Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:
மோட்டார் நியூஸ்

பென்ஸை பின்னால் தள்ளிய ஆடி!

மோட்டார் நியூஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 சில ஆண்டுகள் முன்பு வரை சொகுசு கார் மார்க்கெட்டில் இந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனமாக இருந்தது பென்ஸ். பிஎம்டபிள்யூ சென்னையில் தொழிற்சாலை துவங்கிய அடுத்த இரண்டு ஆண்டுகளில் - முதல் இடத்தை இழந்த பென்ஸ், இப்போது இரண்டாம் இடத்தையும் ஆடிக்கு விட்டுக் கொடுத்திருக்கிறது. ஜனவரி-மார்ச் மூன்று மாத இடைவெளியில் 2,369 கார்களை விற்று பிஎம்டபிள்யூ முதல் இடத்திலும், 2,269 கார்களை விற்று ஆடி இரண்டாவது இடத்திலும், 2,130 கார்களை விற்று மெர்சிடீஸ் பென்ஸ் மூன்றாம் இடத்திலும் உள்ளன!

BMWவின் ஒலிம்பிக் கனவு!

மோட்டார் நியூஸ்

2012 ஒலிம்பிக் போட்டிகளுக்காக, பிரம்மாண்ட ஐடியாவுடன் களம் இறங்கியிருக்கிறது பிஎம்டபிள்யூ. ஒலிம்பிக் போட்டிகளுக்காக 4,000 விலை உயர்ந்த கார்களை இப்போதே கொண்டு வந்து லண்டனில் நிறுத்தியிருக்கிறது பிஎம்டபிள்யூ. ஒலிம்பிக் போட்டிகளுக்கு வரும் வி.ஐ.பி.கள் லண்டனில் தங்கியிருக்கப் போகும் இரண்டு வாரங்களுக்குப் பயன்படுத்த, இந்த கார்களை இலவசமாகக் கொடுக்க இருக்கிறது இந்த நிறுவனம். இலவச கார் மட்டுமல்ல, அவற்றை ஓட்டுவதற்குத் தேர்ச்சி பெற்ற டிரைவர்களையும் கொடுக்க முடிவாகியுள்ளது. லண்டனின் டிராஃபிக்கில் வெளிநாட்டு வி.ஐ.பி.க்கள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, லோக்கல் பாதைகள் அனைத்தும் தெரிந்த டிரைவர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியும் துவங்கிவிட்டது!

புதிய டிவிஎஸ் அப்பாச்சி 180

மோட்டார் நியூஸ்

சின்னச் சின்ன கலர், பேரிங் மாற்றங்களுடன் விற்பனைக்கு வருகிறது டிவிஎஸ் அப்பாச்சி 180. பஜாஜ் நிறுவனம் தனது புதிய பல்ஸர்-200 பைக்கை அறிமுகப்படுத்திஇருக்கும் நிலையில், அதனுடன் போட்டி போட டபுள் ஹெட் லைட் உள்பட சில மாற்றங்களுடன் அறிமுகப்படுத்த இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி. பைக் விற்பனைக்கு வருவதற்கு முன்பு, இன்டர்நெட்டில் ரிலீஸான அப்பாச்சி 180 பைக்கின் படங்கள்தான் இதில் இருப்பவை!

மோட்டார் நியூஸ்

5500 கோடிக்கு டுகாட்டியை வாங்கியது ஆடி!

மோட்டார் நியூஸ்

கடும் போட்டிக்கு மத்தியில், டுகாட்டி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை வாங்கியிருக்கிறது ஆடி கார் நிறுவனம். ஆடி நிறுவனம் வாங்கியிருந்தாலும், உலகம் முழுவதும் கார்களைத் தயாரிக்கும் ஜெர்மன் நாட்டின் ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் ஒரு அங்கம்தான் ஆடி என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலிய சூப்பர் பைக் தயாரிப்பு நிறுவனமான டுகாட்டி, நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு நிதி திரட்ட பெரும்பான்மையான பங்குகளை விற்க இருப்பதாக கடந்த மாதம் அறிவித்தது. இதனால், டுகாட்டியை வாங்குவதற்கு உலக அளவில் ஏராளமான நிறுவனங்கள் களத்தில் குதித்தன. இந்தியாவின் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம்கூட டுகாட்டியை வாங்க பேச்சு வார்த்தை நடத்தியது. இறுதியில் 5,500 கோடி ரூபாய்க்கு டுகாட்டியை வாங்கி இருப்பதாக அறிவித்திருக்கிறது ஆடி!

தீயில் கருகி நாசமான 45 யமஹா ஆர்15 பைக்குகள்!

மோட்டார் நியூஸ்

2009-ம் ஆண்டு முதல், சென்னை இருங்காட்டுக்கோட்டை ரேஸ் டிராக் மைதானத்தில் 'ஆர்-15 ஒன் மேக் சாம்பியன்ஷிப் ரேஸ்’ போட்டியை நடத்தி வருகிறது யமஹா. இந்த ஆண்டும் ரேஸ் போட்டியைத் துவங்குவதற்கு முன்பு, ரேஸ் ஓட்டுனர் பயிற்சி முகாமை மே 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடத்தத் திட்டமிட்டிருந்தது அந்த நிறுவனம். இதற்காக, 45 யமஹா ஆர்-15 பைக்குகள் சென்னை ரேஸ் டிராக்கில் நிறுத்தப்பட்டிருந்தன. யமஹா பைக்குகள் அனைத்தும் சங்கிலியால் பிணைத்து வைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையே, யமஹா பைக்குகள் நிறுத்தப்பட்ட இடத்தின் அருகே, விக்கி சந்தோக்கின் வாலஸ் ஸ்போர்ட்ஸ் ரேஸ் கார்களை, அங்கிருந்த மெக்கானிக்குகள் வெல்டிங் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கார் தீப்பிடிக்க... அருகில் இருந்த யமஹா ஆர்-15 பைக்குகளும் எரிய ஆரம்பித்துவிட்டன. பைக்குகள் அனைத்தும் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு இருந்ததால், எந்த பைக்கையும் வெளியே எடுக்க முடியவில்லை. 45 யமஹா ஆர்-15 பைக்குகளும் எரிந்து நாசமான பிறகே, அங்கு தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்திருக்கின்றன!

சுஸ¨கி-சல்மான்கூட்டணி!

மோட்டார் நியூஸ்

ஹயாட்டே பைக்கின் பிராண்ட் அம்பாஸடராக நடிகர் சல்மான்கானை அறிவித்திருக்கிறது சுஸ¨கி. ஜனவரி மாதம் டெல்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் ஹயாட்டே பைக்கை அறிமுகப்படுத்தியது சுஸ¨கி. இது, ஏற்கெனவே விற்பனையில் ஸ்லிங்ஷாட் போலவே இருப்பதாக விமர்சனங்கள் எழும்ப, பைக்குக்கு சல்மான்கானை வைத்து கவர்ச்சி கூட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. சல்மான்கான்தான் சுஸ¨கி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் முதல் பிராண்ட் அம்பாஸடர்!

இனி ஹோண்டா சியல் இல்லை!

பைக் தயாரிப்பில் ஹீரோவைவிட்டுப் பிரிந்த ஹோண்டா, கார் தயாரிப்பிலும் கூட்டணி நிறுவனத்திடம் இருந்து பிரிகிறது. இந்திய நிறுவனமான 'சியல்’ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் கார்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது ஹோண்டா. ஆனால், ஹீரோ போல் சியல் நிறுவனத்துக்கு ஹோண்டாவில் அதிக பங்குகள் இல்லை. ஹோண்டாவில் வெறும் 5 சதவிகித பங்குகளையே வைத்திருக்கிறது சியல். இப்போது இந்தியாவில் புதிதாக ஹோண்டா 3000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதால், சியல் நிறுவனத்தின் பங்குகளையும் சேர்த்து தானே வாங்கிவிடுவது என முடிவெடுத்திருக்கிறது. ஆகவே, இனி 'ஹோண்டா - சியல் நிறுவனம்’ இல்லை. வெறும் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம்தான்!

மஹிந்திரா சிட்டியில் மஹிந்திராவின் ஆராய்ச்சி!

மோட்டார் நியூஸ்

கார் மார்க்கெட்டில் அதிரடி லட்சியங்களுடன் வேகம் எடுத்திருக்கும் மஹிந்திரா நிறுவனம், பிரம்மாண்டமான வாகன ஆராய்ச்சி மையத்தை சென்னை மஹிந்திரா வேர்ல்டு சிட்டியில் திறந்துள்ளது. ஏற்கெனவே மஹிந்திராவின் டிசைன் சென்டர் இங்கிருந்த நிலையில், இப்போது பிரம்மாண்டமாக 126 ஏக்கர் நிலப்பரப்பில், 650 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த ஆராய்ச்சி மையத்தை விரிவுபடுத்தியிருக்கிறது மஹிந்திரா. இந்த ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தில் கார் மட்டும் அல்லாமல், டிராக்டர், கமர்ஷியல் வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களையும் வடிவமைக்கும் பணிகள் நடைபெறும். தற்போது 1,500 பேர் பணிபுரியும் இந்த ஆராய்ச்சி மையத்தில், கூடுதலாக 1500 பேருக்கு வேலை தர இருக்கிறது மஹிந்திரா. தற்போது விருதுகளை அள்ளி வரும் மஹிந்திராவின் ஙீஹிக்ஷி500 கார் சென்னையில்தான் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது!

சென்னையில் வால்வோ!

மோட்டார் நியூஸ்

சென்னை லக்ஸ¨ரி கார் ஷோ ரூமின் லேட்டஸ்ட் வரவு, 'வால்வோ.’ வால்வோ பஸ்களின் தரமும் பெயரும் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. சுவீடன் நிறுவனமான வால்வோ, இந்தியாவில் இதுவரை ஆறு இடங்களில் கார் ஷோ ரூம் திறந்திருக்கிறது. தமிழகத்தில் இது இரண்டாவது ஷோ ரூம். ஆம்... சென்னைக்கு வருவதற்கு முன்னரே, கோவையில் தனது சக்கரத்தைப் பதித்துவிட்டது வால்வோ.

சென்னை அண்ணா சாலை அருகே இருக்கும் எக்ஸ்பிரஸ் அவின்யூ ஷாப்பிங்  மாலில், கார் ஷோ ரூம் திறக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியம். அநேகமாக, ஒரு ஷாப்பிங் மாலில் கார் ஷோ ரூம் திறக்கப்பட்டது இதுதான் முதன்முறையாக இருக்கும்.

''எஸ்யூவி செக்மென்ட்டில் ஙீசி60, ஙீசி90, செடான் மாடலில் ஷி80, ஷி60 ஆகிய கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளோம். டீசல் வேரியன்ட்டுகளும் இதில் அடக்கம். ஜெர்மன் தொழில்நுட்பம், ஆயிரம் சவால்கள் விட்டாலும் பயணப் பாதுகாப்பு, மைலேஜ் இரண்டுமே வால்வோவின் பிளஸ் பாயின்ட்!'' என ஷோரூமைத் திறந்து வைத்துப் பேசினார் வால்வோ ஆட்டோ இந்தியாவின் நிர்வாக இயக்குனர் தாமஸ் எர்ன்பெர்க்!

- மோ.அருண்ரூப பிரசாந்த், படம்: ஜெ.தான்யராஜு

சென்னையில் மோட்டோ ஷோ!

மோட்டார் நியூஸ்

'மோட்டோ ஷோ’ என்ற பெயரில் வருகிற ஜூன் 22, 23, 24 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில், அனைத்து தரப்பட்ட மக்களும் பயன்பெறும் வகையில் குறைந்த விலை முதல் அதிக விலை உள்ள பைக் மற்றும் கார்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இந்தக் கண்காட்சியில் புதுப் புது வாகனங்கள், சர்வீஸ் உபகரணங்கள், வாகன அலங்காரப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன என்பதுடன், எழுபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. அதேபோல், பொறியியல் மாணவர்கள் பயன்பெறும் வகையில், கார் தொழிற்சாலையில் முன்னணி நிறுவனங்களில் உள்ள அதிகாரிகளால் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பற்றிய கருத்தரங்கமும் நடைபெற உள்ளது. மோட்டோ ஷோ நடக்கும் ஒரு மாதத்துக்கு முன், சாலை விதிகளை வலியுறுத்தும் வகையில் இரு சக்கர வாகன விழிப்பு உணர்வுப் பேரணி மெரினாவில் தொடங்கி சென்னை முழுவதும் நடைபெற இருப்பதாகத் தெரிவித்தார், இந்தக் கண்காட்சியை நடத்தும் 'பிங்க் ஆட்ஸ்’ நிறுவனத்தின் ஜெ.செல்வகுமார்.

சாம்பியன் ஆவாரா சரத்?

மோட்டார் நியூஸ்

மோட்டோ ஜீபி பைக் ரேஸைப் போல புகழ் பெற்றது இத்தாலியன் 125 ஜீபி. சர்வதேசப் போட்டியான இதில், நம் நாட்டைச் சேர்ந்த மஹிந்திரா நிறுவனம் இந்த ஆண்டுதான் முதன்முறையாகக் கலந்து கொண்டுள்ளது. இத்தாலி வீரர் ஒருவரும், இந்திய வீரர் ஒருவரும் மஹிந்திரா அணி சார்பாக இப்போட்டிகளில் பங்கேற்கிறார்கள். இதில், இரண்டு சுற்றுப் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில், இந்திய வீரரான சரத்குமார் சென்னையைச் சேர்ந்தவர். இவர் முதன்முறையாக சர்வதேசக் களத்தில் புகுந்து மஹிந்திராவுக்குப் புள்ளிகள் பெற்றுத் தந்துள்ள்ளார். சரத்துக்கு சமீபத்தில் சென்னையில் மஹிந்திரா நிறுவனம் சார்பாகப் பாராட்டு விழா நடந்தது. முதல் சுற்றில் தொழில்நுட்பக் கோளாறால் பாதியில் வெளியேறிய சரத், இரண்டாவது சுற்றில் ஏழாவது இடத்தைக் கைப்பற்றி, சர்வதேச ரேஸ் போட்டிகளில் தனது புள்ளிக் கணக்கைத் துவக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

-  சா.வடிவரசு

முன்னேறும் ஹூண்டாய் இயான்!

மோட்டார் நியூஸ்

கடந்த மார்ச் மாதம் 20 சதவிகித வளர்ச்சி கண்டு வெற்றிநடை போட ஆரம்பித்திருக்கிறது இந்திய கார் மார்க்கெட். வழக்கம்போல 35,245 கார்களை விற்பனை செய்து முதல் இடத்தில் இருக்கிறது மாருதி ஆல்ட்டோ. இதற்கு அடுத்தபடியாக, மற்ற சின்ன கார்களை எல்லாம் முந்திவிட்டு இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது மாருதி ஸ்விஃப்ட். 20,521 கார்கள் விற்பனையாகி ஸ்விஃப்ட் இரண்டாம் இடம் பிடிக்க, 16,451 கார்கள் விற்பனையாகி மூன்றாம் இடம் பிடித்திருக்கிறது மாருதி ஸ்விஃப்ட் டிசையர். மாருதி வேகன்-ஆர் 14,589 கார்களுடன் நான்காம் இடம் பிடித்திருக்கிறது. மாருதி கார்களுக்கு அடுத்தபடியாக 12,500 கார்களுடன் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது ஹூண்டாய் இயான். மார்ச் மாத விற்பனைப் பட்டியலில் 6,355 கார்களுடன் முன்னேற்றம் கண்டிருக்கிறது ஹோண்டா பிரியோ. மிட் சைஸ் கார் மார்க்கெட்டில் அசத்திவரும் நிஸான் சன்னி, 4,151 கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. டொயோட்டா எட்டியோஸ் 5,104 கார்களும், லிவா 3,437 கார்களும் விற்பனையாகி இருக்கின்றன. சொகுசு கார் பிரிவில் 1,002 கார்கள் விற்பனை செய்து மார்ச் மாத விற்பனைப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறது ஆடி!