Published:Updated:

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

Published:Updated:
மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

குமாரசாமிராஜா, டி.கல்லுப்பட்டி.

 நான் சான்ட்ரோ கார் வைத்திருக்கிறேன். புதிதாக 5 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் டீசல் கார் வாங்கலாமென முடிவு செய்திருக்கிறேன். என்ன கார் வாங்கலாம்? இண்டிகா விஸ்டாவில் இடவசதி அதிகம் இருப்பதால், அதை வாங்கலாம் என இருந்தேன். ஆனால், என்னுடைய தம்பி மாருதி ஸ்விஃப்ட் டீசல் வாங்கலாம் என்கிறான். நான் எந்த காரைத் தேர்வு செய்வது நல்லது?

இரண்டு கார்களிலும் ஃபியட்டின் மல்ட்டிஜெட் டீசல் இன்ஜின்தான் இருக்கிறது. இருந்தாலும், மாருதி ஸ்விஃப்ட்தான் கொடுக்கும் பணத்துக்கு ஏற்ற தரமான கார். புதிய விஸ்டாவில் புதுப் புது வசதிகள் இடம் பெற்றிருந்தாலும், பராமரிப்புச் செலவுகள் அதிகம். ஸ்டைல், ரீசேல் மதிப்பு, சர்வீஸ் என்று பல விஷயங்களில் மாருதிதான் பெஸ்ட்!

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

சிவனேசன், மதுரை.

நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். கல்லூரிக்குச் சென்று வர பைக் வாங்கலாமென இருக்கிறேன். ஹீரோவின் சிபிஸீ எக்ஸ்ட்ரீம், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 - இந்த இரண்டில் எந்த பைக்கை வாங்கலாம்?  

 ##~##

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கை வாங்குவதுதான் நல்ல சாய்ஸ். இதன் பர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருக்கும் என்பதோடு, மைலேஜும் அதிகம் கிடைக்கும்!

ஜெயக்குமார், பொள்ளாச்சி.  

நான் மிட் சைஸ் டீசல் கார் வாங்கலாமெனத் திட்டமிட்டிருக்கிறேன். மோட்டார் விகடனில் நிஸான் சன்னி டீசல் குறித்துப் படித்தேன். எனக்கு கார் மிகவும் பிடித்திருக்கிறது. இந்த காரை வாங்கலாமா?

 நிஸான் சன்னி டீசல், தாராள இட வசதி கொண்ட கார். பர்ஃபாமென்ஸிலும் குறைவில்லாத கார். ஓட்டுவதற்கு ஸ்போர்ட்டியாக இருக்காது. ஆனால், குடும்பத்துடன் சொகுசாக நீண்ட தூரம் பயணிக்க சிறந்த காராக இருக்கும். விலை ஒரு விஷயம் இல்லை என்றால், அதிக சிறப்பம்சங்கள் கொண்ட XV மாடலை வாங்குவது நல்ல சாய்ஸ்!

கிறிஸ்டோபர், தூத்துக்குடி. 

நான் ஹூண்டாய் சான்ட்ரோ வைத்திருக்கிறேன். என்னுடைய கார் டயர் அடிக்கடி பஞ்சராகி இம்சிக்கிறது. ட்யூப்லெஸ் டயர் வாங்கிப் பொருத்தலாம் என்றிருக்கிறேன். ட்யூப்லெஸ் டயருக்கும், சாதாரண டயருக்கும் என்ன வித்தியாசம்? கொஞ்சம் விளக்குங்களேன்.  

ட்யூப்லெஸ் டயர்கள் எளிதில் வெப்பமாகாது. ட்யூப்லெஸ் டயர்களின் உட்புறம் ஹாலோ பியூட்டைல், குளோரோ பியூட்டைல் என ஸ்பெஷல் வேதிப் பொருட்களின் கலவையால் உறுதியாக உருவாக்கப்பட்டிருக்கும். இதனால், டயருக்குள் இருந்து காற்று எளிதில் வெளியேறாது. விபத்துகளுக்கு டயர் பஞ்சராவதும், ட்யூப் வெடிப்பதும்தான் முக்கிய காரணங்கள். ட்யூப்லெஸ் டயர்களின் வெளிப்புறம் அதிக தடிமனுடன் உறுதியான ரப்பரைக் கொண்டிருப்பதால், காற்று திடீரென வெடித்து வெளியேறாது. பஞ்சராகும் வாய்ப்பும் குறைவு என்பதுடன், பஞ்சரானாலும் காற்று உடனடியாக வெளியேறி டயர் வெடிக்காது. இதனால், பெரிய அளவிலான விபத்துகளைத் தவிர்க்க முடியும். ரோடு கிரிப்பும் அதிகமாக இருக்கும். ஆனால், டயூப்லெஸ் டயர்களின் ஆயுட்காலம் குறைவு. மூன்று நான்கு முறைக்கு மேல் பஞ்சரானால், டயரை மாற்ற வேண்டிய நிலை வந்துவிடுகிறது.

இந்துராணி, பெங்களூரு. 

என்னுடைய மகன் அமெரிக்காவில் வேலை செய்கிறான். 3 மாத விடுமுறையில் அவன் சென்னை வந்திருந்த போது, ஹூண்டாய் ஐ10 ஆட்டோமேட்டிக் காரை வாங்கினான். இங்கே இருந்தவரை அவன் அந்த காரைப் பயன்படுத்திவிட்டு என்னிடம் கொடுத்துவிட்டான். ஆனால், ஆட்டோமேட்டிக் காரின் மைலேஜ் மிகவும் குறைவாக இருக்கிறது. அடிக்கடி பெட்ரோல் நிரப்பிக் கொண்டே இருக்க வேண்டியிருப்பதால், இந்த காரில் மேனுவல் கியர் பாக்ஸைப் பொருத்த முடியுமா?  

ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸை எடுத்துவிட்டு, மேனுவல் கியர் பாக்ஸைப் பொருத்துவது என்பது மிகப் பெரிய வேலை. அதனால், கியர் பாக்ஸை மாற்றுவதற்குப் பதில் காரை மாற்றிவிடுங்கள். உங்களுடைய கார் சில மாதங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட கார் என்பதால், ஹூண்டாய் டீலரிடம் ஆட்டோமேட்டிக் மாடலைக் கொடுத்துவிட்டு, மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட மாடலை வாங்கிவிடுங்கள். சில ஆயிரங்கள் இதனால் உங்களுக்கு நஷ்டம் ஏற்படலாம். பெட்ரோலுக்கு நீங்கள் செலவழிக்கும் தொகையுடன் ஒப்பிடும்போது இது குறைவாகவே இருக்கும்!

நந்தக்குமார், கோவை. 

ஸ்போர்ட்டியான பைக் வாங்க வேண்டும். யமஹா ஆர்15, ஹோண்டா சிபிஆர் 250ஆர், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180, கவாஸாகி நின்ஜா 250ஆர் - இவற்றில் எதை வாங்கலாம்?  

நான்கு பைக்குகளில் ஸ்டைல், பர்ஃபாமென்ஸ், மைலேஜ், விலை என அனைத்திலும் சிறந்த பைக் ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்தான்.

துளசிதாசன், சேலம். 

எங்கள் வீட்டில் மொத்தம் ஏழு பேர் இருக்கிறோம். எஸ்யூவி வாங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. ஆனால், என்னுடைய பட்ஜெட் 5-6 லட்சம்தான். செகண்ட் ஹேண்டில் எஸ்யூவி வாங்கலாமா?  

செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் எஸ்யூவி கார்களை வாங்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எஸ்யூவி கார்களை அதிக கிலோ மீட்டர்கள் ஓட்டியிருப்பார்கள் என்பதால் சஸ்பென்ஷன், இன்ஜின், டயர்கள் என கிட்டத்தட்ட முக்கிய பாகங்கள் எல்லாமே அதிக தேய்மானத்துக்கு உள்ளாகி இருக்கும். அதனால், 2-3 ஆண்டுகளுக்கு மிகாத பழைய எஸ்யூவியை வாங்குவது நல்லது. உங்கள் பட்ஜெட்டுக்கு மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கிடைக்கும்!

பாலாஜி, சென்னை-24. 

நான் கரீஸ்மா பைக் வைத்திருக்கிறேன். ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கில் வருவதுபோல ஏபிஎஸ் பிரேக்ஸை இதில் பொருத்தலாமா? இதற்கு எவ்வளவு செலவாகும்?

ஏபிஎஸ் பிரேக்கைப் பொறுத்தவரை அதை பைக்கோடு வாங்குவதுதான் நல்லது. கரீஸ்மாவில் ஏபிஎஸ் பிரேக்கை தனியாக வாங்கிப் பொருத்தும்போது, அதன் செயல்பாடு முழு அளவில் இருக்காது. மேலும், மாடிஃபிகேஷன் செய்யவும் அதிக செலவு பிடிக்கும்!