Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:

ஹோண்டா பிரையோ ரெடி!

மோட்டார் நியூஸ்

 டொயோட்டா எட்டியோஸ் ஹேட்ச்பேக் காருக்குப் போட்டியாக, ஹோண்டா நிறுவனம் களம் இறக்க இருக்கும் காரின் பெயர் 'பிரையோ!’ நம் நாட்டுக்கு அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது இந்த கார் . பிரையோ என்றால், 'வேடிக்கையான சின்ன கார்’ என்று அர்த்தமாம்! 1.2 லிட்டர், 3 சிலிண்டர், வி-டெக் தொழில்நுட்பம் இல்லாத இன்ஜினை, இதில் பொருத்த திட்டமிட்டு இருக்கிறது ஹோண்டா. ஜாஸைப் போலவே அதிக இடவசதி, ஏபிஎஸ், காற்றுப் பை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் இந்த காரை, சுமார் 5 லட்ச ரூபாய் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது ஹோண்டா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கார் தயாரிக்கும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ்!

##~##
கமர்ஷியல் வாகனங்களைத் தயாரித்து வரும் இந்தியாவின் 'ஃபோர்ஸ் மோட்டார்ஸ்’ நிறுவனம், அடுத்த ஆண்டு எஸ்யூவி மார்க்கெட்டில் இறங்க இருக்கிறது. இதற்காக புத்தம் புது எஸ்யூவி காரை உருவாக்கி உள்ளது. ஃபோர்ஸ் மோட்டார்ஸின் புதிய எஸ்யூவி, மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் டாடா சஃபாரி ஆகிய கார்களுக்குப் போட்டியாக இருக்கும்.

இந்தப் புதிய எஸ்யூவி, 'லோட்டஸ்’ கார் தயாரிப்பு நிறுவனத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. லோட்டஸ் நிறுவனம், காரின் கையாளுமை மற்றும் ஓட்டுதல் தரத்துக்கு ஃபோர்ஸ் மோட்டார்ஸுக்கு உதவுகிறது. இந்த எஸ்யூவியில் இருப்பது 'டெய்ம்லர்’ நிறுவனத்தின் 2.2 லிட்டர் இன்ஜின். பென்ஸ் சி கிளாஸ், இ கிளாஸ் கார்களின் இன்ஜின்களை அசெம்பிள் செய்வது ஃபோர்ஸ் மோட்டார்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டார் நியூஸ்

மொத்தம் 11 கார்களை 3 லட்சம் கி.மீ வரை ஓட்டி டெஸ்ட் செய்துள்ளது ஃபோர்ஸ் மோட்டார்ஸ். இந்த எஸ்யூவி தயாரிப்புக்காக 150 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறது. இதற்கிடையே, அடுத்த ஆண்டு ஜனவரி-மார்ச் மாதவாக்கில் ஸைலோ மற்றும் இனோவாவுக்குப் போட்டியாக புதிய வேன் ஒன்றையும் அறிமுகம் செய்ய இருக்கிறது ஃபோர்ஸ் மோட்டார்ஸ்!

மைக்ரா டீசல் இப்போது விற்பனைக்கு!

மோட்டார் நியூஸ்

மைக்ரா டீசல் காரின் புக்கிங்கைத் துவங்கிவிட்டது நிஸான். மைக்ரா டீசலுக்குள் தற்போது மஹிந்திரா லோகன் காருக்குள் இருக்கும் 1.5 லிட்டர் இன்ஜினே பொருத்தப்பட்டு இருக்கிறது. மாருதி ஸ்விஃப்ட், ஃபோர்டு ஃபிகோ, ஸ்கோடா ஃபேபியா டீசல் கார்களுக்குப் போட்டியாக களம் இறக்கப்பட்டு இருக்கும் மைக்ரா டீசலின் விலை, கிட்டத்தட்ட 6 லட்ச ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 1,062 பெட்ரோல் மைக்ரா கார்களை விற்பனை செய்திருக்கிறது நிஸான்!

வருகிறது புதிய இனோவா!

மோட்டார் நியூஸ்

2012 -ம் ஆண்டு முதல் புத்தம் புது இனோவாவை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது டொயோட்டா. இது, தற்போது இனோவா உற்பத்தி செய்யப்படும் அதே பிளாட்ஃபார்மில்தான் தயாரிக்கப்பட இருக்கிறது என்பதால், தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் எதிர்பார்க்க முடியாது. தற்போது விற்பனையில் இருக்கும் இனோவாவின் டிசைனை வாடிக்கையாளர்கள் விரும்புவது இன்னொரு காரணம். இனோவாவின் ஸ்டைலில் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்ய இருக்கிறது டொயோட்டா. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மற்றும் பவர்ஃபுல் இன்ஜினுடனும் புது இனோவா அறிமுகமாகிறது!

தங்க நானோ!

மோட்டார் நியூஸ்

தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட நானோ காரை அறிமுகம் செய்திருக்கிறது டாடா. தங்கத்தை விற்பனை செய்து வரும் டாடா குழுமத்தின் மற்றொரு நிறுவனமான 'டாடா கோல்டு ப்ளஸ்’ நிறுவனம்தான் நானோவை தங்கத்தால் அலங்கரிக்க இருக்கிறது. தங்க அலங்காரம் பூசப்பட்ட மூன்று வகையான டிசைன்களை வெளியிட்டு இருக்கிறது கோல்டு ப்ளஸ். இதில், எந்த டிசைன் நானோ சிறப்பாக இருக்கிறது என்பதை, பொதுமக்கள் www.gold-plusnano.comஇணைய தளத்தில் சென்று வாக்களிக்கலாம். டிசம்பர் 12, 2010-ம் தேதிக்குள் வாக்களிக்க வேண்டும். மக்களால் சிறந்த டிசைன் என தேர்ந்தெடுக்கப்படும் தங்க நானோ, 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வரும்!வேண்டும். மக்களால் சிறந்த டிசைன் என தேர்ந்தெடுக்கப்படும் தங்க நானோ, 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வரும்!

பாடிகார்ட் பிள்ளையார்!

மோட்டார் நியூஸ்

நீங்கள் சென்னைவாசியாக இருந்தால், பாடிகார்ட் முனீஸ்வரனைத் தெரியாமல் இருக்க முடியாது. புதிய வாகனம் வாங்கியதுமே பாடிகார்ட் முனீஸ்வரனுக்கு பூஜை போட்டு விட்டுத்தான் சாலையில் ஓட்டிச் செல்வார்கள். ஆனால், இலங்கையில் முற்றிலும் வித்தியாசமாக ஒரு பாடிகார்ட் கோயில் இருக்கிறது. இலங்கையின் பிரபலமான முருகன் கோவில் இருக்கும் கதிர்காமத்துக்கு அருகிலேயே இருக்கிறது செல்லக் கதிர்காமம். இங்குள்ள நதிக்கரை அரச மரத்தடியில் அமைந்துள்ளது செல்வ மாணிக்கப் பிள்ளையார் கோயில். இந்தக் கோயிலைச் சுற்றிலும் ஆல, அரச, வேம்பு மரங்கள் நிறைந்துள்ளன. இங்குதான் முருகனும் வள்ளியும் சந்திக்க, பிள்ளையார் யானை உருவில் வந்து முருகனுக்கு உதவி செய்ததாக ஐதீகம்.

சுற்று வட்டாரத்தில் புதிதாக வாகனங்களை வாங்கும் பக்தர்கள், வாகனத்தின் நம்பர் பிளேட் ஒன்றை எக்ஸ்ட்ராவாக வாங்கி வந்து கோயிலில் உள்ள மரத்தில் கட்டித் தொங்க விடுகிறார்கள். வாகனத்துக்கு எதுவும் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த வேண்டுதலாம்! அவரவர் வசதிக்கேற்ப தகடாகவோ அல்லது 'பிரின்ட் அவுட்’ எடுத்து லேமினேட் செய்தோ மரத்தில் மாட்டி விடுகிறார்கள்!

- கே.கணேசன்

 ஆட்டோ சர்வ் 2010

நந்தம்பாக்கம் டிரேடு சென்டரில் என்றும் போல் அல்லாமல் அன்று மட்டும் சென்னை மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. காரணம், நவம்பர் 19 முதல் 21 வரை 'மை டிவிஎஸ்’ நிறுவனமும் 'பாஷ்’ நிறுவனமும் இணைந்து நடத்திய 'ஆட்டோ சர்வ் 2010’ கண்காட்சிதான். மொத்தம் 96 வகையான உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் கலந்து கொண்டன.

மோட்டார் நியூஸ்

இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சம்பந்தமான அனைத்து விதமான பராமரிப்பு உபகரணங்களும், உதிரி பாகங்களும் மூன்று நாள் நடைபெற்ற இந்தப் கண்காட்சியில் அணிவகுத்தன. ஆட்டோமொபைல் சார்ந்து சிறு தொழில் செய்பவர்கள் முதல், பெரிய பெரிய நிறுவனங்களுக்கும் இந்த 'ஆட்டோ சர்வ் 2010’ மிகவும் பயனுள்ளதாக இருந்தது!

- செ.கார்த்திகேயன்,  படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

பியாஜியோவின் சின்ன கார்!

மோட்டார் நியூஸ்

வெஸ்பா ஸ்கூட்டர் மற்றும் அபே கமர்ஷியல் வாகனங்களைத் தயாரிக்கும் பியாஜியோ நிறுவனம், கார் மார்க்கெட்டில் இறங்க இருக்கிறது. 2.4 மீட்டர் நீளம் கொண்ட சின்ன காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது பியாஜியோ.‘NT-3’என்கிற குறியீட்டுப் பெயர் கொண்ட இந்த சின்ன காரை, மிலனில் நடைபெற்ற இத்தாலி மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைத்திருந்தது பியாஜியோ. 200 மற்றும் 300 சிசி இன்ஜின்கள் இந்த காருக்காகவே உருவாக்கப்பட்டு இருக்கின்றன. 300 சிசி இன்ஜினுடன் எலெக்ட்ரிக் மோட்டாரும் இணைக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் விற்பனைக்கு வர இருக்கும் இந்த காரின் விலை, 1.5 - 2 லட்ச ரூபாய்க்குள் இருக்கும்!

டொயோட்டாவின் மினி எம்பிவி!

எட்டியோஸ் தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில் சின்ன எம்பிவி (மல்ட்டி பர்பஸ் வெஹிக்கிள்) காரைத் தயாரிக்க இருக்கிறது டொயோட்டா. இதன் விலை எட்டியோஸ் செடான் காருக்கும், கரோலாவுக்கும் இடையே இருக்கும் எனத் தெரிகிறது. இதன் விலை சுமார் 8-9 லட்ச ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இது, 2012-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட இருக்கும் மாருதி Riii  காருக்குப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!

தொடர்ந்து ஆல்ட்டோ முதலிடம்!

மோட்டார் நியூஸ்

கார் விற்பனையில் மாருதி ஆல்ட்டோவின் ஆதிக்கமே தொடர்கிறது. கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 32,612 ஆல்ட்டோ கார்களை விற்பனை செய்திருக்கிறது மாருதி. விற்பனையில் இரண்டாம் இடத்தில் இருந்த ஹூண்டாய் ஐ10 பின் தங்கியிருக்கிறது. ஐ10, அக்டோபர் மாதம் 15,103 கார்கள்

மோட்டார் நியூஸ்

விற்பனையாகி மூன்றாம் இடம் பிடிக்க, மாருதி வேகன்-ஆர் 16,952 கார்கள் விற்பனையாகி இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது. ஸ்விஃப்ட் 12,948 கார்கள் விற்பனையாகி நான்காம் இடம் பிடித்திருக்கிறது. இதன் மூலம் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 1,18,908 கார்களை விற்பனை செய்து சாதனை படைத்திருக்கிறது மாருதி. விற்பனைக்கு வந்ததில் இருந்தே முதல் பத்து இடங்களைப் பிடித்து வந்த ஃபோர்டு ஃபிகோவை இந்த முறை ஹூண்டாய் ஐ20 பின்னுக்குத் தள்ளிவிட்டது. அக்டோபர் மாதம் மட்டும் 7,000 ஐ20 கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. இருப்பினும், ஐ20 டாப் 10 இடங்களுக்குள் வர முடியவில்லை. டாடா இண்டிகோ மற்றும் இண்டிகா கார்களின் விற்பனை மொத்தம் 18 ஆயிரம் கார்களைத் தாண்டி இருக்கிறது. தொடர்ந்து மூன்றாவது மாதமாக நானோவின் விற்பனை குறைந்து வருகிறது. அக்டோபர் மாதம் சுமார் 3,000 நானோ கார்களே விற்பனையாகின!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism