Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:
மோட்டார் நியூஸ்
மோட்டார் நியூஸ்

ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட சன்னி காரை, விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது நிஸான். அதிக இடவசதி கொண்ட கார் என்பதால், ஹேட்ச்பேக் காரான மைக்ராவையே பின்னுக்குத் தள்ளிவிட்டு, நிஸான் கார்களின் விற்பனையில் முதலிடம் பிடித்துவிட்டது சன்னி. ஹோண்டா சிட்டி, ஃபோர்டு ஃபியஸ்டா, ஹூண்டாய் வெர்னா ஆகிய கார்களில், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல் 'ஹிட்’ என்பதால், மிட்-சைஸ் கார் மார்க்கெட்டில் தனது விற்பனையைக் கூட்ட, இந்த ஆட்டோமேட்டிக் மாடலை அறிமுகப்படுத்துகிறது நிஸான். தீபாவளி நெருக்கத்தில் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோட்டார் நியூஸ்

பிப்ரவரி மாத மோட்டார் சைக்கிள் விற்பனையில், 5,23,465 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து சாதனை படைத்திருக்கிறது ஹீரோ மோட்டோ கார்ப். அடுத்து 3,01,916 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது. ஹோண்டா 2 வீலர்ஸ் நிறுவனம் 2,06,043 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து மூன்றாம் இடத்தையும், 1,52,796 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து டிவிஎஸ் நான்காம் இடத்தையும் பிடித்திருக்கின்றன. பிப்ரவரி மாத விற்பனையில் யமஹாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஐந்தாம் இடம் பிடித்திருக்கிறது சுஸ¨கி. இது, 37,366 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. யமஹா, 27,050 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து ஆறாவது இடத்தைப் பிடித்திருக்கிறது!

மோட்டார் நியூஸ்

பட்ஜெட்டில் டீசல் கார்கள் மீதான வரி உயர்த்தப்படலாம்’ என்ற செய்தியால், கார் தயாரிப்பு நிறுவனங்கள் டீசல் கார்களுக்கான முதலீடுகளை முடக்கி வைத்திருந்தன. இப்போது டீசல் கார்களுக்கென தனி வரி எதுவும் இல்லை என்ற அறிவிப்பு வந்து விட்டதால், மீண்டும் தனது திட்டங்களை முழு வேகத்தில் செயல்படுத்த ஆரம்பித்துவிட்டன. மாருதி, ஹூண்டாய், ஃபோக்ஸ்வாகன், ஃபோர்டு ஆகிய நிறுவனங்கள் 3000 கோடி முதலீட்டிலான டீசல் இன்ஜின் தயாரிப்புப் பணிகளைத் துவக்கி விட்டதால், விரைவில் புதிய டீசல் இன்ஜினுடன் பல கார்கள் அறிமுகமாகும்!

மோட்டார் நியூஸ்

இந்தியாவில் தொழிற்சாலை துவங்கிய இரண்டு ஆண்டுகளுக்குள் தனது இரண்டாவது பிராண்டை அறிமுகப்படுத்திவிட்டது நிஸான். குறைந்த விலை கார்களை 'டட்சன்’ என்ற பிராண்டில் உலகம் முழுவதும் நிஸான் விற்பனை செய்து வந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு டட்சன் பிராண்டில் வாகனங்களை வெளியிடுவதை நிறுத்திவிட்டது. ஆனால், கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி, ''4 லட்ச ரூபாய்க்குள்ளான விலை குறைந்த கார்கள் இந்தியா, ரஷ்யா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில், டட்சன் பிராண்ட் பெயரில் 2014-ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும்'' என்றார் நிஸான் நிறுவனத் தலைவர் கார்லோஸ் கோன். இந்தியாவில் டட்சன் பிராண்டை நிஸான் இந்தியா தலைவர் கிமிநோபு டொகியோமா அறிமுகம் செய்தார்.

