டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

ரேஸ் டிராக்கில் டொயோட்டா!

ரேஸ் டிராக்கில் டொயோட்டா!

ரேஸ் டிராக்கில் டொயோட்டா!

ட்டியோஸ், எட்டியோஸ் லிவா என கடந்தமுறை மிகவும் பிஸியாக இருந்த டொயோட்டா அரங்கத்தில், இந்த ஆண்டு அதிரடி அறிமுகங்கள் எதுவும் இல்லை. புதிய லேண்ட் க்ரூஸர் காரை உலகிலேயே முதன்முறையாக டெல்லியில்தான் அறிமுகம் செய்வதாகச்  சொல்லி காட்சிக்கு வைத்தது டொயோட்டா. புதிய லேண்ட் க்ரூஸரின் வெளித் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், இன்ஜினில் மாற்றங்களைச் செய்திருக்கிறது டொயோட்டா. புதிய 4.5 லிட்டர் M8 இன்ஜினை இதில் பொருத்தியிருக்கிறது. இதில், ஆட்டோமேட்டிக் ஹைட் அட்ஜெஸ்ட் வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. புதிய லேண்ட் க்ரூஸரின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை 88 லட்ச ரூபாயில் இருந்து ஆரம்பம்!

புதிய கேம்ரி காரையும் எக்ஸ்போவில் அறிமுகம் செய்தது டொயோட்டா. ஜூன் மாதவாக்கில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த காரில், 2.4 லிட்டர் இன்ஜினுக்குப் பதில் 2.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது பழைய கேம்ரியைவிட 2 bhp கூடுதல் சக்தியை மட்டுமே வெளிப்படுத்துகிறது. கீ லெஸ் என்ட்ரி, புஷ் ஸ்டார்ட் பட்டன், டச் ஸ்கிரீன் என புதிய சிறப்பம்சங்களும் இடம் பிடித்திருக்கின்றன. ஆனால், கேம்ரியில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை. ஆனால், இதுவரை வெளிநாட்டில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்ட இந்த கார், இனி பெங்களூருவில் உள்ள டொயோட்டாவின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளது. இதனால், கேம்ரியின் விலை 2 - 3 லட்ச ரூபாய் வரை குறையும்.

ரேஸ் டிராக்கில் டொயோட்டா!

இது தவிர, சின்னச் சின்ன மாற்றங்களுடன் வெளியாகியிருக்கும் ஃபார்ச்சூனர், இனோவா மற்றும் ஹை-பிரிட் காரான பிரையஸையும் காட்சிக்கு வைத்தது டொயோட்டா.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முக்கிய அறிவிப்பாக, இந்தியாவில் ரேஸ் போட்டி நடத்த இருப்பதாக அறிவித்ததது டொயோட்டா. எட்டியோஸ் ஒன் மேக் ரேஸாக (தற்போது நடைபெறும் ஃபோக்ஸ்வாகன் போலோ கப் ரேஸ் போல) அடுத்த ஆண்டு டெல்லி, சென்னை மற்றும் கோவையில் இந்த ரேஸ் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஸ் போட்டிகள் அடுத்த ஆண்டுதான் என்றாலும், இந்த பிப்ரவரி 15-ம் தேதிக்குள் www.toyotaetiosmotorracing.in போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் வீரர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த ஆண்டே சில டெஸ்ட் ரேஸ் போட்டிகளை டொயோட்டா நடத்தும் என எதிர்பார்க்கலாம். மொத்தம் 25 ரேஸ் வீரர்கள் இந்த ரேஸில் கலந்துகொள்வார்கள்.

ரேஸ் டிராக்கில் டொயோட்டா!

'ஈஸி ஸீட்’ எனும் புதிய கார் சீட்டையும் அறிமுகப்படுத்தியது டொயோட்டா. 30 ஆயிரம் ரூபாய்க்குக் கிடைக்கும் இந்த சீட்டை கரோலா காரில் பொருத்தலாம். ரோலிங் சீட் போல் இருக்கும் இது மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் காருக்குள் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் வசதியாக இருக்கும்!