Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:
மோட்டார் நியூஸ்

பிஎம்டபிள்யூவைத் துரத்தும் மெர்சிடீஸ் பென்ஸ்!

மோட்டார் நியூஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 பிஎம்டபிள்யூ வரும் வரை, இந்தியாவில் சொகுசு கார் மார்க்கெட்டில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தது மெர்சிடீஸ் பென்ஸ். பிஎம்டபிள்யூ இந்தியாவில் தொழிற்சாலை துவங்கியுடன் இரண்டாவது இடத்துக்குப் போய்விட்டது. மீண்டும் முதலிடத்தைப் பிடிக்க 2012 - 2013-ம் ஆண்டுகளில் ஐந்து கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது பென்ஸ். மேலும், மஹாராஷ்டிரா மாநிலம் சக்கானில் உள்ள தொழிற்சாலையை, 350 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவுபடுத்தவும் திட்டமிட்டு உள்ளது!

உலக நாயகனின் இவோக்!

மோட்டார் நியூஸ்

ரேஞ்ச் ரோவர் இவோக் எஸ்யூவி காரை வாங்கி இருக்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன். கடந்த ஆண்டு ஆடி ஏ8 காரை வாங்கிய கமல்ஹாசன், இப்போது 50 லட்ச ரூபாய் வெள்ளை நிற இவோக் காரை வாங்கியிருக்கிறார். கார்களைப் பொறுத்தவரை வெள்ளை நிற கார்களை வாங்குவதுதான் கமலுக்குப் பிடிக்கும். ஏற்கெனவே அவரிடம் இருக்கும் டொயோட்டா லேண்ட் க்ரூஸர், ஆடி ஏ8, போர்டு பியஸ்டா ஆகிய மூன்று கார்களின் நிறமும் வெள்ளைதான்!

மீண்டது ஹோண்டா!

மோட்டார் நியூஸ்

ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி, ஹோண்டா நிறுவனத்தைக் கடுமையாக பாதித்துவிட்டது. ஜப்பானில் இருந்து பாகங்கள் வராததால் பிரியோ, ஜாஸ் உள்ளிட்ட கார்களின் தயாரிப்புப் பணிகள் முடங்கின. இதில் இருந்து மீள்வதற்குள், ஹோண்டாவின் மற்றொரு முக்கிய தொழிற்சாலை உள்ள தாய்லாந்து நாடும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதனால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு உதிரி பாகங்களின் சப்ளை நின்றுபோனது. உதிரி பாகங்கள் வராததால், இந்தியாவில் பிரியோ, ஜாஸ் கார்களுக்கான புக்கிங்கை நிறுத்தியது ஹோண்டா. தற்போது தாய்லாந்தில் தயாரிப்புப் பணிகளைத் துவக்கிவிட்டதால், இந்தியாவில் நொய்டாவில் உள்ள ஹோண்டா தொழிற்சாலையிலும் பணிகள் மீண்டும் துவங்கி இருக்கின்றன. இனி, ஹோண்டா கார்களுக்கான வெயிட்டிங் பீரியட் குறையும்!

ஹீரோ- ப்யூயல் ரேஸிங் கூட்டணி!

மோட்டார் நியூஸ்

மோட்டார் ஸ்போர்ட்ஸைத் தவிர கிரிக்கெட், கோல்ஃப் என மற்ற விளையாட்டுகளுக்கு ஸ்பான்ஸர் செய்து வந்த ஹீரோ நிறுவனம், இறுதியாக ரேஸிங்கில் இறங்கியிருக்கிறது. ஹோண்டாவுடனான பிரிவுக்குப் பிறகு, 'ஹீரோ மோட்டோ கார்ப்’ எனும் தனது பிராண்டை உலகம் முழுவதும் பிரபலப்படுத்துவதற்காக, அமெரிக்காவின் எரிக் ப்யூயல் ரேஸிங் அணியுடன் இணைந்திருக்கிறது. டீம் ஹீரோ, AMSOIL ஹீரோ என இரண்டு அணிகளை ஸ்பான்ஸர் செய்கிறது ஹீரோ. இரண்டு அணியிலும் இந்திய ரேஸ் வீரர்கள் யாரும் இல்லை!

ஓவர் ஸ்பீடு வேண்டாமே!

மோட்டார் நியூஸ்

கடந்த மாதம் டெல்லியில் நிகழ்ந்த கோர விபத்து, சூப்பர் கார் பிரியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. 3 கோடி ரூபாய் லம்போகினி காரில் பயணம் செய்த 26 வயதான அனுக்குள் ரிஷி என்பவர், அதிக வேகத்தில் பறந்து கம்பத்தின் மீது மோதியதில், காரின் முன் பக்கம் அப்பளம் போல நொறுங்கியது. சம்பவ இடத்திலேயே அனுக்குள் மரணம் அடைந்தார். மூன்று கோடி ரூபாய் கார், காருக்குள் காற்றுப் பைகள் வசதி இருந்தும் அனுக்குள் மரணம் அடையக் காரணம், அவர் சீட் பெல்ட் அணியாததுதான். எத்தனை கோடி ரூபாய் கார் வாங்கினாலும், அதிக வேகம் உயிரைப் பறிக்கும் என்பதைப் பலருக்கு உணர்த்தியிருக்கிறது இந்தச் சம்பவம்.

ஸ்ப்ளெண்டரில் போனாலும் சரி, பெராரியில் போனாலும் சரி... ஓவர் ஸ்பீடு வேண்டாமே!

குறைகிறது வெயிட்டிங் பீரியட்!

மோட்டார் நியூஸ்

 இனி ஹோண்டா பைக், ஸ்கூட்டர்களின் வெயிட்டிங் பீரியட் குறையும் என எதிர்பார்க்கலாம். ராஜஸ்தானில் தனது இரண்டாவது தொழிற்சாலையில் தயாரிப்புப் பணிகளைத் துவக்கிவிட்டது ஹோண்டா. இங்கே ஆண்டுக்கு 12 லட்சம் பைக், ஸ்கூட்டர்களைத் தயாரிக்கத் திட்டமிட்டு இருக்கிறது. பெங்களூருவில் உருவாகி வரும் ஹோண்டாவின் மூன்றாவது தொழிற்சாலையில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் பணிகள் துவங்கிவிடுமாம். இதன் மூலம், அடுத்த ஆண்டில் இருந்து 40 லட்சம் வாகனங்களை ஹோண்டா தயாரிக்கும்!

வந்துவிட்டது ஸ்விஷ்!

மோட்டார் நியூஸ்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்திருந்த ஸ்விஷ் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது சுஸ¨கி. ஆக்ஸஸ் ஸ்கூட்டரைப் போலவே இருக்கும் இந்த ஸ்கூட்டருக்குள் இருப்பதும் ஆக்ஸஸின் 125 சிசி இன்ஜின்தான். புதிய சிறப்பம்சங்கள் எதுவும் இல்லை. இதன் சென்னை ஆன் ரோடு விலை

மோட்டார் நியூஸ்

55,100.

திருட்டு வாகனமா... உடனே கண்டுபிடிக்கலாம்!

இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்த வாகனமாக இருந்தாலும், அதன் விபரங்களை ஒரே ஒரு எஸ்.எம்.எஸ் மூலம் தெரிந்துகொள்ளும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. செல்போனில் இருந்து ‘vahan’ என டைப் செய்து, ஒரு ஸ்பேஸ் விட்டு, விபரம் அறிய விரும்பும் வாகனத்தின் பதிவு எண்களை இடைவேளி இல்லாமல் டைப் செய்து (உ.ம்-vahan tn01ab0001), 0921 235 7123 என்ற எண்ணுக்கு எஸ்எம்.எஸ் அனுப்பினால், சில விநாடிகளில் பதில் எஸ்.எம்.எஸ் வந்துவிடும். அதில் வாகன உரிமையாளரின் பெயர், என்ன வகை வாகனம், தகுதிச் சான்றிதழ் முடிவடையும் தேதி, சாலை வரி முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் இருக்கும்.