டட்சன் பிராண்டில், 800-1000 சிசியில் 3 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் சின்ன கார் முதலில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகச் சொல்கிறார்கள் நிஸான் இந்தியா நிறுவனத்தினர்!

மோட்டார் நியூஸ்

'எரிபொருள் விலையில் 50% வீழ்ச்சி!’, 'கார் வைத்திருப்போருக்கு மட்டும் 20% சிறப்பு தள்ளுபடி...’ என்ற வாசகங்கள் இப்போது தமிழ்நாடு எங்கும் பிரபலமாகிவிட்டது. பெட்ரோல், டீசல் என்று மட்டுமல்ல... வீட்டில் உபயோகிக்கும் சமையல் எரிவாயுவிலிருந்து மின்சாரம் வரை எப்படி சிக்கனமாகப் பயன்படுத்துவது என்று டி.வி. மற்றும் பத்திரிகைகள் வாயிலாக 'பிசிஆர்ஏ’ எனப்படும் 'பெட்ரோலியம் கன்வர்சேஷன் மற்றும் ரிசர்ச் அசோசியேஷன்’ சொல்லி வருகிறது. இந்தப் பிரசாரத்தை, பிரசார வாகனங்கள் மூலமாகவும் இப்போது இந்த நிறுவனம் செய்ய ஆரம்பித்திருக்கிறது!

மோட்டார் நியூஸ்

கடந்த மாதம் 17, 18 தேதிகளில் வேலூரில் உள்ள ஜெயின் கார்ஸ் நிறுவனம், மெகா கார்னிவல் ஒன்றை நடத்தியது. அதாவது, ஒரே கூரையின் கீழ் மஹிந்திரா, நிஸான், ஹோண்டா ஆகிய கார்களை சிறப்புச் சலுகையுடன் வாங்க முடியும் என்பதுதான் இந்த கார்னிவெல்லின் சிறப்பம்சம். நிகழ்ச்சியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கயல்விழி துவக்கி வைத்தார். ஒவ்வொரு பிராண்ட் காருக்கும் ஷோ ரூம் ஷோரூமாக அலைந்து திரியும் வாடிக்கையாளர்கள், ஒரே இடத்தில் பல்வேறு பிராண்ட் கார்கள் நிற்பதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். இத்துடன் மஹிந்திரா கமர்ஷியல் வாகனங்களும், ஹோண்டாவின் 'ஆட்டோ டெரஸ்’ யூஸ்டு கார் எக்சேஞ்சும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது!

மோட்டார் நியூஸ்
மோட்டார் நியூஸ்

இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையாகும் கார்களில், மூன்றாவது இடத்தைப் பிடித்துவிட்டது மாருதி ஸ்விஃப்ட் டிசையர். நான்கு மீட்டர் நீளத்துக்குள் விற்பனைக்கு வந்திருக்கும் ஸ்விஃப்ட் டிசையரின் விற்பனை, கடந்த ஜனவரி மாதம் 7000 கார்கள்தான். பிப்ரவரி டிசையரின் விற்பனை இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது. வழக்கம் போல மாருதி ஆல்ட்டோ 32,909 கார்கள் விற்பனையாகி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. ஆல்ட்டோவுக்கு அடுத்து 20,739 கார்கள் விற்பனையாகி இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது ஸ்விஃப்ட். டிசையர் 15,068 கார்கள் விற்பனையாகி மூன்றாவது இடம் பிடித்திருக்கிறது. பிப்ரவரி மாத விற்பனைப்படி ஹூண்டாய் ஐ10 காரைவிட ஹூண்டாய் இயான் அதிகம் விற்பனையாகி இருக்கிறது.

டாடா நானோ 9,217 கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. டாடா இண்டிகா விஸ்ட்டா மற்றும் மான்ஸா கார்களின் விற்பனையும் கிட்டத்தட்ட 10,000 கார்களை நெருங்கியதால், பிப்ரவரியில் மொத்தம் 30,000 கார்களை விற்பனை செய்திருக்கிறது டாடா. சொகுசு கார் மார்க்கெட்டில் ஆடி 600 கார்களை விற்பனை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது!

மோட்டார் நியூஸ்

இந்தியாவிலேயே முதன்முறையாக ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் பட்டப் படிப்பு தொடங்கப்பட்டது சென்னை குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில்தான். அந்தப் பெருமையை நிலை நாட்ட, தங்கள் துறையில் பல சாதனைகளைச் சத்தமில்லாமல் படைப்பது எம்.ஐ.டி ஆட்டோமொபைல் துறை மாணவர்களின் வழக்கம். அப்படி இந்த தடவை அவர்கள் நுழைந்திருப்பது பெட்ரோலிய தயாரிப்பில் உலக ஜாம்பவானான 'ஷெல்’ நிறுவனத்தின் கோட்டைக்குள். நெதர்லாந்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ஷெல், ஆண்டுதோறும் 'ஷெல் ஈகோ மாரத்தான்’ என்ற பெயரில் எரிபொருள் சிக்கனத்துக்கான கார் தயாரிப்புப் போட்டியை உலக அளவில் நடத்தும். அமெரிக்கா, ஐரோப்பா கண்டங்களுக்கு மட்டுமே இதுநாள் வரை தனித்தனியாக நடத்தப்பட்ட போட்டியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் ஆசிய கண்டமும் இணைத்துக் கொள்ளப்பட்டது. ஜூலை மாதம் மலேசியா செப்பாங் ரேஸ் டிராக்கில் நடக்கும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள, எம்.ஐ.டி. ரேஸிங் டீமும் தேர்வாகியிருக்கிறது.

''இது போட்டிதான். ரேஸ் கிடையாது. சிம்பிளா சொன்னா... உலக அளவில் நடக்கும் மைலேஜ் மன்னர்களுக்கான யுத்தம். பல அணிகள் பெட்ரோல் இன்ஜினோடு போட்டி போட, நாங்கள் எலெக்ட்ரிக் காரை உருவாக்கி வருகிறோம்'' என்றார் அணித் தலைவர் ஆதித்யா.

AMESIM சாஃப்ட்வேர் கொண்டு செய்யப்படும் விஷ§வல் சிமுலேஷன், சக்கரத்தோடு இல்லாமல், காரின் கன்ட்ரோலரோடு இணைக்கப்பட்ட டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், காரில் பிரேக் பிடிக்கும்போது உண்டாகும் சக்தியை வீணாக்காமல் மீண்டும் பேட்டரிக்கே கொண்டு செல்லும் ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் என வெற்றியைச் சாத்தியப்படுத்தும் அத்தனை தொழில்நுட்பங்களுடனும் களம் காணக் காத்திருக்கிறது. எம்.ஐ.டி ரேஸிங் டீம்!

- மோ.அருண்ரூப பிரசாந்த் படம்: ஜெ.தான்யராஜூ

மோட்டார் நியூஸ்

மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிஸிகளில், பிரீமியம் வசூலைவிட கிளைம் தொகை அதிகமாக இருப்பது, விலைவாசி உயர்வு மற்றும் மோட்டார் இன்ஷூரன்ஸ் தொகுப்பு நிதி ரத்து போன்ற காரணமாக வருகிற ஏப்ரல் முதல் இன்ஷூரன்ஸ் பிரீமியம் தொகை உயர்கிறது. இன்ஷூரன்ஸில் தேர்டு பார்ட்டி இன்ஷூரன்ஸ் மற்றும் ஓன் டேமேஜ் இரண்டு பிரிவுகளில்தான் இந்த விலை ஏற்றம். இதற்கான அனுமதியை இன்ஷூரன்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பான ஐ.ஆர்.டி.ஏ அளித்திருக்கிறது. மொத்தத்தில் இன்ஷூரன்ஸ் பிரீமியம் சுமார் 15 முதல் 20 சதவிகிதம் வரை உயரும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism