தொழில்நுட்பம்
Published:Updated:

பழைய கார் - HONDA CITY

பழைய கார் - HONDA CITY

 ##~##

ழைய கார் மார்க்கெட்டில் எப்போதுமே டிமாண்ட் உள்ள கார் ஹோண்டா சிட்டி! காரணம் 'ஹோண்டா சிட்டி வாங்கி விட்டால் குறைந்தது 5 வருடங்களுக்குக் கவலைப்படத் தேவை இல்லை’ என்ற மன நிலைதான். மைலேஜ், இடவசதி, பர்ஃபாமென்ஸ், பில்டு குவாலிட்டி, மெயின்டனன்ஸ் செலவு என்று அனைத்திலுமே ஹோண்டா சிட்டி நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. 

நான்கு தலைமுறை சிட்டி!

முதன்முதலாக ஹோண்டா சிட்டி 1997-ம் ஆண்டு விற்பனைக்கு வந்தது. அதன்பிறகு 2003, 2005 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் அடுத்தடுத்த தலைமுறை புதிய சிட்டி கார்களை அறிமுகப்படுத்தியது ஹோண்டா. இதனால் தற்போது பழைய கார் மார்க்கெட்டில் நான்கு வகையான ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனையில் இருக்கின்றன.

பழைய கார் - HONDA CITY

1997-ம் ஆண்டு வெளிவந்த ஹோண்டா சிட்டியின் 1.5லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 2003-ம் ஆண்டு வெளிவந்த ஹோண்டா சிட்டியைவிட பவர்ஃபுல்லானது. ஆனால் முதல் ஹோண்டா சிட்டியைவிட இரண்டாவது தலைமுறை ஹோண்டா சிட்டியின் மைலேஜ் அதிகம். பெட்ரோல் இன்ஜினின் பிக்-அப் பிரமாதம் என்பதால் நகருக்குள் ஓட்டுவதற்கு சிறப்பாக இருக்கிறது. 5-ஸ்பீடு கியர் பாக்ஸில் குறை ஏதும் இல்லை. ஹோண்டா சிட்டியில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடலும் உண்டு. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸின் பர்ஃபாமென்ஸும் சிறப்பாகவே உள்ளது. 2005-ம் ஆண்டு வெளிவந்த ஹோண்டா சிட்டி இன்னும் பவர்ஃபுல்லான வி-டெக் இன்ஜினுடன் விற்பனைக்கு வந்தது. இதன் சக்தி 100தீலீஜீ. பர்ஃபாமென்ஸில் மட்டும் அல்ல; ஓட்டுதல் தரத்திலும் முன்னேற்றம் கண்டது மூன்றாவது தலைமுறை ஹோண்டா சிட்டி. கரடுமுரடான, மேடு பள்ளமான சாலைகளில் பயணிக்கும்போது அதிர்வுகளைக் காருக்குள் உணர முடியாது. இதனால் அலுங்கல், குலுங்கல் இல்லாத சுகமான பயணத்தை சிட்டியில் மேற்கொள்ளலாம். அதேபோல் நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்தில் பயணிக்கும்போதும் ஸ்டெபிளிட்டி சிறப்பாகவே இருக்கிறது.

ஸ்டீயரிங்கை வளைத்துத் திருப்பி ஓட்டுவது செம ஜாலியான எக்ஸர்சைஸாக அமைந்ததால், 'ஃபன் டு டிரைவ்’ ஏரியாவிலும் ஹோண்டா சிட்டி கில்லி. பிரேக்ஸ் ஓகே ரகம்தான்! காரணம், அதிக வேகத்தில் சட்டென பிரேக் அடித்தால் வீல் லாக் ஆகி ஸ்கிட் ஆகும் வாய்ப்புகள் ஹோண்டா சிட்டியில் அதிகம். அதனால் காரை வாங்கும்முன் டயர்களும், பிரேக்ஸும் சரியான கண்டிஷனில் இருக்கிறதா என்று சோதித்துப் பாருங்கள்.

பழைய கார் - HONDA CITY

பவர் ஸ்டீயரிங் பிரச்னை

ஹோண்டா சிட்டியைப் பொருத்த வரை குறைகள் மிகவும் குறைவு. அதனால் காரைச் சோதித்துப் பார்க்க நீண்ட நேரம் தேவைப்படாது. ஆனால் ஹோண்டா சிட்டியில் தொடர்ந்து குறையாகச் சொல்லப்பட்டு வருவது இதன் பவர் ஸ்டீயரிங்தான். தண்ணீர் ஸ்டீயரிங்கிற்குள் புகுந்து பவர் ஸ்டீயரிங் சிஸ்டம் வேலை செய்யாமல் போவதாகச் சொல்லப்படுகிறது. பவர் ஸ்டீயரிங் வேலை செய்யாமல் போனால் இதை மாற்றுவதற்கு மட்டும் 48 ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதேபோல் முதலில் வெளிவந்த ஹோண்டா சிட்டி கார்களில் பவர் விண்டோக்களும் வேலை செய்யாமல் போகும் பிரச்னைகள் உண்டு. அதனால் 1997-2003 ஆம் ஆண்டு மாடல் வாங்கும்போது பவர் விண்டோக்களும் சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டியது அவசியம்.

பழைய கார் - HONDA CITY

பராமரிப்புச் செலவுகள்

மைலேஜைப் பொருத்தவரை ஹோண்டா சிட்டி வாங்கிவிட்டால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. பழைய மாடல் வீஞிஷிமி பெட்ரோல் இன்ஜின் நகருக்குள் லிட்டருக்கு 10.9 கி.மீ-யும், நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு 16.6 கி.மீ-யும் மைலேஜ் தருகிறது. வி-டெக் இன்ஜினும் நகருக்குள் லிட்டருக்கு 10.5 கி.மீ-யும், நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு 16.3 கி.மீ-யும் மைலேஜ் தருகிறது.

ஒவ்வொரு பத்தாயிரம் கி.மீ-க்கும் ஒரு முறை இன்ஜின் ஆயில் மற்றும் ஃபில்டரை மாற்ற வேண்டும். இதற்கு முறையே ஆயிரம் ரூபாயும், 200 ரூபாயும் செலவாகும். பிரேக் பேடுகளின் விலை 3250 ரூபாய். ஃப்யூல் பம்ப்புகளில் பிரச்சனை ஏற்பட்டால், இதை மாற்ற 16.175 ரூபாய் செலவாகும்.

இருபதாயிரம் கி.மீ அல்லது வருடத்துக்கு ஒரு முறை ஏர் ஃபில்டரை மாற்ற வேண்டும். இதற்கு 390 ரூபாய் செலவாகும். சஸ்பென்ஷன் முழுவதையும் சரிபார்க்க வேண்டும் என்றால் 30 ஆயிரம் ரூபாய் செலவாகும். கியர் பாக்ஸ் அசெம்பிள் செய்ய 50 ஆயிரம் ரூபாயும், கிளட்ச் அசெம்பிளிக்கு 7,500 ரூபாயும் செலவாகும்.

பராமரிப்புச் செலவுகளைப் பொருத்த வரை தொடர்ந்து சர்வீஸ் செய்து வந்தால் எந்தப் பிரச்சனையும் இருக்காது. ஒரே நேரத்தில் பல பிரச்சனைகளுடன் போய் நின்றால், சர்வீஸ் செலவுகளால் ஹோண்டா நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும்!

சார்லஸ்