அம்சமா இருக்கு. ஃபாக் லேம்புகள் தேவைக்கான விஷயமாக மட்டும் இல்லாம, காருக்கு ஒரு ஸ்போர்ட்டி தோற்றத்தைக் கொடுக்குது. காரோட பாடி கலர்லேயே இருக்கிற கதவுக் கைப்பிடிகள், ரசனையோடு வடிவமைக்கப் பட்டு இருக்கு. அரை நிலா வடிவத்துல இருக்கிற டெயில் லேம்ப், காரோட பின் பக்கத்தை அழகாக்குது!

ரீடர்ஸ் டெஸ்ட் - ஹூண்டாய் இயான்

அப்பாஸ்

டைரக்ட் ஸ்டீயரிங் என்பதால், வளைச்சு வளைச்சு ஈஸியா ஓட்ட முடியுது. நம்மோட டிரைவிங் ஸ்டைலுக்கு ஏற்ற மாதிரி ஸ்டீயரிங்கை டில்ட் செய்யும் வசதி கொடுக்கப்பட்டிருப்பது நல்ல விஷயம். பாதுகாப்புக்கு டிரைவர் ஏர் பேக் கொடுக்கப்பட்டிருப்பதை நிச்சயம் பாராட்டியே ஆகணும். கியர் லீவர்ல அதிர்வுகள் வருதே... ஹூண்டாய் இதை ஏன் கவனிக்கல?

எமில் அசோக்

பார்க்கறதுக்கு மட்டுமல்ல, செயல்பாட்டிலும் க்யூட்டா இருக்கு. எரிபொருளை புத்திசாலித்தனமா பயன்படுத்துவதற்கு வசதியா கியர் ஷிஃப்டிங் இண்டிகேட்டர் வசதி கொடுத்திருப்பது சூப்பர். ஹூண்டாய் சொல்றபடி இது ஒரு லிட்டருக்கு 21 கி.மீ மைலேஜ் கொடுத்தால், உண்மையிலேயே கிரேட். குறைந்த வேகத்தில் போகும்போது ஸ்டீயரிங் டைட்டாக இருப்பது குறை!

ஜானி ஜோசப்

காருக்குள் உட்கார்ந்தா... நம்மையும் அறியாமல் இது ஒரு பாதுகாப்பான கார் என்ற உணர்வு ஏற்படுகிறது. சீட் அரேஞ்ச்மென்ட்ஸ் பக்கா! முன் இருக்கைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் வசதி கொடுத்திருக்காங்க. ஆனா, பின் பக்க சீட்ல உட்கார்ந்தா கொஞ்சம் இடைஞ்சலா இருக்கு! அதேசமயம், சீட்ஸ் ச்சும்மா தட்டையா இல்லாம அழகான வளைவு, நெளிவுகளோட இருப்பது உட்காருவதற்கு வசதியா இருக்கு!