டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

வருகிறது பெழோ!

வருகிறது பெழோ!

வருகிறது பெழோ!

200  ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஃப்ரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான பெழோ, இந்த ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனையைத் துவக்குகிறது. இதற்கு முன்னோட்டமாக, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கலந்துகொண்டு தனது '508’ எனும் காரை அறிமுகம் செய்தது பெழோ. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே ஐரோப்பிய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு விட்ட இந்த கார், இந்தியாவில் அப்படியே இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஹோண்டா அக்கார்டு காருடன் போட்டி போட இருக்கும் இந்த பெழோ 508 காரின் விலை 30 லட்சம் ரூபாயை நெருங்கும். ஆனால், ஹோண்டா அக்கார்டு போல பெட்ரோல் இல்லாமல் 1.6 லிட்டர் டீசல் இன்ஜினைக் கொண்டிருப்பதால், இது விற்பனையில் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிறது பெழோ!

'3008’ கிராஸ் ஓவர் காரும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த காரில், முன் இருக்கைகளைத் தவிர மற்ற அனைத்து இருக்கைகளையும் மடக்கிவிட்டு ஏராளமான பொருட்களை காருக்குள் வைக்க முடியும். RCZ, 3008 ஹைபிரிட் ஆகிய கார்களும் காட்சிக்கு வைக்கப்பட்டன. நான்கு பேர் உட்கார்ந்து பயணிக்கக் கூடிய ஸ்போர்ட்ஸ் காரான RCZ-ல் இருப்பது வெறும் 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான். ஆனால், இதன் அதிகபட்ச சக்தி 200bhp.

வருகிறது பெழோ!

4000 கோடி ரூபாய் முதலீட்டில் குஜராத்தில் தொழிற்சாலை அமைத்து வரும் பெழோ நிறுவனம், சொகுசு கார் மார்க்கெட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்!