டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

எங்கே அப்?

எங்கே அப்?

எங்கே அப்?

'அப்’ காரை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்த்தால்,  கடைசி வரை அந்த காரை கண்ணில் காட்டவே இல்லை ஃபோக்ஸ்வாகன். 'XL1’ எனும் கான்செப்ட், புதிய பீட்டில் மற்றும் புதிய டூரெக் ஆகிய கார்களை மட்டுமே காட்சிக்கு வைத்தது. பிரம்மாண்டமாகத் தோற்றமளிக்கும் XL1 கான்செப்ட் காரில் இருப்பது வெறும் 800 சிசி டீசல் இன்ஜின்தான். டீசல் இன்ஜினோடு 20 கிலோ வாட்ஸ் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. பேட்டரி தீர்ந்துவிட்டால், உடனடியாக பெட்ரோலில் பயணிக்கலாம். வெறும் 795 கிலோ எடை கொண்ட இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 158 கிமீ. இரண்டு பேர் மட்டுமே பயணிக்கக் கூடிய இந்த காரை, வெறுமனே காட்சிக்கு மட்டுமே வைத்தது ஃபோக்ஸ்வாகன். இந்த காரை இப்போதைக்கு இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் எந்தத் திட்டமும் ஃபோக்ஸ்வாகனிடம் இல்லை.

எங்கே அப்?

புதிய பீட்டில் காரில் 1.4 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 160 bhp சக்தியை வெளிப்படுத்தும். புதிய பீட்டில், பழைய பீட்டிலைவிட நீளத்திலும், அகலத்திலும் அதிகம். ஆனால், உயரம் குறைவு. அதனால், பார்ப்பதற்கு இன்னும் க்யூட்டாக இருக்கிறது பீட்டில். அதேபோல், 209 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிக்கி இப்போது 310 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக மாறியுள்ளது. இதனால், கொஞ்சம் கூடுதல் பைகளை டிக்கியில் வைத்துக்கொண்டு பயணிக்க முடியும்.

எங்கே அப்?

போலோ, வென்ட்டோ கார்கள் இந்தியாவில் பிக்-அப் ஆகிவிட்டதால், சொகுசு கார்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது ஃபோக்ஸ்வாகன். 'ஃப்யிட்டன்’ மற்றும் புதிய 'டூரெக்’ காரையும் அறிமுகப்படுத்தி இருந்தது. போர்ஷே 'கெயின்’ கார் தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுகின்ற இந்த காரில் 3 லிட்டர் V6 டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 242bhp சக்தியை வெளிப்படுத்தும்!