டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

ரெனோவின் செகண்ட் இன்னிங்ஸ்!

ரெனோவின் செகண்ட் இன்னிங்ஸ்!

ரெனோவின் செகண்ட் இன்னிங்ஸ்!

ந்தியாவில் தனியாகக் கடை திறந்து ஒரு ஆண்டு முடிவதற்குள், நான்காவது காரை அறிமுகப்படுத்திவிட்டது ரெனோ. ஃப்ளூயன்ஸ், கோலியோஸ், பல்ஸ் ஆகிய கார்களைத் தொடர்ந்து, மினி எஸ்யூவி காரான டஸ்ட்டரை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்தது ரெனோ.

லோகன் காரைத் தயாரித்த அதே பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் மினி சைஸ் எஸ்யூவியான டஸ்ட்டர், ஆகஸ்ட் மாதவாக்கில் விற்பனைக்கு வரும். 2012-ம் ஆண்டு அறிவிக்கப்படாத மினி எஸ்யூவி/எம்பிவி வாகனங்களுக்கான ஆண்டு என்பதால், ரெனோவின் டஸ்ட்டர் வெற்றி பெறுவதற்கான அத்தனை அறிகுறிகளும் தெரிகின்றன. வரி விலக்கு பெறுவதற்காக, நான்கு மீட்டர் நீளத்துக்குள் தயாரிக்கப்படும் கார் இல்லை இது. அதேசமயம், மலைக்க வைக்கும் விலையும் இல்லை. முழுக்க முழுக்க சென்னை ஒரகடத்தில் உள்ள ரெனோவின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட இருப்பதால், குறைந்தபட்சம் 7-11 லட்ச ரூபாய் விலையில் டஸ்ட்டர் விற்பனைக்கு வர இருக்கிறது. சென்னை தொழிற்சாலையில் ஆண்டுக்கு ஐம்பதாயிரம் கார்கள் தயாரிக்கப்பட இருக்கும் நிலையில், இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய இருக்கிறது ரெனோ.

ரெனோவின் செகண்ட் இன்னிங்ஸ்!

விலை மலிவான எஸ்யூவி போல் இல்லாமல், மிரட்டலான எஸ்யூவியாக இதை டிசைன் செய்திருக்கிறது ரெனோ. ஆட்டோ எக்ஸ்போவில் வைக்கப்பட்டு இருந்த டஸ்ட்டர் காரின் உள்பாகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டவில்லை. காரணம், லோகனில் இருந்தது போல, டேஷ் போர்டிலேயே பவர் விண்டோஸ் சுவிட்ச் உள்ளிட்ட விலை மலிவான விஷயங்கள் இந்த டஸ்ட்டர் காருக்குள் இருந்துதான். ஆனால், விற்பனைக்கு வர இருக்கும் மாடலில் இது போன்ற குறைகள் எதுவும் இருக்காது. உள்பக்கத்தில் ஏராளமான வசதிகளை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்திருக்கிறது ரெனோ. 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் ரெனோவின் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் டஸ்ட்டர் விற்பனைக்கு வர இருக்கிறது. பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 85 தீலீஜீ சக்தியையும், டீசல் இன்ஜின் 110 தீலீஜீ சக்தியையும் வெளிப்படுத்தும். 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட டஸ்ட்டர், வெளிநாடுகளில் விற்பனையில் இருந்தாலும் இந்தியாவில் வெறும் 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலைத்தான் விற்பனைக்குக் கொண்டு வருகிறது ரெனோ.

ரெனோ பல்ஸ்

பல்ஸை ஏற்கெனவே அறிமுகம் செய்து விட்டாலும், முறைப்படி ஆட்டோ எக்ஸ்போ மூலம் விற்பனைக்குக் கொண்டு வருவதாக அறிவித்தது ரெனோ. முதல் கட்டமாக வெறும் டீசல் இன்ஜின் கொண்ட மாடலை மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். தோற்றத்திலும் வசதிகளிலும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்றாலும், மைக்ரா டீசலைவிட பல்ஸ் டீசலின் விலை 13 ஆயிரம் ரூபாய் அதிகம்.

ரெனோ டிசையர்

பல்ஸர் மற்றும் டஸ்ட்டரைவிட ரசிகர்களை அதிகம் கவர்ந்த கார் ரெனோவின் டிசையர். ரெனோவின் வடிவமைப்பு திறமையை உலகுக்குக் காட்ட, ஸ்பெஷலாக டிசைன் செய்யப்பட்டிருக்கும் கான்செப்ட் கார் இது. 2 சீட்டர் கூபே காரான இதில், 21 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. டிசையர், முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் காராக இருக்கும். இது ஹை-பிரிட் கார் இல்லை. காரின் பின்பக்க இருக்கைகளுக்கு அடியில் லித்தியம் ஐயான் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. 'இந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால், 160 கி.மீ தூரம் வரை பயணிக்க முடியும்’ என்கிறது ரெனோ!