Published:Updated:

காம்பாக்ட் எஸ்யூவிக்குப் போட்டியாகக் களமிறங்கும் ட்ரைபர்! - ரெனோவின் பட்ஜெட் க்ளாஸ் ஸ்பெஷல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காம்பாக்ட் எஸ்யூவிக்குப் போட்டியாகக் களமிறங்கும் ட்ரைபர்! - ரெனோவின் பட்ஜெட் க்ளாஸ் ஸ்பெஷல்!
காம்பாக்ட் எஸ்யூவிக்குப் போட்டியாகக் களமிறங்கும் ட்ரைபர்! - ரெனோவின் பட்ஜெட் க்ளாஸ் ஸ்பெஷல்!

மூன்றாம் வரிசை சீட் தேவையில்லை என்றால் தனியாகக் கழட்டி வைத்துவிடலாம் என்கிறார்கள். அப்படிச் செய்தால் 625 லிட்டர் பூட் ஸ்பேஸ் கிடைக்குமாம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ட்ரைபர் என்ற காம்பாக்ட் 7 சீட்டர் மாடலோடு தற்போது புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது ரெனோ. இன்று டெல்லியில் உலகளவில் தனது ட்ரைபரை மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது ரெனோ இந்தியா நிறுவனம். 4 மீட்டருக்குள், 3 வரிசை சீட் கொண்ட ஒரே மாடலான டட்ஸன் கோ+ காருக்கு போட்டியாக இந்த காரை அறிமுகம் செய்துள்ளது.

க்விட் தயாரிக்கப்படும் CMF-A பிளாட்ஃபார்மை 7 சீட்டருக்காக சற்று மேம்படுத்தி இந்த காரில் பயன்படுத்தியுள்ளது ரெனோ. தோற்றத்தில் சிறிதாக க்விட்டின் சிலபல அம்சங்களை அங்கங்கு கொண்டிருந்தாலும் ஹெட்லைட், க்ரில், பானெட், கட்டமான பின்பகுதி, கட்டுமஸ்தான டிசைன் அதற்கு மேட்சிங்காக ரூஃப் ரெயில்ஸ் என காரின் ப்ரெஃபைல் புதிது. புதிது மட்டுமில்லை இது பெரிதாகவும் இருக்கும் என்கிறது ரெனோ. க்விட் மூலம் நமக்கெல்லாம் Frugal இன்ஜினீயரிங்கைச் சொல்லிக்கொடுத்த ரெனோ இம்முறை ட்ரைபரில் ''Function over form'' என்ற தத்துவத்தின் கீழ் காரை தயாரித்துள்ளதாகச் சொல்கிறது. அதாவது, இந்த காரில் டிசைனைவிடப் பயன்பாட்டுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்களாம். இதனால் டிசைன் சிறிதாக இருந்தாலும் இடவசதி பெரிதாக இருக்குமாம்.

காம்பாக்ட் எஸ்யூவிக்குப் போட்டியாகக் களமிறங்கும் ட்ரைபர்! - ரெனோவின் பட்ஜெட் க்ளாஸ் ஸ்பெஷல்!

14 இன்ச் வீல்கள் ஸ்டாண்டர்டாக வருகின்றன. டாப் வேரியன்ட்டில் மட்டும் 15 இன்ச் வீல் கிடைக்கிறது. 185/65 ப்ரொஃபைல் டயர்கள் வருகிறது. இன்டீரியரில் டூயல் டோன் நிறங்கள் வருகின்றன. 3.5 இன்ச் LCD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உண்டு. க்விட், லாஜி, டஸ்டர், கேப்ச்சர் கார்களைவிடப் பெரிய 8.0 இன்ச் இன்ஃபேடெயின்மென்ட் சிஸ்டம் இதில் இருக்கிறது. இதில் வழக்கமாக வரும் ஆப்பிள் கார்பிளே, ஆண்டிராய்டு ஆட்டோ மட்டுமில்லை டிரைவருக்கு உதவும் விதமாக டிரைவர் கோச்சிங் மற்றும் டிரைவர் எக்கானமி ரேட்டிங் வசதிகளையும் கொடுத்திருக்கிறார்கள். 2-ம் வரிசையில் அட்ஜஸ்டபிள் மற்றும் ரிக்லைனிங் சீட்டுகள் உண்டு. லாட்ஜியில் இருப்பதுபோல மூன்றாம் வரிசைக்குத் தனியாக ஏசி வென்ட் கொடுத்துள்ளார்கள்.

காம்பாக்ட் எஸ்யூவிக்குப் போட்டியாகக் களமிறங்கும் ட்ரைபர்! - ரெனோவின் பட்ஜெட் க்ளாஸ் ஸ்பெஷல்!

ஆர்ம்ரெஸ்ட், சார்ஜிங் சாக்கெட்டுகளும் கூட உண்டு. மூன்றாம் வரிசை சீட் தேவையில்லை என்றால் தனியாகக் கழட்டி வைத்துவிடலாம் என்கிறார்கள். அப்படிச் செய்தால் 625 லிட்டர் பூட் ஸ்பேஸ் கிடைக்குமாம். க்விட்டின் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் BR10 பெட்ரோல் இன்ஜின்தான் இந்தக் காரிலும். ஆனால், 78bhp பவர் மற்றும் 96Nm டார்க் கிடைப்பதற்காக இன்ஜினை கொஞ்சம் மேம்படுத்தியுள்ளார்கள். இதே இன்ஜின்தான் 1.0SCe எனும் பெயரில் உலகளவில் விற்பனையாகும் ரெனோ க்ளியோ மற்றும் டைகா சாண்டிரோ கார்களில் பயன்படுத்தப்படுகிறது. ட்ரைபரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் ஆப்ஷனோடு வருகிறது. பாதுகாப்பு வசதிகளாக முன்பக்கம் 2 காற்றுப்பைகள், ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம் போன்றவை வருகிறது. விலை அதிகமான வேரியன்ட்டுகளில் ரிவர்ஸ் கேமரா மற்றும் 2 காற்றுப்பைகள் கூடுதலாக வருகின்றன.

காம்பாக்ட் எஸ்யூவிக்குப் போட்டியாகக் களமிறங்கும் ட்ரைபர்! - ரெனோவின் பட்ஜெட் க்ளாஸ் ஸ்பெஷல்!

ரெனோ ட்ரைபரின் பராமரிப்பு செலவுகள் ஸ்விஃப்ட், ஃபிகோ போன்ற ஹேட்ச்பேக்குகளை ஒப்பிடும்போது 20 சதவிகிதம் குறைவாக இருக்கும் என்கிறது ரெனோ. ட்ரைபருக்கு தற்போது நேரடி போட்டியாக இருக்கும் ஒரே கார் டட்ஸன் கோ+ மட்டுமே. ஆனால், அதுவும் கூட்டாளி நிறுவனம் என்பதால் இந்த காருக்கு தற்போது இந்தியாவில் போட்டியே இல்லை. இதனால், ட்ரைபர் தற்போது சந்தையில் இருக்கும் காம்பாக்ட் எஸ்யூவிகளின் மார்க்கெட்டின் சிறு பகுதியை விழுங்கும் என்று எதிர்பார்க்கிறது ரெனோ. ட்ரைபரின் ஆரம்பி விலை, க்விட்டின் டாப் வேரியன்ட் விலையில் இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு. விலை வரும் மாதம் அறிவிக்கப்படும்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு