Published:Updated:

170bhp, பனரோமிக் சன்ரூஃப், AT... BS-6 டாடா ஹேரியர் என்ன புதுசு?

டாடா ஹேரியர்
டாடா ஹேரியர் ( Tata Motors )

XMA, XZA, XZA+ எனும் 3 வேரியன்ட்களில் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் AT கியர்பாக்ஸ் கிடைக்கிறது. நெக்ஸான் போலவே தற்போது டாடா ஹேரியர் எஸ்யூவியின் அனைத்து வேரியன்ட்களிலும் ESP ஸ்டாண்டர்டு அம்சம்!

அல்ட்ராஸின் அறிமுக விழாவின்போது ஒளிபரப்பப்பட்ட வீடியோவில், சிவப்பு நிற டாடா ஹேரியர் ஒன்றைப் பார்க்கமுடிந்தது. அதில் 17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் (235/60 டயர்) - அதிக க்ரோம் வேலைப்பாடுகள் - பனரோமிக் சன்ரூஃப் ஆகியவை இடம்பிடித்திருந்தன. பின்னர் டாடா மோட்டார்ஸ் ட்விட்டரில் வரிசையாக வெளியிட்ட டீசர்களைப் பார்த்தால், 170bhp BS-6 Kryotec டீசல் இன்ஜின் - மாற்றியமைக்கப்பட்ட ரியர் வியூ மிரர்கள், 6 Way அட்ஜஸ்ட் Powered டிரைவர் சீட், Calypso Red கலர், ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர் போன்றவை சேர்க்கப்பட்டிருப்பது உறுதியானது; டெல்லி ஆட்டோ எக்ஸ்போ நாளை தொடங்கும் சூழலில், BS-6 ஹேரியரின் புக்கிங்கை அதிகாரபூர்வமாகத் தனது டீலர்களில் டாடா தொடங்கிவிட்டது ( ரூ.30,000)!

Panaromic Sunroof
Panaromic Sunroof
Tata Motors

XMA, XZA, XZA+ எனும் 3 வேரியன்ட்களில் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் AT கியர்பாக்ஸ் (உபயம்: ஹூண்டாய்) கிடைக்கிறது. மற்றபடி 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், டிரைவிங் மோடுகளும் அப்படியே தொடர்கின்றன. நெக்ஸான் போலவே தற்போது ஹேரியரிலும் ESP அனைத்து வேரியன்ட்களிலும் ஸ்டாண்டர்டு ஆக்கப்பட்டுள்ளது (2 காற்றுப்பைகள், ஏபிஎஸ், EBD உடன்). முன்னே சொன்ன புதிய வசதிகள் அனைத்தும், ஹேரியரின் டாப் வேரியன்ட்களான XZ+/XZA+-ல் இருக்கும் எனத் தகவல் வந்துள்ளது.

க்ரெட்டாவை ஓவர்டேக் செய்த செல்டோஸ் விற்பனை - பிரேக்டவுனில் டாடா ஹேரியர்!

டீசர் படங்களைப் பார்க்கும்போது, கேபின் அப்ஹோல்சரியில் சிற்சில மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிகிறது. TPMS, What3Words போன்ற சில பிரீமியமான அம்சங்களும் இருக்கலாம்; மேலும் Pro package-ல் இருந்த வசதிகள் இங்கே சாதாரணமாகவே கொடுக்கப்படும். தற்போதைய BS-4 மாடலைவிட BS-6 வெர்ஷனின் விலை 1 லட்ச ரூபாயாவது அதிகமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆட்டோமேட்டிக் வேரியன்ட், டாப் வேரியன்ட் மேனுவல் மாடலைவிட 1.5 லட்சம் கூடுதல் விலையில் கிடைக்கலாம். முன்பைவிட பவர்ஃபுல் டீசல் இன்ஜின் - ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் வந்திருப்பதால், ஹெக்டருடன் முன்பைவிட வலுவாக மோதுவதற்குத் தயாராகியுள்ளது ஹேரியர். கடந்த ஆண்டின் இறுதியில் 1.75 லட்ச ரூபாய் வரைத் தள்ளுபடிகள் வழங்கப்பட்ட சூழலில், ஹேரியரின் விலையை டாடா 35-55 ஆயிரம் ரூபாய் வரை ஜனவரி 2020-ல் அதிகரித்துவிட்டது.

6 Speed AT
6 Speed AT
Tata Motors
டாடா ஹேரியர்
டாடா ஹேரியர்
Tata Motors

இந்த மிட்சைஸ் எஸ்யூவி வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டதைக் கொண்டாடும் விதமாக, Personalised Badges - Unique Scuff Plates - Priority Test Drives - இலவச 40 பாயின்ட் செக்அப், கார் வாஷ், Vacuuming - Customer Referral திட்டத்தின்படி 5,000 அமேஸான் வவுச்சர் - Pentacare Warranty (5 வருடம்/1 லட்சம் கிமீ) எனப் பல அம்சங்களை அள்ளி வழங்கியிருக்கிறது டாடா. தற்போது மாதத்துக்கு சராசரியாக 1,500 கார்கள் விற்பனையாகும் நிலையில், இந்த மாற்றங்கள் ஹேரியரின் விற்பனையை அதிகரிக்க உதவும் என நம்பலாம்.

அடுத்த கட்டுரைக்கு