Published:Updated:

விடாமல் துரத்தும் டுகாட்டி!

உயிர்த்தெழுந்த கவாஸாகி!

பிரீமியம் ஸ்டோரி
 ##~##

மீண்டும் உயிர்த்தெழுந்திருக்கிறது கவாஸாகி! கடந்த சில ஆண்டுகளாக வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸில் கடைசி இடங்களுக்கு ஓரங்கட்டப்பட்ட கவாஸாகிக்கு, இந்த ஆண்டு உற்சாகமான ஆண்டாக அமைந்திருக்கிறது. ஆனால், என்னதான் கவாஸாகி புயல் வேகம் காட்டினாலும், டுகாட்டி மின்னல் வேகம் காட்டுகிறது. 

வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் - இமோலா

இத்தாலி நாட்டில் உள்ள இமோலா நகரில், வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் பந்தயத்தின் இரண்டாவது சுற்று நடைபெற்றது. டுகாட்டியின் சொந்த ஊர் மைதானம் என்பதால், இமோலாவில் எப்போதுமே டுகாட்டிதான் வெற்றிக் கொடி நாட்டும். ஆனால், இந்த ஆண்டு டுகாட்டி பைக்கின் எடை 6 கிலோ கூடியிருப்பதால், பைக்கின் டயர் சீக்கிரம் தேயும் என்பதோடு, வேகமும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் தகுதிச் சுற்றுப் போட்டியில் முதலிடம் பிடித்து, ரேஸை முதலிடத்தில் இருந்து துவக்கத் தகுதி பெற்றார் கவாஸாகி அணியின் டாம் சைக்ஸ். லிபர்ட்டி ரேஸிங் அணியின் குண்ட்டோலி இரண்டாவது இடத்தில் இருந்தும், டுகாட்டியின் கார்லோஸ் செக்கா மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். சூப்பர் பைக் ரேஸின் முன்னாள் சாம்பியன் மேக்ஸ் பியாஜி ஐந்தாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார்.

விடாமல் துரத்தும் டுகாட்டி!

ரேஸ்-1

முதலிடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய டாம் சைக்ஸின் கவாஸாகி வேகத்துக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியவில்லை. மொத்தம் 21 லேப்புகள் கொண்ட இந்த ரேஸ் போட்டியின் 15-வது லேப் வரை முதலிடத்தில் பறந்து கொண்டிருந்தார் டாம் சைக்ஸ். ஆரம்பத்தில் இருந்தே சைக்ஸை விடாமல் துரத்திய கார்லோஸ் செக்காவின் டுகாட்டி, 16-வது லேப்பில் கவாஸாகியை முந்தியது. கவாஸாகியின் வேகம் குறைந்ததற்குக் காரணம், மிகச் சீக்கிரத்தில் டயர்கள் தேய்ந்ததுதான். இது டுகாட்டிக்குச் சாதகமாக அமைய... பைக்கை விரட்டு விரட்டு என விரட்டினார் டுகாட்டியின் கார்லோஸ் செக்கா. இறுதியில் கார்லோஸ் செக்கா முதலிடம் பிடித்து வெற்றி பெற, டாம் சைக்ஸ் இரண்டாவது இடத்தையும், பிஎம்டபிள்யூ அணியின் லியான் ஹஸ்லாம் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

விடாமல் துரத்தும் டுகாட்டி!

ரேஸ்-2

முதல் ரேஸின் மறு ஒளிபரப்பு போல இருந்தது ரேஸ்-2. வழக்கம் போல முதலிடத்தில் சென்று கொண்டிருந்த டாம் சைக்ஸை, ரேஸின் பிற்பாதியில் முந்திச் சென்று முதலிடத்துக்கு முன்னேறினார் கார்லோஸ் செக்கா. முதல் ரேஸைப் போலவே செக்கா முதலிடம் பிடித்து வெற்றி பெற, சைக்ஸ் இரண்டாவது இடமும், லியான் ஹஸ்லாம் மூன்றாவது இடமும் பிடித்தனர்.

விடாமல் துரத்தும் டுகாட்டி!
விடாமல் துரத்தும் டுகாட்டி!

மேக்ஸ் பியாஜி இரண்டு ரேஸ்களிலும் நான்காவது இடத்தைப் பிடித்தார். முதல் ரேஸில் பாதியில் விலகிய சுஸ¨கி அணியின் லியான் கேமியர், இரண்டாவது ரேஸில் எட்டாவது இடம் பிடித்தார்.

இதன் மூலம் இமோலாவில் தான்தான் கில்லி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது டுகாட்டி. ஆனால், வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸில் வேகம் காட்டும் டுகாட்டி, மோட்டோ ஜீபியில் சொதப்புவதால், கடுப்பில் இருக்கிறார் வாலன்டினோ ராஸி!

-சுரேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு