Published:Updated:

புழுதி வீரன்!

புழுதி வீரன்!

புழுதி வீரன்!

புழுதி வீரன்!

Published:Updated:
 ##~##

ந்தியாவில் தேசிய அளவில் நடத்தப்படும் டர்ட் ரேஸ் - கல்ஃப் நேஷனல் சாம்பியன்ஷிப் மற்றும் எம்.ஆர்.எஃப். சூப்பர் கிராஸ் ஆகிய இரண்டும் தான். இதில், கல்ஃப் நேஷனல் சாம்பியன்ஷிப் பட்டத்தை இரண்டு முறை வென்றிருக்கும் ஒரே தமிழர், கோவையைச் சேர்ந்த ஆனந்த்!

 கோவை போத்தனூர் அருகிலிருக்கும் ஆனந்த்தின் வீட்டில் அவரைச் சந்தித்தேன். டர்ட் ரேஸில் நெடுங்காலமாக வெற்றிகளைச் சந்தித்துக் கொண்டிருப்பதன் ஆதாரமாக, அறையெங்கும் வியாபித்திருக்கும் ட்ராஃபிகளை வருடியபடி பேச ஆரம்பித்தவர், ''எல்லா பசங்களை மாதிரியே சின்ன வயசுல இருந்தே எனக்கும் பைக்ஸ் மேலே காதல் உண்டு. டீன்-ஏஜ் தொட்ட சமயத்துல ஃப்ரெண்ட்ஸோட ஃபீவர் தொத்திக்கிட்டதால, பைக் ஸ்டன்ட் பண்றதுல ரொம்ப ஈடுபாடா இருந்தேன். ஆனா, நான் டர்ட் ரேஸுக்குள்ளே வந்தது 2003-ல்தான்.

புழுதி வீரன்!

சொன்னா நம்பமாட்டீங்க! பக்கத்துல உள்ள டீக்கடையில உட்கார்ந்து அரட்டை அடிச்சுட்டு இருக்கிறப்ப, டர்ட் ரேஸ் ஓட்டுற என் ஃப்ரெண்ட் வந்து, 'இன்னைக்கு ரேஸ் இருக்குதுடா. நீயும் வா’-ன்னு சொல்லி கூட்டிட்டுப் போனான். ஆர்வமே இல்லாம அங்கே போனவன், விளையாட்டா நோவீஸ் கிளாஸ்ல கலந்துகிட்டேன். இதுதான் ஸ்டார்ட்டிங் லெவல் கிளாஸ். முதல் போட்டியிலேயே மூணாவது இடம் கிடைச்சது. எதிர்பாராமக் கிடைச்ச இந்த வெற்றியோட பூரிப்பு, வீட்டுல எல்லாரும் பெருமைப்பட்டது, பசங்களோட கொண்டாட்டம் எல்லாமே சேர்ந்து என்னை டர்ட் ரேஸ்ல தீவிரமா இறக்கிடுச்சு!

புழுதி வீரன்!

2004-ல் மேட்டுப்பாளையம் பக்கம் நடந்த ரேஸ் விபத்துல கை மணிக்கட்டு அடிபட்டு எலும்பு ரெண்டா உடைஞ்சுடுச்சு. உடம்பு வலியைவிட ரேஸ் போக முடியலையேங்கிற மன ஏக்கம் படுத்திடுச்சு. ட்ரீட்மென்ட், பிசினஸ் அப்படி இப்படின்னு கிட்டத்தட்ட மூணு வருஷம் ட்ராக்கை விட்டு விலகியே நின்னேன். எனக்குள்ளே ஓடிக்கிட்டிருந்த சோகத்தைப் புரிஞ்சுகிட்ட எங்க அம்மா ஒருநாள், 'நீ மறுபடியும் டர்ட் ரேஸ் ஓட்டுடா’-னு சொல்லி ரேஸ் பைக் சாவியைக் கையில கொடுத்தாங்க. பயிற்சிகளுக்குப் பிறகு ரேஸ்ல கலந்துகிட்டவனுக்குத் தோல்விதான் கிடைச்சது.

ஆனால், 2009-ல் பெஸ்ட் ரைடர், எஸ்.எம்.ஆர்.சி. ரேஸிங்கில் பெஸ்ட் ரைடர், ரேஸ் ஃபீவர் போட்டியில பெஸ்ட் ரைடர்னு அதுக்குப் பிறகு ஒவ்வொரு போட்டியும் எனக்கு அடுத்தடுத்த மைல் ஸ்டோனை காண்பிச்சது. நேஷனல் லெவல்ல நடத்தப்படுற மிக முக்கிய டர்ட் ரேஸான கல்ஃப் நேஷனல் சாம்பியன்ஷிப்புக்குத் தேர்வானேன். 2009-10 கல்ஃப் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில குரூப் சி 165 சிசி பிரிவுல சாம்பியன்ஷிப் பட்டத்தைத் ஜெயித்தேன். 2011-12-ல் குரூப் டி பிரைவேட் எக்ஸ்பர்ட் கிளாஸ் 260 சிசி பிரிவில சாம்பியன்ஷிப் அடிச்சேன். இந்த ரெண்டு சாதனையும் என்னை மனப்பூர்வமா சந்தோஷப்பட வெச்சுது. இப்போதைய என்னோட எய்ம் இன்டர்நேஷனல் டர்ட் ரேஸ்கள்ல கலந்துக்கணும், கோப்பை தட்டணும்... அவ்ளோதான்!'' என்றார்.

ஆனந்த்துக்கு கோவையைச் சேர்ந்த 'லார்ட்ஸ் ரேஸிங்’ என்கிற நிறுவனம் ஸ்பான்ஸர் செய்து கை உயர்த்திவிடுகிறதாம். இதை நன்றியோடு குறிப்பிடும் ஆனந்த், ''கர்நாடகா, கேரளா மாதிரி மாநிலங்கள்ல ஒரு ரேஸ்ல ஜெயிச்சுட்டாலே ஸ்பான்ஸருங்க ஓடி வந்து உதவி பண்றாங்க. ஆனா, தமிழ்நாட்டுல இந்த நிலை இல்லை. இந்த நிலை மாறினா சர்வதேச அளவுல தமிழக ரேஸர்கள் முத்திரை பதிக்கிற காலம் வரும்'' என்கிறார் நம்பிக்கையாக.

''டர்ட் ரேஸ் டிராக்குக்கு வரத் துடிக்கிற கத்துக்குட்டிப் பசங்களுக்கு  உங்க அட்வைஸ் என்ன?'' என்று கேட்டதும், ''வெற்றி முக்கியம்தான். ஆனா, அதைவிட நம்ம உடம்பு ரொம்ப முக்கியம். அதனால, சாதாரணமா ப்ராக்டீஸ் பண்றப்பகூட ஹெல்மெட், பூட், எல்போ கார்டு இந்த மாதிரியான பாதுகாப்பு விஷயங்களைப் போட்டுக்காம பைக்கை தொடாதீங்க. சாதாரண ரோட்டுல ரேஸ் ஓட்டுற மாதிரி பைக்கை ஓட்டாதீங்க. இது நமக்கும் நல்லது, மத்தவங்களுக்கு நல்லது. வாரத்துக்குக் குறைஞ்சது மூணு நாட்களாச்சும் ப்ராக்டீஸ் பண்ணுங்க. உடம்புக்கு நிகரா நீங்க ஓட்டுற பைக்கை முறையா மெயின்டெய்ன் பண்ணுங்க. டிராக்குக்கு இந்த பைக்கை கொண்டு போறப்ப ஓட்டிட்டே போகாமா, ஆட்டோல போட்டே எடுத்துட்டுப் போங்க. பைக்கை நாம மதிச்சா, அது நமக்கு நிச்சய வெற்றியைத் தேடித் தரும். ஆல் தி பெஸ்ட்'' என்று அறியா முகங்களை வாழ்த்தியவரை நானும் வாழ்த்தினேன்!

 எஸ்.ஷக்தி  தி.விஜய்