மோட்டார் நியூஸ்

இது குறித்து மதுரை மத்தியப் பகுதி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கல்யாண்குமாரிடம் பேசியபோது, 'பொதுவாக, ஒரு வாகனம் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ள, சம்பந்தப்பட்ட வட்டாரப்

மோட்டார் நியூஸ்

போக்குவரத்து அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும். அல்லது தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தி விபரத்தைப் பெற வேண்டும். ஆனால், இந்த இரண்டு முறைகளிலுமே தகவல் பெறுவதில் தவிர்க்க முடியாத கால தாமதமும், நடைமுறைச் சிக்கல்களும் இருந்தன. அதைத் தவிர்க்கவும், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை உடனடியாகப் பெறவும் மத்திய அரசு இதை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த வசதி, பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். அதேபோல், பழைய வாகனத்தை வாங்க, விற்க - வாகனம் யாருடைய பெயரில் இருக்கிறது, வரி கட்டிய விபரங்கள் போன்றவை கிடைப்பதால், திருட்டு வாகனமோ என்ற பயமில்லாமல் வாங்கலாம். அதேபோல், விபத்து ஏற்படுத்திவிட்டுச் செல்லும் வாகனங்களின் உரிமையாளர்களின் பெயரை எளிதில் அறிந்துகொள்ளவும் இது உதவும். விபத்து ஏற்படுத்திவிட்டுச் சென்றவரின் பெயரைப் புகாரில் சேர்க்க முடியும். வாகனச் சோதனையில் உள்ள காவல்துறையினர், சந்தேகத்துக்குரிய வாகனங்களின் பேப்பர்கள் ஒரிஜினலா என உடனடியாக இந்த சேவையின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்!' என்றார் கல்யாண் குமார்.

இந்தச் சேவை 2003-ம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கும், அல்லது 2003-ம் ஆண்டுக்குப் பிறகு பெயர் மாற்றம், புதுப்பித்தல் போன்ற ஏதேனும் ஒரு காரணத்துக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குச் சென்றிருக்கும் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்!

உ.அருண்குமார்,

படம்: பா.காளிமுத்து.  

ஒரு மாதத்தில் ஒரு லட்சம்! - மாருதி சாதனை!

மோட்டார் நியூஸ்

கடந்த ஜனவரி மாதம் மட்டும் 1 லட்சம் கார்களை விற்பனை செய்து சாதனை படைத்திருக்கிறது மாருதி. இதில் மாருதியின் ஆல்ட்டோ, ஸ்விஃப்ட், வேகன்-ஆர் ஆகிய மூன்று கார்களும் டாப் டென் லிஸ்ட்டில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கின்றன. ஆல்ட்டோ, அதிகபட்சமாக 32,965 கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. பல மாதங்களாக டாப் டென் பட்டியலில் இடம் பிடிக்காமல் இருந்த நானோ, மீண்டும் லைம் லைட்டுக்குள் வந்திருக்கிறது. ஜனவரி மாதம் மட்டும் 7,723 நானோ கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. காம்பேக்ட் கார்களைப் பொறுத்தவரை ஃபோர்டு ஃபிகோவின் விற்பனை 7,000 கார்களைத் தாண்டியிருக்கிறது. 3,259 ஃபோக்ஸ்வாகன் போலோ கார்களும், 1,855 மைக்ரா கார்களும் விற்பனையாகி இருக்கின்றன. ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ 2,143 கார்களும், ஹோண்டா சிட்டி 1,600 கார்களும் விற்பனையாகி இருக்கின்றன. டீசல் இன்ஜினுடனும் களம் இறங்கிவிட்ட நிஸான் சன்னி, 3,218 கார்கள் விற்பனையாகி இருக்கின்றன!

1 கோடி மாருதி!

மோட்டார் நியூஸ்

1983-ம் ஆண்டு முதல் இந்தியாவில் கார் விற்பனை செய்து வரும் மாருதி சுஸ¨கி நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதக் கணக்குபடி அதாவது, கடந்த 28 ஆண்டுகளில் 1 கோடி கார்களை விற்பனை செய்து சாதனை படைத்திருக்கிறது. மாருதி 800 கார் மூலம் இந்திய மார்க்கெட்டுக்குள் நுழைந்த மாருதி சுஸ¨கி, 23 ஆண்டுகள் கழித்து 2006-ம் ஆண்டுதான் 50 லட்சம் கார்களை விற்பனை செய்தது. ஆனால், அடுத்த 50 லட்சம் கார்களை வெறும் ஆறே ஆண்டுகளில் விற்பனை செய்திருக்கிறது மாருதி!

மோட்டார் நியூஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism