Published:Updated:

திண்டுக்கல் 'திப் திப்' கூட்டணி

புல்லட் கிளப் TN57

பிரீமியம் ஸ்டோரி
##~##

ப்ரல் மாதத்தின் ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை. திண்டுக்கல் - வத்தலக்குண்டு சாலையில் புல்லட் கிளாஸிக், தண்டர்பேர்டு, புல்லட்-350 என கலந்துகட்டி 16 பைக்குகள் சாலையில் தடதடத்தன. அதில் ஒருவரை ஓரங்கட்டி, ''என்ன பாஸ்... ஒரே என்ஃபீல்டு பைக்கா இருக்கு... எங்க கிளம்பிட்டீங்க?'' என்று விசாரித்தேன். 

'நாங்கள்லாம் திண்டுக்கல் 'டிஎன் 57 புல்லட் கிளப்’ மெம்பர்ஸ்... இன்னிக்கு மூணாறு ட்ரிப் கிளம்பிட்டோம்' என்றார். அந்த குரூப்பை வழிநடத்திச் சென்ற அசோக்குமாரிடம் பேசினேன். ''நான் திண்டுக்கல் ராயல் என்ஃபீல்டு டீலர். எங்க பைக் ஷோ ரூமுக்கு சர்வீஸுக்கு வர்றவங்களை ஒண்ணு சேர்த்து 'டிஎன் 57 புல்லட் கிளப்’னு ஆரம்பிச்சுருக்கோம். எங்க கிளப்புல 50 பேருக்கு மேல இருக்காங்க. எல்லாருமே லீவு நாட்கள்ல இந்த மாதிரி ரைடு போக ஆசைப்படுறவங்க. ஏற்கெனவே ஒரு தடவை கொடைக்கானலுக்கும், ஒரு தடவை கோவாவுக்கும் போயிருக்கோம். இப்ப மூணாறு' என்றவர், ''ட்ரிப்பை முடிச்சுட்டு ரிலாக்ஸா பேசுவோம்'' என்றார். இரு தினங்கள் கழித்து அசோக்குமாரைச் சந்தித்தேன். மூணாறு சென்று வந்த பயணத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

திண்டுக்கல் 'திப் திப்' கூட்டணி

'எல்லாருமே ஏறத்தாழ ஒரே ஏஜ் குரூப். திண்டுக்கல்ல உள்ளவங்க மட்டும் இல்லாம, எங்ககிட்ட நாகர்கோவில், தூத்துக்குடியில இருந்து சர்வீஸுக்கு வர்றவங்க மூணு பேரும் சேர்ந்துக்கிட்டாங்க. மொத்தம் 16 பேர். காலைல ஏழு மணிக்கு திண்டுக்கல்ல எங்க ஷோரூம்ல எல்லாரும் அசெம்பிள் ஆகி, அங்கிருந்து கிளம்புனோம். தேனியில காலை டிபன் முடிச்சோம். குமுளி ரோட்டுல மூணாறு ரோட்டை விட்டுட்டு 20 கி.மீ தாண்டிப் போயிட்டோம். அப்பறம் திரும்பி வந்து சரியான ரோட்டைப் பிடிச்சு காலை பதினோரு மணிக்கு மூணாறு போனோம். எங்களுக்கு வேற புரோகிராம் எதுவும் கிடையாது. ஜாலி ரைடு மட்டும்தான் எங்க நோக்கம். அங்கங்க போட்டோஸ் மட்டும் எடுத்துக்கிட்டோம்.

மதியம் மூணாறு, மாட்டுப்பெட்டி டேம் பக்கத்துல சாப்பிட்டுட்டு ஒரு காட்டுப் பாதையில பொள்ளாச்சிக்குக் கிளம்பினோம். அந்தப் பாதை ரிசர்வ் ஃபாரெஸ்டுக்குள்ள இருக்கறதால, செக் போஸ்ட்ல ரொம்பக் கெடுபிடி பண்ணுனாங்க. இருபது கிலோ மீட்டருக்கு மேல காட்டுப் பாதையில செம த்ரில்லிங்கான பயணம். நாங்க மட்டும்தான் அந்த ரோட்டுலேயே... எதிரேயும் சரி, பின்னாலயும் சரி, எந்த வாகனங்களும் கிடையாது. பொள்ளாச்சி, உடுமலை, பழநி வழியா ராத்திரி பத்தரை மணிக்கு திண்டுக்கல் வந்து சேர்ந்தோம். மொத்தம் ஓட்டினது 440 கி.மீ!' என்று முடித்தார்.

'திடீர்னுதான் மூணாறு ட்ரிப் பிளான் பண்ணி போயிட்டு வந்தோம். அதுக்குள்ள விஷயத்தைக் கேள்விப்பட்டு நிறைய பேர் செல்லமா கோவிச்சுக்கிட்டாங்க. இனிமே மாசம் ஒரு ட்ரிப் போயிட்டு வரலாம்னு பிளான் பண்ணிக்கிட்டிருக்கோம். 'ரொட்டீன் ஒர்க்ல இருந்து, ஒரு நாளைக்கு இப்படி எஸ்கேப் ஆகுறது மனசுக்கு ரொம்ப உற்சாகமா இருக்கும்’ என்பது எங்க கிளப் மெம்பர்ஸோட கருத்து. கஸ்டமர்களை வெறும் வாடிக்கையாளரா மட்டும் இல்லாமல் அதைத் தாண்டி நண்பர்களாகவும் மாறியிருக்கிறது எனக்குக் கிடைச்ச கிஃப்ட்!' என்றார் அசோக்குமார். 

ஜி.பிரபு  வீ.சிவக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு