Published:Updated:

தவம் ரத்த ஓட்டம் காதலி கடவுள்

தவம் ரத்த ஓட்டம் காதலி கடவுள்

பிரீமியம் ஸ்டோரி
 ##~##

மக்கு எந்த பைக் பிடிக்குமோ, அந்த பைக்கை கையில் கொடுத்து, 'இந்தியா¬வ ஒரு ரவுண்டு வாருங்கள். செலவையெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று யாராவது சொன்னால்...? கேஸ்ட்ரால் பவர் ஒன் நிறுவனம் கொடுத்த உற்சாகத்தில், எஃப்ஸி-1, நின்ஜா 250, ஹோண்டா சி.பி.ஆர் 250, சுஸ¨கி பேண்டிட் 1250, கேடிஎம் 200 என்று ஐந்து சூப்பர் பைக்குகளில், புது டெல்லியில் புறப்பட்டு, அரைவட்டம் அடித்து சென்னை வந்திருந்தது சூப்பர் பைக்கர்ஸ் குழு. அவர்களை சென்னை மெரினா பீச்சில் சந்தித்தேன். 

இந்தக் குழுவில் போட்டோகிராபர், ஐடி இன்ஜினீயர், ஆட்டோமொபைல் துறையைச் சார்ந்த ஊடகத் துறையினர் எனக் கலவையாக இருந்தனர். குழுவின் தலைவரான சுனில் குப்தா, ''மார்ச் 11-ம் தேதி புதுடெல்லியில் பயணத்தைத் தொடங்கிய நாங்கள் ஜெய்ப்பூர், அஹமதாபாத், மும்பை, புனே, கோவா, பெங்களூரூ, கேரளா வழியாக கன்னியாகுமரியைத் தொட்டோம். அங்கிருந்து நேராக உங்கள் சிங்காரச் சென்னைக்கு வந்துள்ளோம். இங்கிருந்து டெல்லி நோக்கிப் பயணமாக இருக்கிறோம். இந்தப் பயணம் எங்களுக்கு எதிர்பாராத பல அனுபவங்களையும், சுவாரசியங்களையும், நண்பர்களையும் பஞ்சமே இல்லாமல் வாரி வாரிக் கொடுத்து வருகிறது'' என்று உற்சாகமாகப் பேசினார் சுனில் குப்தா.

தவம் ரத்த ஓட்டம் காதலி கடவுள்

தொடர்ந்து பேசிய சந்தீப் கஜ்ஜார், ''பைக்கைப் பொறுத்துதான் பயணம் சுகமாவதும் சுமையாவதும். இது போன்ற நீண்ட நெடிய பைக் பயணம் செய்து எங்களுக்கு அனுபவம் இருந்ததால், வழியில் என்ன பிரச்னை எல்லாம் ஏற்படும் என்பது எங்களுக்கு அத்துப்படி! அதனால், முன்னதாகவே பலமுறை பைக்குகளை பரிசோதனை செய்துவிட்டு அதன் பின்புதான் பயணத்துக்கே கிளம்பினோம்'' என்றார்.

தவம் ரத்த ஓட்டம் காதலி கடவுள்

''உலக அளவில் இந்தியாவுக்குத்தான் பைக் விற்பனையில் இரண்டாவது இடம் என்றாலும், சரியான முறையில் பைக் ஓட்டுவது பற்றிய விழிப்பு உணர்வு மிகக் குறைவுதான் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். அது தவறு என்பதை இப்போது அனுபவம் புரிய வைத்திருக்கிறது. ஃபேஸ்புக்கில், 'இங்கே, இத்தனை மணிக்கு வரப் போகிறோம்’ என அப்டேட் செய்து கொண்டே வந்ததில் செம ரெஸ்பான்ஸ்! நாங்கள் எந்த ஊருக்குச் சென்றாலும் சரி, நாங்கள் சென்று சேருவதற்கு முன்பாகவே ஃபேஸ்புக் பைக் நண்பர்கள் எங்களை வரவேற்கக் காத்திருப்பார்கள். பாதுகாப்பான முறையில் எப்படி பைக் ஓட்டுவது, பராமரிப்பது என்பது பற்றி எல்லாம் அவர்களுடன் எங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வோம். ஒரு சிலர் ஆர்வத்தில் நாங்களும் உங்களுடன் வருகிறோம் என அடம்பிடிப்பார்கள். சில நண்பர்கள் 50 கி.மீ, 100 கி.மீ வரை கூடவே வருவார்கள். அவர்களுக்கு அதில் ஒரு மகிழ்ச்சி; எங்களுக்கு இதுதான் உற்சாக டானிக். இது போன்று நாங்கள் சந்தித்த நண்பர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும்!'' என்றார் ஹிமான்ஷ§ குப்தா உருக்கமாக.  

''இத்தனை பைக் ஆர்வலர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பை பயனுள்ளதாக்க வேண்டாமா? அதனால், இவர்களிடம் ஒரு சர்வே எடுத்தோம். பிடித்த பைக், டூரிஸ்ட் ஸ்பாட் என கொஞ்சம் கேள்விகளை வைத்து ஜாலி சர்வேயும் எடுத்தோம். 'பைக் ஓட்டுவதைப் பற்றி தங்கள் கருத்து?’ என்ற கேள்விக்கான பதிலை பலர் கவித்துவமாகத் தீட்டிவிட்டார்கள். 'பைக் ஓட்டுவது ஒரு தவம், என்னுடைய ரத்த ஓட்டம் மாதிரி. எனது காதலிக்கும் மேல், கடவுளை உணர வேண்டும் என்றால், பைக் ஓட்டிப் பார்’ என்று பலர் ஓவராக உணர்ச்சிவசப்பட்டார்கள். இவை அனைத்தையும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடலாம் என்ற திட்டம் கூட இருக்கிறது'' என்று ஜாலியானார் அபிஷேக் பாட்.

கியரைத் தட்டி உறுமிக்கொண்டு பறந்தனர் சூப்பர் பைக்கர்ஸ்! 

  நா.சிபிச்சக்கரவர்த்தி    ப.சரவணக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு