தொழில்நுட்பம்
Published:Updated:

தேர்டு பார்ட்டி பிரீமியம் மீண்டும் உயர்ந்தது!

தேர்டு பார்ட்டி பிரீமியம் மீண்டும் உயர்ந்தது!

 ##~##

பைக் மற்றும் கார்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு (தேர்டு பார்ட்டி) பிரீமியம் மீண்டும் ஒரு முறை உயர்ந்திருக்கிறது. மோட்டார் இன்ஷூரன்ஸில் பிரீமிய வசூலைவிட, இழப்பீடு கோரிக்கை அதிகமாகியிருப்பதை அடுத்து, காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆ¬ணையமான ஐ.ஆர்.டி.ஏ., மூன்றாம் நபர் (தேர்டு பார்ட்டி) இன்ஷூரன்ஸ் பிரீமியத்தை அதிகரித்து இருக்கிறது. 

இந்த தேர்டு பார்ட்டி இன்ஷூரன்ஸ் பாலிஸி என்பது, சட்டப்படி அனைவரும் எடுக்க வேண்டியதாகும். அந்த வகையில் இந்த வகை பாலிஸியை பொதுத்துறை, தனியார் துறை என அனைத்து பொதுக் காப்பீடு நிறுவனங்களும் அளிக்கின்றன. இதே தேர்டு பார்ட்டி இன்ஷூன்ரன்ஸ் பிரீமியத்தை கடந்த 2011 ஏப்ரல் மாதத்தில் கார்களுக்கும் வர்த்தக வாகனங்களுக்கும் ஐ.ஆர்.டி.ஏ பத்து சதவிகிதம் அதிகரித்தது. சரியாக, ஓராண்டுக்குப் பின் இப்போது மீண்டும் தேர்டு பார்ட்டி இன்ஷூரன்ஸ் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

தேர்டு பார்ட்டி பிரீமியம் மீண்டும் உயர்ந்தது!

அதாவது இப்போது இது, சாதாரணமாக 6 முதல் 40% வரை வாகனத்தின் திறனுக்கு ஏற்ப பிரீமியம் உயர்த்தப் பட்டிருக்கிறது. 2012, ஏப்ரல் முதல் தேதி முதல் அமலுக்கு வந்திருக்கிறது.

பிரீமிய அதிகரிப்பு, இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்குக் குறைவாகவும், வர்த்தக வாகனங்களுக்கு அதிகமாகவும் இருக்கிறது. உதாரணத்துக்கு, 1000 சிசி திறன் கொண்ட காருக்கு தேர்டு பார்ட்டி பிரீமியம் 880 ரூபாயிலிருந்து 925 ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், சரக்கு

தேர்டு பார்ட்டி பிரீமியம் மீண்டும் உயர்ந்தது!

எடுத்துச் செல்லும் மூன்று சக்கர வாகனத்துக்கான பிரீமியம் 2,440 ரூபாயிலிருந்து 3,415 ரூபாயாக அதிகரிக்கப் பட்டுள்ளது.

ஏற்கெனவே இப்போதே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நொந்து போயிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது கூடுதல் சுமைதான்!

 பூகம்பம்... இன்ஷூரன்ஸ்!

 அண்மையில் ஏற்பட்ட பூகம்ப அதிர்வுகள் மக்களைக் கதிகலங்க வைத்திருக்கிறது. வாகனம் வைத்திருப்பவர்களுக்குக் கூடுதல் கவலை! பூகம்பம் வரும்போது அலுவலகம் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் சாலைக்கு ஓடி வந்து உயிர் தப்பிக் கொள்ளலாம். நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்களைக் காப்பது எப்படி என்பதுதான் அந்தக் கவலை! வாகனங்களை சேதத்திலிருந்து காப்பாற்ற முடியவில்லை என்றாலும், அவற்றுக்கு இன்ஷூரன்ஸ் பாலிஸி எடுத்து வைத்திருப்பது மூலம் இழப்பீடு கோர முடியும்.

இதற்கு பொதுக் காப்பீடு நிறுவனங்களின் தேர்டு பார்ட்டி மற்றும் ஓன் டேமேஜ் பாலிஸி இரண்டும் இணைந்த காம்ப்ரிஹென்சிவ் (comprehensive) பாலிஸி எடுத்திருக்க வேண்டும். இதை பிரைவேட் கார் இன்ஷூரன்ஸ் என்றும் சொல்வார்கள். பூகம்பம், மழை, புயல் போன்றவற்றால் வாகனம் சேதம் அடைந்தால், அந்த சேதத்துக்கு ஏற்ப இழப்பீடு கிடைக்கும். இதற்கான பிரீமியம், காரின் தற்போதைய மதிப்பில் சுமார் 1.5% முதல் 2% அளவுக்கு இருக்கிறது. முழுமையாக இன்ஷூரன்ஸ் செய்தவர்கள் இதற்கென தனியாக பாலிஸி எடுக்க வேண்டிய அவசியமில்லை!

- சேனா சரவணன்