Published:Updated:

BSVI, ஹைப்ரிட் தொழில்நுட்பம் - விற்பனைக்கு வந்தது புது பெலினோ..!

BSVI, ஹைப்ரிட் தொழில்நுட்பம் - விற்பனைக்கு வந்தது புது பெலினோ..!
News

ஏப்ரல் 2020 முதல் BSVI மாசு கட்டுப்பாட்டு விதிகள் கட்டாயம் என்பதால் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் BSVI இன்ஜினை தயாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். இதுவரை பிஎம்டபிள்யூ, பென்ஸ் போன்ற நிறுவனங்களே இந்த இன்ஜினை வெளியிட்டு வந்த நிலையில் முதல் முறையாக பட்ஜட் சந்தையில் மாருதி BSVI இன்ஜினுடன் பெலினோவை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. தோற்றத்தில் சிறிய மாற்றங்கள், புது இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் இரண்டு புது BSVI இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது மாருதி சுஸூகி பெலினோ.

1.2 லிட்டர் K12C டூயல்ஜெட்-ஸ்மார்ட் ஹைப்ரிட் சிஸ்டம் இன்ஜின் பெலினோவில் புதிதாக வந்துள்ளது. இரண்டு வேரியன்ட்டுகளில் மட்டுமே கிடைக்கும் இது ரூ.7.25-7.86 லட்சம் விலையில் கிடைக்கிறது. தற்போது விற்பனையில் இருக்கும் காரைவிட இதன் விலை ரூ.89,000 அதிகம். இந்த இன்ஜினுடன் சேர்த்து தற்போது இருக்கும் 1.2 லிட்டர் K12B பெட்ரோல் இன்ஜினும் BSVI விதிகளுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன் பெலினோ ரூ.5.58-8.90 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. (முன்பைவிட ரூ.13,000 - 20,000 கூடுதல் விலை).

சியாஸில் இருக்கும் அதே ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம்தான் டூயல்ஜெட் இன்ஜினுடன் கிடைக்கிறது. இது 23.87 கி.மீ மைலேஜ் மற்றும் 90bhp பவர் தருகிறது. பழைய இன்ஜின் 21.4 கி.மீ மைலேஜும் 84bhp பவர் தருகிறது. ஹைப்ரிட் இன்ஜினில் மைலேஜ் மட்டுமல்ல காரின் ஆக்ஸிலரேஷனிலும் மாற்றங்கள் இருக்கும். இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே கிடைக்கிறது. CVT ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கிடையாது.

முன்பைவிட இந்த இரண்டு BSVI இன்ஜின்களிலும் 25 சதவிகிதம் NOx நச்சுப்புகை வெளியீடு குறைக்கப்பட்டுள்ளது. பெலினோவின் ஹார்டுவேர், சாஃப்ட்வேர் இரண்டையும் மேம்படுத்தி இதைச் செய்துள்ளார்கள். இன்ஜினை தவிர புதிய பெலினோவில் சின்னச் சின்ன மாற்றங்கள் இருக்கின்றன.  

உள்பக்கம் கறுப்பு மற்றும் நீல நிறத்தில் டூயல்டோன் இன்டீரியர்கள் கொடுத்துள்ளார்கள். வேகன் ஆர் காரில் இருக்கும் 7.0 இன்ச் டச்ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட் பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுத்துள்ளார்கள். ரியர் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் மற்றும் சீட்பெல்ட் ரிமைண்டர் போன்றவை அனைத்து வேரியன்ட்டுகளிலும் இனி கிடைக்கும்.