Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

Published:Updated:
மோட்டார் கிளினிக்

குமரகுரு, சென்னை. 

மோட்டார் கிளினிக்

புதிதாக பைக் வாங்க வேண்டும். கேடிஎம் 200 பைக் வாங்குவதா? அல்லது ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக் வாங்குவதா எனக் குழப்பமாக இருக்கிறது. எந்த பைக்கை வாங்கலாம்?

மோட்டார் கிளினிக்
 ##~##

கேடிஎம் 200 நேக்கட் ஸ்ட்ரீட் பைக். நகருக்குள் வேகமாகப் பறப்பதற்கு ஏற்ற பைக் இது. ஆனால், நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது முகத்தில் அறையும் காற்றைத் தடுக்க இதில் ஃபேரிங் இல்லை. சிபிஆர் 250ஆர் பைக்கை நகரம், நெடுஞ்சாலை என இரண்டு விதமான சாலைகளிலும் பயன்படுத்த முடியும். மைலேஜைப் பொறுத்தவரை இரண்டு பைக்குகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. பர்ஃபாமென்ஸைப் பொறுத்தவரை கேடிஎம் 200 பைக்கைவிட ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கின் பர்ஃபாமென்ஸ் அதிகம். இறுதியில் ஸ்டைல்தான் உங்கள் முடிவை இறுதி செய்யும். ஸ்டைலான நேக்கட் பைக் வாங்க வேண்டும் என்றால், கேடிஎம் 200 பைக்கை வாங்குங்கள். ஃபுல் ஃபேரிங் கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக்தான் வேண்டும் என்றால், ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கை வாங்குங்கள்!

சங்கரேஸ்வரன், சென்னை.

மோட்டார் கிளினிக்

நான் புதிதாக ஹோண்டா கார் வாங்குவதற்காக சென்னையில் உள்ள டீலரை அணுகினேன். அங்குள்ள சேல்ஸ் ஆபீஸர், தங்களிடம் கடந்த ஆண்டு, அதாவது 2011-ம் ஆண்டு மாடல் ஹோண்டா சிட்டி கார் இருப்பதாகவும், இந்த காரை வாங்கும்பட்சத்தில் எனக்கு கிட்டத்தட்ட 1 லட்சம் ரூபாய் வரை டிஸ்கவுண்ட் கிடைக்கும் என்றும் சொன்னார். மாடலைப் பொறுத்தவரை இப்போது விற்பனையில் இருக்கும் மாடலுக்கும், இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஃபேக்டரியில் கடந்த ஆண்டு அதிகமாகத் தயாரிக்கப்பட்ட கார்களைத்தான் இப்போது கொடுக்கிறோம் என்கிறார். இந்த காரை வாங்கலாமா?

8 லட்ச ரூபாய் கார், 1 லட்ச ரூபாய் குறைவாகக் கிடைக்கும்போது நிச்சயம் அந்த காரை வாங்குவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. மேலும், இப்போதுள்ள மாடலுக்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதும் உங்களுக்குச் சாதகமானதே! ஆனால், வாரன்டி மற்றும் சர்வீஸ் செலவுகள் எப்போதில் இருந்து அமலுக்கு வரும்? அதாவது, கார் கடந்த ஆண்டு மாடல் என்பதால், தயாரிப்பில் இருந்து மூன்று ஆண்டுகள் வாரன்டியா? அல்லது விற்பனையில் இருந்து 3 ஆண்டுகள் வாரன்டியா என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்!

மோட்டார் கிளினிக்

ஜெயசீலன், கோவை.

மோட்டார் கிளினிக்

என்னுடைய பட்ஜெட் 12 லட்சம். நான் ஹூண்டாய் வெர்னா டீசல் வாங்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன். ஆனால், என்னுடைய வீட்டில் ஸ்கோடா ரேபிட் கார் வாங்கலாம் எனச் சொல்கிறார்கள். நான் எந்த காரை வாங்குவது?

ஸ்கோடா ரேபிட் பில்டு குவாலிட்டியில் மிகவும் சிறந்த கார். ஆனால், பர்ஃபாமென்ஸைப் பொறுத்தவரை ஸ்கோடா ரேபிட்டைவிட ஹூண்டாய் வெர்னாதான் சிறந்த கார். ஸ்டைலிலும் ஃப்ளூயிடிக் வெர்னா, ஸ்கோடா ரேபிட்டைவிட பல படிகள் முன்னேறியிருக்கிறது. ஸ்கோடா ரேபிட்டின் டிசைனில் எந்த அலங்காரமும் இல்லை. சர்வீஸ் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸைப் பொறுத்தவரை ஸ்கோடாவைவிட ஹூண்டாய் விலை குறைவு!

ஆபிதீன், திருப்பூர்.

மோட்டார் கிளினிக்

சின்ன கார் வாங்க வேண்டும். ஆனால், டீசல் கார்தான் வேண்டும். ஃபோர்டு ஃபிகோ, ஹூண்டாய் ஐ10, செவர்லே பீட், டாடா இண்டிகா விஸ்டா - இந்த நான்கு கார்களில் எந்த கார் பர்ஃபாமென்ஸிலும், மைலேஜிலும் பெஸ்ட்?

ஹூண்டாய் ஐ10 காரில் டீசல் இன்ஜின் இல்லை. செவர்லே பீட் டீசலின் விலை அதிகம். டாடா இண்டிகா விஸ்ட்டாவின் பர்ஃபாமென்ஸ் சுமார் ரகம்தான்.  டீசல் இன்ஜினைப் பொறுத்தவரை ஃபோர்டு ஃபிகோவின் டீசல் இன்ஜின் தரமானதாகவும், அதிக மைலேஜ் தரக்கூடியதாகவும், பர்ஃபாமென்ஸில் சிறந்த காராகவும் இருக்கிறது. அதனால், ஃபோர்டு ஃபிகோதான் உங்களுக்குச் சரியான சாய்ஸாக இருக்கும்!

அர்ஜூன், நாகர்கோவில்.

மோட்டார் கிளினிக்

என்னுடைய பட்ஜெட் 7 லட்சம். மாருதி ஸ்விஃப்ட் டிசையர், நிஸான் சன்னி, ஹூண்டாய் ஐ20 கார்களில் எந்த காரை வாங்கலாம்? காரில் ஐந்து பேர் வசதியாக உட்கார்ந்து பயணிக்க வேண்டும். பர்ஃபாமென்ஸில் சிறந்த காராகவும் இருக்க வேண்டும்.

ஐந்து பேர் வசதியாக உட்கார்ந்து பயணிக்கக் கூடிய அளவுக்கு இட வசதியான கார் நிஸான் சன்னி. ஹூண்டாய் ஐ20 காரில் ஐந்து பேர் உட்கார முடியும்  என்றாலும், இது ஹேட்ச்பேக் கார். நீண்ட தூரம் சொகுசாக உட்கார்ந்து பயணிக்க முடியாது. மாருதி ஸ்விஃப்ட் டிசையரில் லெக் ரூம் குறைவு. நிஸான் சன்னி இடவசதியிலும், பர்ஃபாமென்ஸிலும், மைலேஜிலும் சிறந்த கார்.

வருண்குமார், மதுரை.

மோட்டார் கிளினிக்

நான் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறேன். என்னுடைய வீட்டில் 'பவர்ஃபுல் பைக் வாங்கித் தர மாட்டோம். 100 சிசி பைக் வேண்டும் என்றால் வாங்கிக் கொள்’ என்கிறார்கள். 100 சிசியில் ஸ்டைலான, பர்ஃபாமென்ஸில் சிறந்த பைக் எது?

ஹோண்டா சிபி ட்விஸ்ட்டர் உங்களுக்கு நல்ல சாய்ஸாக இருக்கும். இது இளைஞர்கள் விரும்பும் ஸ்டைல் பைக்காக இருக்கும் என்பதோடு, பர்ஃபாமென்ஸில் 125 சிசி பைக்குகளுடன் போட்டி போடும். விலை கொஞ்சம் அதிகம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்!

புகழேந்தி, திண்டுக்கல்.

மோட்டார் கிளினிக்

என்னுடைய வயது 40. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக பைக் ஓட்டி வருகிறேன். இப்போது புதிய பைக் வாங்க வேண்டும். முதுகுவலியை அதிகப்படுத்தாத பைக் வேண்டும். அதே சமயம், விலையும் அதிகம் இல்லாத பைக்காக இருக்க வேண்டும். என்ன பைக் வாங்கலாம்?

உங்கள் வயதுக்கு ஹோண்டா ஷைன் வாங்குவது சரியாக இருக்கும். இதன் சஸ்பென்ஷன் சிறப்பாக இருப்பதாடு, பைக்கில் உட்கார்ந்து ஓட்டும் ரைடிங் பொசிஷன் மிகவும் கச்சிதமாக இருக்கிறது. முதுகை வளைத்து, குனிந்து ஓட்ட வேண்டிய அவசியம் இல்லை என்பதால், இந்த பைக் முதுகைப் பதம் பார்க்காது. 125 சிசி பைக் என்பதால், பர்ஃபாமென்ஸிலும் குறைவில்லை. விலையும் பவர்ஃபுல் பைக்குகளுடன் ஒப்பிடும்போது குறைவுதான்!